புதிய தலைமுறை (தொலைக்காட்சி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
புதிய தலைமுறை (தொலைக்காட்சி)
Puthiya Thalaimurai TV Logo.jpg
உண்மை உடனுக்குடன்
ஒளிபரப்பு ஆரம்பம் 24 ஆகத்து 2011
உரிமையாளர் நியூ ஜெனரேசன் மீடியா கார்ப்பரேசன் பிரைவேட் லிட்
நாடு இந்தியா
மொழி தமிழ்
தலைமையகம் சென்னை, தமிழ்நாடு
வலைத்தளம் www.puthiyathalaimurai.tv

புதிய தலைமுறை தொலைக்காட்சி என்பது தமிழில் இயங்கும் தொலைக்காட்சி ஆகும். இது 24X7 நேரலை செய்திகள் ஒளிபரப்பை கடந்த 2011-ம் ஆண்டு, ஆகஸ்ட் 24-ம் தேதி துவக்கியது. செய்திப் பிரிவு சுதந்திரமாக செயல்படுவதால் புதிய தலைமுறை தொலைக்காட்சி குறுகிய காலத்தில் பரவலான வாசகர்களைச் சென்றடைந்தது. இது சிக்கல்களை இயல்பான மனிதரின் கண்ணோட்டத்தில் அணுகுவதோடு, அவர்களது கருத்துக்களை தெரிவிக்கவும் பொருந்திய தளமாக உள்ளது. தனி நபர், கொள்கை, குழு, அரசு மற்றும் நிறுவனங்கள் என யாருக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ செய்திகளை வெளியிடுவதில்லை என்கின்ற வலிமையான நெறிமுறைகளையும் கோட்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டு செய்திப் பிரிவு கட்டமைக்கப்பட்டுள்ளது.

நோக்கம்[தொகு]

பாரபட்சமில்லாமல் சமூகக் கண்ணோட்டத்தடன் துல்லியமாக செய்திகளை தர வேண்டும் என்பது புதிய தலைமுறை தொலைக்காட்சியின் முதன்மையான நோக்கமாகும். இது மட்டுமல்லாமல் நடப்புச் செய்திகளை நேரடியாக ஒளிபரப்பு செய்வதோடு விளையாட்டு, வணிகம், மற்றும் உலகச் செய்திகளையும் வழங்கி வருகிறது. மேலும் வார இறுதி நாட்களில் சமூக அக்கறையுடன் கூடிய பல்வேறு நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகிறது.

நிறுவனம்[தொகு]

சென்னையை மையமாகக் கொண்ட நியூ ஜெனரேஷன் மீடியா கார்ப்பரேஷன் நிறுவனம் புதிய தலைமுறை தொலைக்காட்சியை நடத்தி வருகின்றது. இந்நிறுவனம், புதிய தலைமுறை மற்றும் புதிய தலைமுறை கல்வி ஆகிய இரண்டு தமிழ் இதழ்களையும் வெளியிடுகிறது.

செய்திக்குழு[தொகு]

இந்த நிறுவனத்திற்கு தமிழகம் முழுவதும் செய்தியாளர்கள் உள்ளனர். வட மாநிலச் செய்திகளை வழங்குவதற்கான மையம் டெல்லியில் உள்ளது. செய்திகளை சேகரித்து, தொகுத்து வழங்கும் வகையில் பயிற்சி பெற்ற செய்தியாளர்களையும் தொழில்நுட்ப வசதிகளையும் புதிய தலைமுறை கொண்டிருக்கிறது.

அன்றாட நிகழ்ச்சிகள்[தொகு]

 • புதிய விடியல் [1]
 • புதுப் புது அர்த்தங்கள் [2]
 • வணிகம்[3]
 • ஓடி விளையாடு[4]
 • கற்க கசடற[5]
 • உங்கள் ஊர் உங்கள் குரல்[6]
 • இன்றைய தினம்[7]
 • நேர்படப்பேசு[8]
 • நாளைய நாளிதழ்
 • விரைவு செய்திகள்

வார நிகழ்ச்சிகள்[தொகு]

 • ரௌத்திரம் பழகு [9]
 • அக்னி பரிட்சை[10]
 • களம் இறங்கியவர்கள்[11]
 • ஆயுதம் செய்வோம்[12]
 • நண்பர்கள்[13]
 • சினிமா 360 டிகிரி[14]

இதழ்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]