ஜீ தமிழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜீ தமிழ்
ஜீ தமிழ் சின்னம்
உரிமையாளர் ஜீ என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம்
தலைமையகம் சென்னை, தமிழ்நாடு, இந்தியா
கிடைக்ககூடிய தன்மை
செயற்கைக்கோள்
டிஷ் டிவி (இந்தியா) அலைவரிசை 910
டிடி டைரக்ட்+ (இந்தியா) அலைவரிசை 111

ஜீ தமிழ் (ஆங்கிலம்: Zee Tamil) தொலைக்காட்சி என்பது ஜீ என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தால் 2004 அக்டோபர் 12 அன்று ஆரம்பிக்கப்பட்ட தமிழ் அலைவரிசை ஆகும். ஜீ தமிழ் தொலைக்காட்சி சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகின்றது. தமிழ்நாட்டில் 14 மில்லியன் அளவிலான மக்களால் பார்க்கப்படும் தொலைக்காட்சியாக ஜீ தமிழ் தொலைக்காட்சி விளங்கி வருகின்றது. ஜீ தமிழ் தொலைக்காட்சியை, செயற்கைக்கோள்கள் ஊடாக உலகமெங்கும் பார்க்கக் கூடியதாக உள்ளது.

நிகழ்ச்சிகள்[தொகு]

இனிய இரு மலர்கள், அழகிய தமிழ்மகள், யாரடி நீ மோகினி, பூவே பூச்சூடவா, லட்சுமி வந்தாச்சு, மெல்லத்திறந்தது கதவு போன்ற தொடர்களும சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியும் ஒளிபரப்பாகி வருகிறது,

ஜான்சி ராணி... ஒரு வீரப்பெண்ணின் கதை, சின்ன மருமகள், ராதா கல்யாணம், நானும் ஒரு பெண், அஞ்சறைப் பெட்டி, காயத்ரி, ஒரு கை ஓசை, ஜோதா அக்பர், காதலுக்கு சலாம், புகுந்த வீடு, உயிர்மெய் முதலியவை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிரபலமான தொடர்களாகும்.

தரவரிசை ஆண்டு நிகழ்ச்சி அத்தியாயங்கள் எண்ணிக்கை குறிப்புகள்
1 12 அக்டோபர் 2008 – ஆரம்பம் அஞ்சறைப்பெட்டி 1500+ இந்த நிகழ்ச்சி திங்கள் முதல் சனி வரை பிற்பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பப்படுகின்றது. தமிழ்நாட்டின் உணவு வகைகளைப் பற்றி விளக்கும் நிகழ்ச்சியாக அமைந்துள்ளது. சமீபத்தில் இந்த நிகழ்ச்சி 1000 அத்தியாயங்களைக் கடந்துள்ளது.[1]
2 21 ஜனவரி 2010 – ஆரம்பம் ஒளிமயமான எதிர்காலம் 1400+ இந்த நிகழ்ச்சி அனைத்து நாட்களிலும் காலை 7 மணிக்கு ஒளிபரப்பப்படுகின்றது.
3 20 ஏப்ரல் 2011 – ஆரம்பம் சொல்வதெல்லாம் உண்மை 750+ இந்த நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணியிலிருந்து 9.30 மணி வரை ஒளிபரப்பப்படுகின்றது. இந்த நிகழ்ச்சி பொது மக்களின் உண்மையான வாழ்க்கைப் பிரச்சினைகளைப் பற்றியது. தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் இந்த நிகழ்ச்சியின் மூலம் தீர்க்கப்பட்டிருக்கின்றன. இந்த நிகழ்ச்சியை நடிகை மற்றும் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார்.[2]
4 25 மே 2009 – ஆரம்பம் டாப் 10 1100+ இந்த நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10.30 மணியிலிருந்து 11 மணி வரை ஒளிபரப்பப்படுகின்றது. தமிழ்நாடு, இந்தியா, உலகம், விளையாட்டுக்கள், பொழுதுபோக்கு என்பன பற்றிய 50 சுவாரசியமான தகவல்களை இந்த நிகழ்ச்சி 30 நிமிடங்களில் தருகின்றது.[3]
5 டிசம்பர் 2010 - ஆரம்பம் ஹோம் மினிஸ்டர் 400+ இந்த நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பப்படுகின்றது. இந்த நிகழ்ச்சி முற்றிலும் பெண்களுக்கான நிகழ்ச்சி ஆகும்.


ஜான்சி ராணி... ஒரு வீரப்பெண்ணின் கதை[தொகு]

இந்தத் தொலைக்காட்சித் தொடர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 8.30 மணியிலிருந்து 9.00 மணி வரை ஒளிபரப்பப்படுகின்றது.[4] இது ஜான்சி கி ராணி என்ற ஹிந்தி மொழியிலமைந்த தொலைக்காட்சித் தொடரின் தமிழ் வடிவமாகும். இந்தத் தொடர் 2012ஆம் ஆண்டு சனவரி மாதம் 27ஆம் திகதியுடன் முழுமையாக ஒளிபரப்பப்பட்டு முடிந்திருந்தாலும் 2012ஆம் ஆண்டு சனவரி 30ஆம் திகதி முதல் 50 நாட்களில் முடியுமாறு சிறப்புத் தொகுப்பாக இந்தத் தொடரை ஜீ தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது.[5] இது ராணி லட்சுமிபாய் பற்றிய ஒரு வரலாற்றுத் தொடர் ஆகும். ராணியின் சிறு வயதிலிருந்து அவரின் இறப்பு வரையான நிகழ்வுகளை இந்தத் தொடர் மையமாகக் கொண்டுள்ளது.[6]

சின்ன மருமகள்[தொகு]

இந்தத் தொலைக்காட்சித் தொடர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 7.30 மணியிலிருந்து 8.00 மணி வரை ஒளிபரப்பப்படுகின்றது. இது சோட்டி பஹூ என்ற ஹிந்தி மொழியிலமைந்த தொலைக்காட்சித் தொடரின் தமிழ் வடிவமாகும். இந்தப் பெயர் குறிப்பிடுவது போல ஒரு குடும்பத்தின் சின்ன மருமகளை மையமாக வைத்துக் கதை நகர்கின்றது.[7]

காதலுக்கு சலாம்[தொகு]

காதலுக்கு சலாம் இது ஒரு இந்தி டப்பிங் தொடர். இந்த தொடர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் (திங்கள் முதல் வெள்ளி வரை) மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

ராதா கல்யாணம்[தொகு]

இந்தத் தொலைக்காட்சித் தொடர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 8.00 மணியிலிருந்து 8.30 மணி வரை ஒளிபரப்பப்படுகின்றது. இந்தத் தொடர் ராதா, கீர்த்தி என்ற இரண்டு பெண்களைப் பற்றியதாகும்.[8]

நானும் ஒரு பெண்[தொகு]

இந்தத் தொலைக்காட்சித் தொடர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 7.00 மணியிலிருந்து 7.30 மணி வரை ஒளிபரப்பப்படுகின்றது. சங்கீதா என்ற பெண்ணைப் பற்றிய கதையே இதுவாகும்.[9]

அஞ்சறை பெட்டி[தொகு]

இந்த நிகழ்ச்சி அனைத்து நாட்களிலும் பிற்பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பப்படுகின்றது. தமிழ்நாட்டின் உணவு வகைகளைப் பற்றி விளக்கும் நிகழ்ச்சியாக அமைந்துள்ளது. சமீபத்தில் இந்த நிகழ்ச்சி 600 அத்தியாயங்களைக் கடந்துள்ளது.[10]

டாப் 10[தொகு]

இந்த நிகழ்ச்சி அனைத்து நாட்களிலும் பிற்பகல் 10.30 மணிக்கு ஒளிபரப்பப்படுகின்றது. தமிழ்நாடு, இந்தியா, உலகம், விளையாட்டுக்கள், பொழுதுபோக்கு என்பன பற்றிய 50 சுவாரசியமான தகவல்களை இந்த நிகழ்ச்சி 30 நிமிடங்களில் தருகின்றது.[11]

சொல்வதெல்லாம் உண்மை[தொகு]

இந்த நிகழ்ச்சி அனைத்து நாட்களிலும் இரவு 8.30 மணியிலிருந்து 9.30 மணி வரை ஒளிபரப்பப்படுகின்றது. இந்த நிகழ்ச்சி பொது மக்களின் உண்மையான வாழ்க்கைப் பிரச்சினைகளைப் பற்றியது. தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் இந்த நிகழ்ச்சியின் மூலம் தீர்க்கப்பட்டிருக்கின்றன.[12]

ஞாயிறு பட்டிமன்றம்[தொகு]

இந்த நிகழ்ச்சி ஞாயிற்றுக் கிழமைகள் தோறும் முற்பகல் 10.00 மணியிலிருந்து 11.30 மணி வரை ஒளிபரப்பப்படுகின்றது.[13]

ஏனைய நிகழ்ச்சிகள்[தொகு]

மேலும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில்,

 • வீர சிவாஜி[14]
 • பட்டாம்பூச்சி[15]
 • தாமரை[16]
 • ராசி[17]
 • மூன்று முகம்[18]
 • டான்ஸ் இந்தியா டான்ஸ்[19]
 • மேற்கு மாம்பலத்தில் ஒரு காதல்[20]
 • ஸ்ரீ கணேசா
 • மஹாபாரதம்
 • சினி ரீல்
 • ஒளிமயமான எதிர்காலம்
 • நம்பினால் நம்புங்கள்
 • யோகா குரு பாபாராம்தேவ்
 • டெலிஷாப்பிங்
 • என்ஜாயிங் எவரிடே லைப்
 • வரம் தருவாய் இறைவா
 • அம்மன் தரிசனம்
 • விஷ்ணுபுராணம்
 • பக்தி சங்கமம்
 • ஃப்ரீ டிக்கெட்
 • இயற்கை மருத்துவம்
 • உங்கள் நேரம்
 • பகவத் கீதா
 • தேவி
 • அன்பரின் ஆறுதல்
 • ஸ்மைல் பிளீஸ்
 • சந்தோச நேரம்

முதலிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன.[21]

மேற்கோள்கள்[தொகு]

 1. அஞ்சறை பெட்டி (ஆங்கிலத்தில்)
 2. சொல்வதெல்லாம் உண்மை மக்களின் மனசாட்சி (ஆங்கிலத்தில்)
 3. டாப் 10 (ஆங்கிலத்தில்)
 4. ஜான்சி ராணி ஒரு வீரப்பெண்ணின் கதை (தமிழில்)
 5. டெலிவிஷன் விருந்து (தமிழில்)
 6. ஜான்சி ராணி (ஆங்கிலத்தில்)
 7. சின்ன மருமகள் (ஆங்கிலத்தில்)
 8. ராதா கல்யாணம் (ஆங்கிலத்தில்)
 9. நானும் ஒரு பெண் சங்கீதாவின் பயணம் (ஆங்கிலத்தில்)
 10. அஞ்சறை பெட்டி (ஆங்கிலத்தில்)
 11. டாப் 10 (ஆங்கிலத்தில்)
 12. சொல்வதெல்லாம் உண்மை மக்களின் மனசாட்சி (ஆங்கிலத்தில்)
 13. ஞாயிறு பட்டிமன்றம் (தமிழில்)
 14. வீர சிவாஜி (ஆங்கிலத்தில்)
 15. பட்டாம்பூச்சி (ஆங்கிலத்தில்)
 16. தாமரை (ஆங்கிலத்தில்)
 17. ராசி (ஆங்கிலத்தில்)
 18. மூன்று முகம் (ஆங்கிலத்தில்)
 19. டான்ஸ் இந்தியா டான்ஸ் (ஆங்கிலத்தில்)
 20. மேற்கு மாம்பலத்தில் ஒரு காதல் (ஆங்கிலத்தில்)
 21. ஜீ தமிழ் (ஆங்கிலத்தில்)

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜீ_தமிழ்&oldid=2493052" இருந்து மீள்விக்கப்பட்டது