தேவர் தொலைக்காட்சி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தேவர் தொலைக்காட்சி | |
---|---|
ஒளிபரப்பு தொடக்கம் | 2009 |
வலையமைப்பு | தேவர் தொலைக்காட்சி குழுமம் |
உரிமையாளர் | ஏனாதி அ.பூங்கதிர்வேல் |
நாடு | ![]() |
வலைத்தளம் | Official Site |
தேவர் தொலைக்காட்சி (பொதுவாக தேவர் டிவி என அழைக்கப்படும்) தமிழில் ஒளிபரப்பாகும் ஒரு இந்திய பொழுதுபோக்கு மற்றும் செய்திகள் வழங்கும் இணையதள தொலைக்காட்சி ஆகும். செயற்கைக்கோள் ஒளிபரப்புக்கு இணையான தரத்தில் செய்திகள் மற்றும் காணொளிகள் பதியப்படுகின்றன.
திலகம் தகவல் தொழில்நுட்பத்தின் உரிமையாளராகிய ஏனாதி அ.பூங்கதிர்வேல், தேவர் தொலைக்காட்சியை இணையதளம் மூலம் தற்போது நிறுவாகித்து வருகிறார்.
இத்தொலைக்காட்சி 2009ஆம் ஆண்டு தேசிய தமிழ் தொலைக்காட்சி எனும் பெயரில் நிறுவப்பட்டது. பின்னர் இத்தொலைக்காட்சி 2010ஆம் ஆண்டு தேவர் தொலைக்காட்சி என பெயர் மாற்றப்பட்டது.
செயற்கைக்கோள் ஒளிபரப்பு[தொகு]
தேவர் தொலைக்காட்சி செயற்கைக்கோள் ஒளிபரப்பிற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 2013 ஜனவரி 23 ஆம் தேதி பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் சன்னதியில் பல்வேறு தலைவர்கள் மற்றும் தேவர் தொலைக்காட்சி இணையத்தள பார்வையாளர்கள் முன்னிலையில் பூஜைவிழா நடைபெற்றது.
நிகழ்ச்சிகள்[தொகு]
தேவர் தொலைக்காட்சியில் பல தலைவர்களின் நேர்காணல்களும் பல்வேறு நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பப் படுகின்றன. தமிழ்நாட்டில் நடைபெறும் பல்வேறு முக்கிய அரசியல் நிகழ்வுகள் நேரலையாக ஒளிபரப்பப்படும்.