விஜய் தொலைக்காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விஜய் தொலைக்காட்சி
STAR Vijay.jpg
ஒளிபரப்பு தொடக்கம் 1994
வலையமைப்பு ஸ்டார் தொலைக்காட்சி குழுமம்
உரிமையாளர் ஸ்டார் குழுமம்
பட வடிவம் 576i மற்றும் 1080i
நாடு  இந்தியா
ஒளிபரப்பாகும் நாடுகள் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், வியட்நாம், ஜப்பான், கனடா, ஃகொங்கொங் and அமெரிக்க ஐக்கிய நாடு
துணை அலைவரிசை(கள்) ஸ்டார் அனந்தா
ஸ்டார் பிளஸ்
வலைத்தளம் Official Site
கிடைக்ககூடிய தன்மை
செயற்கைக்கோள்
ஏர்டெல் டிஜிட்டல் டிவி (இந்தியா) சானல் 758
Big TV (இந்தியா) சானல் 803
டிஷ் டிவி (இந்தியா) சானல் 914
சன் டைரக்ட் (இந்தியா) சானல் 124
டாட்டா ஸ்கை (இந்தியா) சானல் 807
டயலாக் டிவி
(இலங்கை)
சானல் 52
டயரக்டிவி (அமெரிக்க ஐக்கிய நாடு) சானல் 2004
வியட்பவோ சியேடிவி (வியட்நாம்) சானல் 37
மின் இணைப்பான்
றொகெர்சு கேபிள் (கனடா) சானல் 864
ஸ்டார்ஹப் டிவி (சிங்கப்பூர்) சானல் 135
IPTV
னவ் டிவி
(ஃகொங்கொங்)
சானல் 798
வேர்ல்ட் ஆன் டிமாண்ட் (ஜப்பான்) சானல் 731

ஸ்டார் விஜய் (பொதுவாக விஜய் தொலைக்காட்சி என அழைக்கப்படும்) என்பது தமிழில் ஒளிபரப்பாகும் ஒரு இந்திய பொழுதுபோக்கு ஒளியலைவரிசை ஆகும். இது இந்தியா முழுவதும் ஒளிபரப்பப்படுவதோடு மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளிலும் ஒளிபரப்பப்படுகிறது.

21ஸ்ட் செஞ்சுரி ஃபாக்ஸ்- ன் உரிமையாளராகிய ரூப்பர்ட் மர்டாக், ஸ்டார் தொலைக்காட்சி மற்றும் ஃபாக்ஸ் சர்வதேச சேனல்கள் மூலம் இத்தொலைக்காட்சியை தற்போது நிறுவாகித்து வருகிறார்.

இத்தொலைக்காட்சி 1994-ஆம் ஆண்டு நா. பா. வா ராமஸ்வாமி உடையாரால் விஜய் தொலைக்காட்சி என்னும் பெயரில் நிறுவப்பட்டது. பின்னர் இத்தொலைக்காட்சி நிறுவனம் விஜய் மல்லாயா மற்றும் ஃபாக்ஸ் சர்வதேச சேனல்கள் எனக் கைமாறி 2001-ஆம் ஆண்டு ரூபர்ட் முர்டோக்கின் ஸ்டார் நிறுவனத்தால் வாங்கப் பட்டு ஸ்டார் விஜய் என பெயர் மாற்றப்பட்டது.

நிகழ்ச்சிகள்[தொகு]

விஜய் தொலைக்காட்சியில் பல பிரபலமான நெடுந்தொடர்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப் படுகின்றன. 2015 ஆவது ஆண்டில் நடைபெறும் பதினொன்றாவது உலகக் கோப்பை துடுப்பாட்ட போட்டிகள் தமிழ் மொழி வர்ணனையுடன் நேரலையாக ஒளிபரப்பாகி வருகிறது.

நிகழ்ச்சிகளின் பட்டியல்[தொகு]

கீழே விஜய் தொலைக்காட்சியில் வெளியாகும் நிகழ்ச்சிகள் அவற்றின் தரவரிசையின்படி பட்டியலிடப்பட்டுள்ளன.

தரவரிசை ஆண்டு நிகழ்ச்சி நிலைமை அத்தியாயங்கள் எண்ணிக்கை
1 2010 – ஆரம்பம் உறவுகள் தொடர் கதை On-Air 750+
2 2011 – ஆரம்பம் சரவணன் மீனாட்சி On-Air 550+
3 2012 – ஆரம்பம் சிவம் On-Air 330+
4 2012 – ஆரம்பம் தெய்வம் தந்த தங்கை On-Air 290+
5 2012 – ஆரம்பம் என் கணவன் என் தோழன் On-Air 290+
6 2013 – ஆரம்பம் ஆபிஸ் On-Air 200+
7 2013 – ஆரம்பம் தெய்வம் தந்த வீடு On-Air 100+
8 2013 – ஆரம்பம் தாயுமானவன் On-Air 100+

விருதுகள்[தொகு]

ஆண்டுதோறும் தமிழ் திரைப்படங்களில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தும் நபர்களுக்கு விஜய் விருதுகள் என்னும் தலைப்பில் 2006 ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு ஒரு முறை விருதுகள் வழங்கப்படுகின்றன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜய்_தொலைக்காட்சி&oldid=2511285" இருந்து மீள்விக்கப்பட்டது