ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ்
வகைபொதுப் பங்கு நிறுவனம்
நிறுவுகை15 திசம்பர் 1991; 31 ஆண்டுகள் முன்னர் (1991-12-15)
நிறுவனர்(கள்)சுபாசு சந்திரா
தலைமையகம்மும்பை, மகாராட்டிரம், இந்தியா
சேவை வழங்கும் பகுதிஉலகளவில்
முக்கிய நபர்கள்சுபாசு சந்திரா (தலைவர்)
புனித் கோயங்கா (தலைமை நிர்வாக அதிகாரி)[1]
தொழில்துறைமக்கள் ஊடகம்
உற்பத்திகள்ஒலிபரப்பு, பதிப்பகம், கம்பி வடத் தொலைக்காட்சி, திரைப்படத் தயாரிப்பு
வருமானம்
  • 6,020 கோடி (US$750 மில்லியன்) (2016)
நிகர வருமானம்
  • 1,028 கோடி (US$130 மில்லியன்) (2016)
பணியாளர்13,826 (2016)
தாய் நிறுவனம்எசெல் குழு
இணையத்தளம்www.zeeentertainment.com

ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் அல்லது ஜீ குழுமம் எசெல் குழுமத்திற்கு சொந்தமான ஒரு இந்திய மக்கள் ஊடக நிறுவனம் ஆகும். இவ் நிறுவனம் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு 15 திசம்பர் 1991 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தொலைக்காட்சி, பதிப்பகம், இணையம், திரைப்படத் தயாரிப்பு, கைபேசி போன்ற வணிகங்களில் ஆர்வங்களைக் கொண்டுள்ளது.

வரலாறு[தொகு]

இந்த நிறுவனம் டிசம்பர் 15, 1991 இல் ஜீ டெலி பில்ம்ஸ் என்ற பெயரில் தொடங்கப்பட்டடு 2006 ஆம் ஆண்டு வரை இயக்கப்பட்டது. 2002 ஆம் ஆண்டில் ஈடிசி நெட்வொர்க் என்ற நிறுவனம் பெரும்பான்மை பங்குகளை (51%) வாங்கியது. நவம்பர் 2006 இல், டென் ஸ்போர்ட்ஸின் உரிமையாளரான தாஜ் தொலைக்காட்சியில் 50% பங்குகளை வாங்கி அதே ஆண்டில் ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் நிறுவனம் என மறுபெயரிடப்பட்டது. பிப்ரவரி 2010 இல், இந்த வணிகம் டென் ஸ்போர்ட்ஸில் கூடுதல் பங்குகளை (95%) வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

2008 ஆம் ஆண்டில் ஜீ மோஷன் பிக்சர்ஸ் மற்றும் ஜீ லைம்லைட் (இப்போது ஜீ ஸ்டுடியோஸ்) போன்ற திரைப்பட நிறுவனங்களை ஆரம்பித்து தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மராத்தி, பெங்காலி, ஓடியா மற்றும் மலையாளம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் முக்கிய திரைப்படங்களை தயாரித்து, வெளியிட்டு மற்றும் விநியோகம் செய்து வருகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]