கமல்ஹாசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கமல்ஹாசன்
Kamal Haasan at Promotions of 'Vishwaroop' with Videocon (03).jpg
விஸ்வரூபம் திரைப்பட வெளியீட்டு விழாவில்
இயற் பெயர் பார்த்தசாரதி
பிறப்பு நவம்பர் 7, 1954 (1954-11-07) (அகவை 64)
பரமக்குடி,இராமநாதபுரம், தமிழ்நாடு, இந்தியா
தொழில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், பின்னணிப் பாடகர், அரசியல்வாதி
நடிப்புக் காலம் 1960-தற்போது
துணைவர் வாணி கணபதி (தி. 1978–1985) «start: (1978)–end+1: (1986)»"Marriage: வாணி கணபதி to கமல்ஹாசன்" Location: (linkback://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D)

சரிகா (தி. 1988–2004) «start: (1988)–end+1: (2005)»"Marriage: சரிகா to கமல்ஹாசன்" Location: (linkback://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D)

பிள்ளைகள் சுருதி ஹாசன் (பி.1986)
அக்சரா ஹாசன் (பி.1991)
பெற்றோர் சீனிவாசன்
ராஜலட்சுமி சீனிவாசன்
உறவினர் சந்திரஹாசன் (சகோதரர்), சாருஹாசன் (சகோதரர்)

பார்த்தசாரதி சீனிவாசன் (பிறப்பு: நவம்பர் 7, 1954)[1][2] என்ற இயற்பெயரைக் கொண்ட கமல்ஹாசன் ஒரு புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். இவரின் மாறுபட்ட வேடங்களைக் கொண்ட நடிப்பிற்காக பரவலாக அறியப்படுகிறார்.[3][4][5] கமல்ஹாசன் 4 தேசிய விருதுகள், 19 பிலிம்பேர் விருதுகள் உள்ளடங்கலாக பல இந்திய விருதுகளை வென்றுள்ளார், இவர் சிறந்த பிறமொழிப்படத்திற்கான அகாதமி விருதிற்கு இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களில் அதிகமானவற்றிலும் நடித்திருந்தார்.[6] நடிகராக மட்டுமல்லாது திரைக்கதையாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், நடன அமைப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவராக விளங்குகின்றார்.[7] இந்திய திரைத்துறைக்கு ஆற்றிய பணிக்காக பத்ம பூசண், பத்மசிறீ விருதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.[8] அத்துடன் சத்தியபாமா பல்கலைக்கழகம் கமல்ஹாசனிற்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்தது.[9] 2009 இல் 50 ஆண்டுகளை திரைத்துறையில் நிறைவுசெய்த இந்திய நடிகர்கள் மிகச்சிலரில் ஒருவரானார்.[10]

இவரின் திரைத்துறை வாழ்க்கையானது 1960 ஆம் ஆண்டில் தமிழில் வெளிவந்த களத்தூர் கண்ணம்மா எனும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக ஆரம்பித்தது. இந்தத் திரைப்ப்டத்தில் நடித்தற்காக ஜனாதிபதிவிருது பெற்றார். இவர் அடிக்கடி வாரணம் விஜய் எனும் இயக்குநரைச் சந்திப்பார். அவர் கமல்ஹாசனின் நடிப்பில் சில திருத்தங்களைச் செய்வார். 1975 ஆம் ஆண்டில் கைலாசம் பாலசந்தரின் இயக்கத்தில் வெளிவந்த அபூர்வ ராகங்கள் எனும் திரைப்படத்தில் தான் முதன் முதாலாக முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தார். இதில் தன்னை விட வயது அதிகமான ஒரு பெண்ணைக் காதல் செய்யும் ஒரு இளைஞனாக நடித்திருப்பார். 1983 ஆம் ஆண்டில்

இயக்குநர் (திரைப்படம்) பாலு மகேந்திரா இயக்கிய மூன்றாம் பிறை திரைப்படத்தில் நடித்தார். இதில் மறதிநோய் வேடத்தில் ஸ்ரீதேவி நடித்திருப்பார். இந்தப் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான இந்திய தேசிய விருது கிடைத்தது. 1987 இல் மணிரத்னம் இயக்கத்தில் நாயகன் திரைப்படத்திலும், 1996 இல் ஷங்கர் (திரைப்பட இயக்குநர்) இயக்கத்தில் இந்தியன் 1996 திரைப்படத்திலும் நடித்தார். இந்தத் திரைப்படத்தில் தந்தை, மகன் ஆகிய இரு வேடங்களில் நடித்தார். இந்த இரு படங்களிலும் இவரின் நடிப்பு பெரும் பாராட்டைப் பெற்றுத் தந்தது. இதன்பின்பு வெளியான ஹே ராம், விருமாண்டி, விஸ்வரூபம் (2013 திரைப்படம்) தசாவதாரம் (2008 திரைப்படம்) ஆகிய திரைப்படங்களை இவரே தயாரித்து நடித்தார். இதில் தசாவதாரம் திரைப்படத்தில் பத்து வேடங்களில் நடித்திருந்தார்.

1979 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது வழங்கியது. 1990 இல் இந்திய அரசு பத்மசிறீ விருதும், 2014 இல் பத்ம பூசண் விருதும் வழங்கியது. 2016 இல் செவாலியே விருது பெற்றார். [11]

கமல்ஹாசன், தமிழ் தவிர இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

கமல்காசன் இராமநாதபுரம், பரமக்குடியில் சிறீவைணவ ஐயங்கார் தமிழ்ப் பிராமணர் குடும்பத்தில் பிறந்தார்.[12] தந்தை டி. சீனிவாசன் ஒரு வழக்கறிஞர். தாயார் ராஜலட்சுமி.[13] கமல் குடும்பத்தில் இளையவர். இவரது தமையன்மார்கள் சாருஹாசன் (பி: 1930), சந்திரஹாசன் (பி: 1936) இருவரும் வழக்கறிஞர்கள். சாருகாசன் 1980களில் திரைப்படங்களில் நடித்து வந்தார். சகோதரி நளினி (பி: 1946) ஒரு பரதநாட்டியக் கலைஞர். பரமக்குடியில் ஆரம்பக் கல்வி கற்றார். சகோதரர்களின் உயர் கல்வியைக் கருத்தில் கொண்டு இவர்கள் சென்னைக்கு குடும்பத்துடன் குடியேறினர்.[13] கமல்காசன் சென்னை சாந்தோமில் கல்வி கற்றார்.[13] தந்தையின் விருப்பப்படி, கமல்காசன் திரைப்படத் துறையிலும், நடனத்துறையிலும் ஈடுபாடு கொண்டார்.[13] தாயாரின் மருத்துவர் ஒருவர் ஏவிஎம் மெய்யப்பச் செட்டியாரின் மனைவிக்கு மருத்துவம் பார்ப்பதற்காக அவரிடம் சென்ற போது கமலையும் தன்னுடன் கூட்டிச் சென்று அறிமுகப்படுத்தினார்.[14] ஏ. வி. மெய்யப்பனின் மகன் எம். சரவணனின் சிபார்சில் எவிஎம் தயாரிப்பான களத்தூர் கண்ணம்மா (1960) திரைப்படத்தில் குழந்தை நடிகராக நடிப்பதற்கு வாய்ப்புக் கிடைத்தது.[13]

அரசியல் பிரவேசம்[தொகு]

கமல், தான் அரசியலுக்கு வருவதற்கான நேரம் வந்துவிட்டது என தனது டிவிட்டர் பக்கத்தின் வாயிலாக அறிவித்திருந்தார். அதன்படி, பெப்ரவரி 21, 2018 அன்று மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கமல் தனது கட்சியின் பெயர் மக்கள் நீதி மய்யம் என அறிமைவித்தார். அதே கூட்டத்தில் கட்சிக்கான கொடியையும் வெளிட்டு அதனை ஏற்றி வைத்தார். அந்தக் கொடியில் ஆறு கைகள் ஒன்றுடன் ஒன்று இணைந்திருப்பது போலவும் சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் இருந்தது. கொடியின் நடுவில் கருப்பு வண்ணத்தைப் பின்புலமாகக் கொண்டு நடுவில் வெள்ளை நட்சத்திரம் இருக்கும். அதில் மக்கள் நீதி மய்யம் என எழுதியிருக்கும். [15]

திரைப்படக் குறிப்பு[தொகு]

இவர் 2015 ஆம் ஆண்டுவரை 200 மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

 • 1960 - தமிழ்த் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக‌ அறிமுகம்
 • 1962 - மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக‌ அறிமுகம்
 • 1976 - தெலுங்குத் திரைப்படங்களில் அறிமுகம்
 • 1977 - வங்காளத் திரைப்படங்களில் அறிமுகம்
 • 1977 - கன்னடத் திரைப்படங்களில் அறிமுகம்
 • 1981 - இந்தித் திரைப்படங்களில் அறிமுகம்

வெளிவரவிருக்கும் திரைப்படங்கள்[தொகு]

நடித்த திரைப்படங்கள்[தொகு]

Key
Films that have not yet been released இன்னும் வெளியாகாத திரைப்படங்கள்
திரைப்படம் ஆண்டு ஏற்ற வேடம் மொழி இயக்குநர் குறிப்புகள் சான்று
களத்தூர் கண்ணம்மா 1960 செல்வம் தமிழ் ஏ. பீம்சிங் குழந்தை நட்சத்திரம் [16]
பார்த்தால் பசி தீரும் 1962 பாபு, குமார் தமிழ் ஏ. பீம்சிங் குழந்தை நட்சத்திரம் [17]
பாத காணிக்கை 1962 தமிழ் கே. சங்கர் குழந்தை நட்சத்திரம் [18]
கண்ணும் கரளும் 1962 மலையாளம் கே. எஸ். சேதுமாதவன் குழந்தை நட்சத்திரம் [19]
வானம்பாடி 1963 தமிழ் ஜி. ஆர். நாதன் குழந்தை நட்சத்திரம் [20]
ஆனந்த ஜோதி 1963 தமிழ் வி. என். ரெட்டி குழந்தை நட்சத்திரம் [21]
மாணவன் 1970 தமிழ் எம். ஏ. திருமுகம் குறிப்பிடப்படாத வேடம் [22]
அன்னை வேளாங்கண்ணி 1971 இயேசு தமிழ் தங்கப்பன் குறிப்பிடப்படாத வேடம் [23]
குறத்தி மகன் 1972 தமிழ் கே. எஸ். கோபாலகிருஷ்ணன் [24]
அரங்கேற்றம் 1973 தியாகு தமிழ் கே. பாலச்சந்தர் [25]
சொல்லத்தான் நினைக்கிறேன் 1973 கமல் தமிழ் கே. பாலச்சந்தர் [26]
பருவ காலம் 1974 சந்திரன் தமிழ் ஜாஸ். ஏ. என். பெர்னான்டோ [27]
குமாஸ்தாவின் மகள் 1974 மணி தமிழ் ஏ. பி. நாகராசன் [28]
[29]
நான் அவனில்லை 1974 தமிழ் கே. பாலச்சந்தர் [26]
கன்னியாகுமரி 1974 சங்கரன் மலையாளம் கே. எசு. சேதுமாதவன் [30]
அன்புத்தங்கை 1974 தமிழ் எசு. பி. முத்துராமன் சிறப்புத் தோற்றம் [31]
[32]
விசுணு விசயம் 1974 மலையாளம் என். சங்கரன் ஐயர் [33]
அவள் ஒரு தொடர்கதை 1974 பிரசாத் தமிழ் கே. பாலச்சந்தர்

கமல்ஹாசன் நடித்துள்ள படங்கள்[தொகு]

இரண்டாயிரத்திபத்து[தொகு]

((லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் (LAIFFA) திரையிடப்பட்டது. ஐந்து விருதுகளையும் வாங்கியுள்ளது. சிறந்த நடிகர் - கமல்ஹாசன், சிறந்த படம் - உத்தமவில்லன், சிறந்த இசை - ஜிப்ரான், சிறந்த பாடல் - ஜிப்ரான், சிறந்த ஒலி வடிவமைப்பு - குனல் ராஜன். ரஷ்யன் திரைப்பட விழாவில் சிறந்த இசைக்கான விருதினையும் பெற்றுள்ளது. உத்தமவில்லன்))

இரண்டாயிரம்[தொகு]
தொண்ணூறுகள்[தொகு]
 • 1998 – காதலா காதலா
 • 1998 – சாச்சி 420 (ஹிந்தி) (த) (எ) (இ)
 • 1996 – அவ்வை சண்முகி
 • 1996 – பாமனெ (தெலுங்கு)
 • 1996 – இந்தியன்(இரட்டை வேடம்)
 • 1996 – இந்துஸ்தானி (Hindi) (இரட்டை வேடம்)
 • 1996 – பாரதீயுடு (தெலுங்கு) (இரட்டை வேடம்)
 • 1995 – குருதிப்புனல் (பாடல்களில்லாத திரைப்படம்) (த)
 • 1995 – த்ரோகி (தெலுங்கு) (பாடல்களில்லாத திரைப்படம்) (த)
 • 1995 – சுப சங்கல்பம் (தெலுங்கு)
 • 1995 – சதி லீலாவதி (த)
 • 1994 – நம்மவர்
 • 1994 – மகளிர் மட்டும் (நட்புக்காக (த)
 • 1994 – ஆடவளக்கு மாற்றம் (தெலுங்கு) (நட்புக்காக) (த)
 • 1994 – மகாநதி (b)
 • 1993 – கலைஞன்
 • 1993 – மகராசன் (த)
 • 1992 – தேவர் மகன் (த) (எ) - ஹிந்தியில் மறுதாயாரிப்பு விராசாத்.
 • 1992 – ஷத்ரிய புத்ருடு (தெலுங்கு) (த)
 • 1992 – சிங்கார வேலன்
 • 1991 – குணா
 • 1990 – மை டியர் மார்த்தாண்டன் (நட்புக்காக)
 • 1990 – மைக்கேல் மதன காமராஜன் (நான்கு வேடம்) (த)
 • 1990 – மைக்கேல் மதன காம ராஜு (தெலுங்கு) (நான்கு வேடம்) (த)
 • 1990 – இந்திரன் சந்திரன் (இரட்டை வேடங்கள்)
எண்பதுகள்[தொகு]
 • 1989 – இன்ருடு சன்ருடு (தெலுங்கு)(இரட்டை வேடங்கள்) ஹிந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டதுமேயர் சாப்
 • 1989 – வெற்றி விழா
 • 1989 – சாணக்யன் (மலையாளம்)
 • 1989 – அபூர்வ சகோதரர்கள் (மூன்று வேடங்கள்) (த) (கமல்ஹாசன் நடித்த 150வது திரைப்படம் இதுவே ஆகும்.)

ஹிந்தியிலும்.தெலுங்கிலும் மொழிமற்றம் செய்யப்பட்டன.

 • 1989 – அப்பு ராஜா (ஹிந்தி (மூன்று வேடங்கள்) (த)
 • 1989 – அபூர்வ சகோதருலு (தெலுங்கு) (மூன்று வேடங்கள்) (த)
 • 1988 – உன்னால் முடியும் தம்பி
 • 1988 – சூர சம்ஹாரம்
 • 1988 – டெய்சி (மலையாளம்)
 • 1988 – சத்யா (த)
 • 1988 – பேசும் படம்
 • 1987 – புஷ்பக் (ஹிந்தி)
 • 1987 – புஷ்பக விமானம் (தெலுங்கு)
 • 1987 – புஷ்பக விமானா (கன்னடம்)
 • 1987 – கடமை கண்ணியம் கட்டுப்பாடு (நட்புக்காக) (த)
 • 1987 – நாயக்குடு (தெலுங்கு)
 • 1987 – வேலு நாயக்கன் (ஹிந்தி)
 • 1987 – நாயகன்
 • 1987 – பேர் சொல்லும் பிள்ளை
 • 1987 – அந்தரிகந்தே கனுடு (தெலுங்கு)
 • 1987 – விரதம் (மலையாளம்)
 • 1987 – காதல் பரிசு
 • 1986 – டிசம்பர் பூக்கள் (நட்புக்காக)
 • 1986 – டான்ஸ் மாஸ்டர் (தெலுங்கு) (இரட்டை வேடம்)
 • 1986 – புன்னகை மன்னன் (இரட்டை வேடம்)
 • 1986 – ஒக்க ராதா இதரு கிருஷ்னுலு (தெலுங்கு)
 • 1986 – விக்ரம் (த)
 • 1986 – நானும் ஒரு தொழிலாளி
 • 1986 – சிப்பிக்குள் முத்து
 • 1986 – ஸ்வாதி மூத்யம் (தெலுங்கு) - இந்தியில் மறுதயாரிப்பு செய்யப்பட்டது ஈஷ்வர் அணில் கபோருடன்
 • 1986 – மனக்கணக்கு (நட்புக்காக)
 • 1985 – தேகா பியார் துமாரா (இந்தி)
 • 1985 – ஜப்பானில் கல்யாணராமன் (இரட்டை வேடம்)
 • 1985 – மங்கம்மா சபதம்
 • 1985 – ஜிராப்டார் (இந்தி)
 • 1985 – சாகர் (இந்தி)
 • 1985 – உயர்ந்த உள்ளம்
 • 1985 – அந்த ஒரு நிமிடம்
 • 1985 – காக்கிச் சட்டை
 • 1985 – ஒரு கைதியின் டைரி (இரட்டை வேடம்) - ஆக்ரி ராஸ்தாவாக வாட்ஸ் அப்பில் புது அறிமுகம்., நீங்கள் டைப் செய்யும் இடத்தில் @ என அழுத்தினால் குழுவில் உள்ள அனைவரின் பெயரும் வரும். குரூப்பில் மட்டுமே. மறு தயாரிப்பு.
 • 1984 – கரிஷ்மா (இந்தி)
 • 1984 – எனக்குள் ஒருவன் (இரட்டை வேடம்)
 • 1984 – ராஜ் திலக் (இந்தி)
 • 1984 – யாட்கார் (இந்தி)
 • 1984 – ஏக் நை பகெலி (இந்தி)
 • 1984 – ஜே தேஷ் (இந்தி)
 • 1983 – தூங்காதே தம்பி தூங்காதே (இரட்டை வேடம்)
 • 1983 – வெங்கியலி அரலித குவு (கன்னடம்)
 • 1983 – பொய்க்கால் குதிரை (நட்புக்காக)
 • 1983 – சத்மா (இந்தி)
 • 1983 – சலங்கை ஒலி தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட தெலுங்குப்படம்
 • 1983 – சாகரா சங்கமம் (தெலுங்கு)
 • 1983 – சினேக பந்தம் (மலையாளம்)
 • 1983 – சட்டம்
 • 1983 – உருவங்கள் மாறலாம் (நட்புக்காக)
 • 1983 – சாரா ஸீ சிந்தகி (இந்தி)
 • 1983 – வசந்த கோகிலா (தெலுங்கு)
 • 1982 – பாடகன் (சனம் தேரி கசமின் மொழிமாற்ற வெளியீடு)
 • 1982 – அக்னி சாட்சி (நட்புக்காக)
 • 1982 – பியாரா தரானா (நினைத்தாலே இனிக்கும் திரைபடத்தின் மொழிமாற்ற வெளியீடு)
 • 1982 – பகடை பன்னிரெண்டு
 • 1982 – ஜே தோ கமல் ஹொகயா (இந்தியில் முதல் இரட்டை வேடம்) இத்திரைப்படம் சட்டம் என் கையிலின் இந்தித் தயாரிப்பு.
 • 1982 – ராணித் தேனி (நட்புக்காக)
 • 1982 – எழம் ராத்திரி (மலையாளம்)
 • 1982 – சகலகலா வல்லவன்
 • 1982 – சனம் தேரி கசம் (இந்தி)
 • 1982 – ஷிம்லா ஸ்பெஷல்
 • 1982 – மூன்றாம் பிறை - சாத்மாவாக இந்தியில் மறுதயாரிப்பு.
 • 1982 – அந்தி வெயிலிலே (மலையாளம்)
 • 1982 – அந்தகடு (தெலுங்கு)
 • 1982 – வாழ்வே மாயம் (மலையாளம்)
 • 1982 – வாழ்வே மாயம்
 • 1981 – தோ தில் தீவானே (மொழிமாற்றம் செய்யப்பட்டது)
 • 1981 – எல்லாம் இன்பமயம்
 • 1981 – டிக்! டிக்! டிக்!
 • 1981 – அமாவாசைய சந்துருடு (தெலுங்கு) (த)
 • 1981 – சங்கர்லால்
 • 1981 – சவால்
 • 1981 – கடல் மீன்கள்
 • 1981 – ஏக் தூஜே கே லியே (ஹிந்தி)
 • 1981 – ராஜ பார்வை (த) (கமல்ஹாசன் நடித்த 100வது திரைப்படம் இதுவே ஆகும்.)
 • 1981 – ராம் லக்சுமன்
 • 1981 – பிரேம பிச்சிi (தெலுங்கு)
 • 1981 – மீண்டும் கோகிலா
 • 1981 – ஆகலி ராஜ்யம் (தெலுங்கு)
 • 1981 – தில்லு முல்லு (நட்புக்காக)
 • 1980 – நட்சத்திரம் (நட்புக்காக)
 • 1980 – மரியா மை டார்லிங் (தமிழ்)
 • 1980 – மரியா மை டார்லிங் (கன்னடம்)
 • 1980 – வறுமையின் நிறம் சிகப்பு
 • 1980 – குரு
 • 1980 – உல்லாசப் பறவைகள்
எழுபதுகள்[தொகு]
 • 1979 – அழியாத கோலங்கள் (நட்புக்காக)
 • 1979 – நீல மலர்கள் (நட்புக்காக)
 • 1979 – மங்கள வாத்தியம்
 • 1979 – கல்யாணராமன் (தமிழ்)
 • 1979 – இடிகாதா காது (தெலுங்கு)
 • 1979 – அலாவுதீனும் அற்புத விளக்கும் (தெலுங்கு)
 • 1979 – அலாவுதீனும் அற்புத விளக்கும்
 • 1979 – அந்தமைனா அனுபவம் (தெலுங்கு)
 • 1979 – நினைத்தாலே இனிக்கும்
 • 1979 – தாயில்லாமல் நான் இல்லை
 • 1979 – அலாவுதீனும் அற்புத விளக்கும் (மலையாளம்)
 • 1979 – நீயா!
 • 1979 – சிகப்புக்கல் மூக்குத்தி
 • 1979 – சோமோகடித்தி சொக்கடித்தி (தெலுங்கில் முதல் இரட்டை வேடம்)(தெலுங்கு) இரு நிலவுகள் தமிழில் மொழிமாற்றம்.
 • 1978 – தப்புத் தாளங்கள் (நட்புக்காக)
 • 1978 – தபித்த தாளா (தெலுங்கு) (நட்புக்காக)
 • 1978 – மதனோல்சவம் (மலையாளம்)
 • 1978 – யீட்ட (மலையாளம்)
 • 1978 – அவள் அப்படித்தான்
 • 1978 – மனிதரில் இத்தனை நிறங்களா!
 • 1978 – சிகப்பு ரோஜாக்கள்
 • 1978 – வயனாதன் தம்பன் (மலையாளம்)
 • 1978 – வயசு பிலிச்சிந்தி (தெலுங்கு)
 • 1978 – சட்டம் என் கையில் (தமிழில் முதல் இரட்டை வேடம்)
 • 1978 – இளமை ஊஞ்சலாடுகிறது
 • 1978 – மரோ சரித்திரா (தெலுங்கு)
 • 1978 – நிழல் நிஜமாகிறது
 • 1977 – ஆத்யப்பாதம் (மலையாளம்) (நட்புக்காக)
 • 1977 – சத்யவான் சாவித்ரி (மலையாளம்)
 • 1977 – கோகிலா கன்னடத்தில் முதல் படம்
 • 1977 – நாம் பிறந்த மண்
 • 1977 – ஆனந்தம் பரமானந்தம் (மலையாளம்) (நட்புக்காக)
 • 1977 – ஆடு புலி ஆட்டம்
 • 1977 – 16 வயதினிலே
 • 1977 – ஒர்மகள் மரிக்குமோ (மலையாளம்) (நட்புக்காக)
 • 1977 – நிறைகுடம் (மலயாளம்)
 • 1977 – ஆஸ்த மாங்கல்யம் (மலையாளம்) (நட்புக்காக)
 • 1977 – கபிதா (வங்காளம்)
 • 1977 – உன்னை சுற்றும் உலகம்
 • 1977 – சிறீதேவி (மலையாளம்)
 • 1977 – மதுர சொப்னம் (மலையாளம்)
 • 1977 – அவர்கள் (கமல்ஹாசன் நடித்த 50 திரைப்படம் இதுவே ஆகும்.)
 • 1977 – ஆசீர்வாதம் (மலையாளம்)
 • 1977 – சிவதாண்டவம் (மலையாளம்)
 • 1977 – உயர்ந்தவர்கள்l
 • 1976 – லலிதா (நட்புக்காக)
 • 1976 – மோகம் முப்பது வருஷம்
 • 1976 – மூன்று முடிச்சு
 • 1976 – னீ எந்தே லகாரி (மலையாளம்)
 • 1976 – பொன்னி (மலையாளம்)
 • 1976 – இதய மலர்
 • 1976 – குமார விஜயம்
 • 1976 – குட்டவும் சிட்சாயும் (மலையாளம்)
 • 1976 – உணர்ச்சிகள் (மலையாளம்)
 • 1976 – ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது
 • 1976 – சத்தியம்
 • 1976 – அருது (மலயாளம்) (நட்புக்காக)
 • 1976 – ஸ்விமிங் பூல் (மலையாளம்)
 • 1976 – மன்மத லீலை
 • 1976 – சமசியா (மலையாளம்)
 • 1976 – அப்பூப்பான் (மலையாளம்)
 • 1976 – அக்னி புஷ்பம் (மலையாளம்)
 • 1975 – அந்தரங்கம்
 • 1975 – ராசலீலா (மலையாளம்)
 • 1975 – மற்றொரு சீதா (மலையாளம்)
 • 1975 – திருவோணம் (மலையாளம்)
 • 1975 – அபூர்வ ராகங்கள்
 • 1975 – மாலை சூட வா
 • 1975 – ஞனன் நினே பிரேமிக்கினு (மலையாளம்)
 • 1975 – பட்டிக்காட்டு ராஜா
 • 1975 – தங்கத்திலே வைரம்
 • 1975 – மேல்நாட்டு மருமகள் (வாணி கணபதியச் சந்தித்துப் பின்னர் திருமணம் செய்து கொண்டார்.)
 • 1975 – தேன் சிந்துதே வானம்
 • 1975 – ஆயிரத்தில் ஒருத்தி
 • 1975 – பட்டாம்பூச்சி
 • 1975 – சினிமா பைத்தியம்
 • 1974 – பணத்துக்காக
 • 1974 – ஆய்னா (ஹிந்தி)
 • 1974 – அந்துலேனி காதா (தெலுங்கு)
 • 1974 – அவள் ஒரு துடர்கதா (மலையாளம்)
 • 1974 – அவள் ஒரு தொடர்கதை
 • 1974 – விஷ்னு விஜயம் (மலையாளம்)
 • 1974 – அன்புத் தங்கை
 • 1974 – கன்யாகுமாரி (மலையாளம்)
 • 1974 – நான் அவனில்லை
 • 1974 – குமாஸ்தாவின் மகள்
 • 1974 – பருவ காலம்
 • 1973 – சொல்லத்தான் நினைக்கிறேன்
 • 1973 – அரங்கேற்றம்
 • 1972 – குறத்தி மகன்
 • 1970 – மாணவன்

தயாரித்த திரைப்படங்கள்[தொகு]

எழுதிய திரைக்கதைகள்[தொகு]

 • 1999 – விவி நெ.1 (இந்தி)
 • 1997 – விராசாத் (இந்தி)

இயக்கிய திரைப்படங்கள்[தொகு]

மேலும் பங்காற்றிய திரைத் துறைகள்[தொகு]

( பாடலாசிரியர்)

இந்தித் திரைப்படங்கள்[தொகு]

1980[தொகு]

1980 இல் கமல் வறுமையின் நிறம் சிவப்பு எனும் திரைப்படத்தில் நடித்தார்.மேலும் ரசினிகாந்த் நடித்த தில்லு முல்லு திரைப்படத்தில் கௌரவத் தோற்றத்தில் நடித்தார். இவரின் முதல் இந்தித் திரைப்படம் ஏக் தூஜே கே லியே ஆகும். இது தெலுங்கில் வெளிவந்த மரோ சரித்ரா எனும் படத்தின் மொழிமாற்றம் ஆகும். இந்தி மொழியில் இந்தத் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டார்.[36] இயக்குநர் (திரைப்படம்) பாலு மகேந்திரா இயக்கிய மூன்றாம் பிறை திரைப்படத்தில் நடித்தார். இதில் மறதிநோய் வேடத்தில் ஸ்ரீதேவி நடித்திருப்பார். இது இந்தியில் சத்மா எனும் பெயரில் வெளியானது. இந்தப் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான இந்திய தேசிய விருது கிடைத்தது.[37]

இதர பங்களிப்புகள்[தொகு]

ஆண்டு திரைப்படம் மொழி பங்காற்றியது
1971 சவாலே சமாளி தமிழ் துணை நடன இயக்குநர்
1971 சிறீமந்துடு தெலுங்கு துணை நடன இயக்குநர்
1971 அன்னை வேளாங்கண்ணி தமிழ் துணை நடன இயக்குநர்
உதவி இயக்குநர்
1972 நிருதசாலா   மலையாளம் துணை நடன இயக்குநர்
1977 அவர்கள் தமிழ் நடன ஆசிரியர்
1977 அய்னா   இந்தி உதவி இயக்குநர்
நடன ஆசிரியர்
2000 ஹேராம் தமிழ் நடன ஆசிரியர்
2013 விஸ்வரூபம் தமிழ் நடன ஆசிரியர்
2015 உத்தம வில்லன் தமிழ் நடன ஆசிரியர்
2015 தூங்காவனம் தமிழ் ஒப்பனை

வெளியாகாத திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் மொழி இயக்குநர் சான்றுகள்
1986 கபார்தர் இந்தி டி. ராமராவ் [38]
1996 கண்டேன் சீதையை தமிழ் பாலச்சந்திர மேனன் [39]
1997 லேடிசு ஒன்லி இந்தி தினேஷ் சைலேந்திரா [38]
1997 மருதநாயகம் தமிழ் கமல்ஹாசன் [40]

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்[தொகு]

நிகழ்ச்சி ஆண்டு தயாரிப்பு குறிப்புகள் சான்று
பிக் பாஸ் தமிழ் 2017 விஜய் தொலைக்காட்சி பிக் பாஸ் தமிழ் 1
[41]
பிக் பாஸ் தமிழ் 2018 விஜய் தொலைக்காட்சி பிக் பாஸ் தமிழ் 2

விருதுகள்[தொகு]

 • மூன்று முறை, இந்திய அரசின் நடிப்புக்கான தேசிய விருதுகள். (திரைப்படங்கள் - மூன்றாம்பிறை, நாயகன், இந்தியன்)
 • சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான இந்திய தேசிய விருது. (திரைப்படம் - களத்தூர் கண்ணம்மா)
 • 18 பிலிம்பேர் விருதுகள்.
 • பத்மசிறீ விருது (1990)
 • சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் வழங்கிய கௌரவ டாக்டர் பட்டம். (2005)
 • பத்ம பூசன் விருது (2014)[42]
 • தென் இந்திய நடிகர்களிலேயே முதன் முதலாக அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றும் பெருமையை பெற்றுள்ளார். [43]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Kamal reveals his real name!".
 2. https://starsunfolded.com/kamal-haasan/
 3. Kamal Haasan: Can Somebody Guarantee Him A Pension Post Retirement? TimesChennai 3 December 2010
 4. "கமல்ஹாசனின் அரைநூற்றாண்டு திரைப்பயண கொண்டாட்டம்". முதல் செய்தியாளர். 4 சூலை2010. http://www.thefirstreporter.com/entertainment/celebration-kamal-hassan%E2%80%99s-half-century/. பார்த்த நாள்: 24 சனவரி2011. 
 5. "எ வெனெஸ்டே எனும் திரைப்படத்தை இரு மொழிகளில் இயக்க உள்ளார் கமல்". தி இந்து. 10 ஏப்ரல்2009. http://www.hindu.com/thehindu/holnus/009200904102111.htm. பார்த்த நாள்: 24 சனவரி2011. 
 6. "இந்தியா ஆஸ்கர் பிரிவில் தோல்வி". என் டி டி வி (2009). பார்த்த நாள் 17 சனவரி2011.
 7. Kamal Haasan’s lyrics get thumbs up!, 20 November 2010, 06.21 pm IST
 8. "The legend turns 53". Zee News (2007). பார்த்த நாள் 30 June 2009.
 9. He `sculpted the actor' in me, The Hindu, Tuesday 18 January 2005.
 10. Kamal Haasan celebrates 50 years in films!, Bangalore, 10 August 2009
 11. "Tamil Film Actor Sivaji Ganesan Dead Kamal Haasan to get prestigious French honour". The Hindu (22 August 2016). மூல முகவரியிலிருந்து 21 August 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 22 August 2016.
 12. "Despite columnist's gaffe, Kamal Haasan wasn't born Muslim – his original name was Parthasaraty".
 13. 13.0 13.1 13.2 13.3 13.4 "வரலாற்றுச்சுவடுகள் – திரைப்பட வரலாறு 929 – "உலக நாயகன்" கமல்ஹாசன்". தினத்தந்தி. 4-09-2008. 
 14. V. S., Srinivasan (19-12-1997). "Chachi comes a-visiting". ரெடிப்.காம். மூல முகவரியிலிருந்து 25-08-2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 17-06-2013.
 15. https://m.timesofindia.com/city/chennai/live-updates-kamal-haasan-political-party-launch/amp_liveblog/63007615.cms
 16. Saideepak (24 January 2017). "Deconstructing The Politics of Kamal Hassan". Swarajya. https://swarajyamag.com/politics/deconstructing-the-politics-of-kamal-hassan. பார்த்த நாள்: 30 January 2017. 
 17. "Sivaji Ganesan has a film appreciation society all to himself". Firstpost. பார்த்த நாள் 1 February 2017.
 18. Guy, Randor. "Paatha Kaanikkai 1962". The Hindu. மூல முகவரியிலிருந்து 4 February 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 3 February 2017.
 19. Vijayakumar, B.. "Kannum Karalum 1962". The Hindu. மூல முகவரியிலிருந்து 4 February 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 3 February 2017.
 20. "உலக நாயகன் கமல் பிறந்தநாளையொட்டி சிறப்பு பகிர்வு.." (Tamil). Ananda Vikatan (7 November 2014). மூல முகவரியிலிருந்து 5 February 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 3 February 2017.
 21. Saraswathi, S. (7 November 2014). "Birthday Special: Kamal Haasan's 60 years of excellence". Rediff.com. மூல முகவரியிலிருந்து 5 February 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 3 February 2017.
 22. "Kamal Haasan's first role as an adult was in Maanavan". The Times of India. மூல முகவரியிலிருந்து 5 February 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 3 February 2017.
 23. Vijayakumar, B. (20 December 2015). "Velankanni Mathavu - 1977". The Hindu. Archived from the original on 1 February 2017. https://web.archive.org/web/20170201171518/http://www.thehindu.com/features/cinema/cinema-columns/velankanni-mathavu-1977/article8011033.ece. பார்த்த நாள்: 30 January 2017. 
 24. "தண்ணி கருத்திருச்சு... - கல்கி - Kalki — Tamil weekly supplements" (Tamil). Dinamalar. மூல முகவரியிலிருந்து 3 February 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 3 February 2017.
 25. "Kamal Haasan: My best roles came from Balachandersaab". Rediff.com (18 December 2014). மூல முகவரியிலிருந்து 1 February 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 1 February 2017.
 26. 26.0 26.1 "கே.பாலசந்தரை அய்யா என்று அழைக்கும் ரஜினி-கமல்!" (Tamil). Dinamalar. மூல முகவரியிலிருந்து 12 July 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 3 February 2017.
 27. Rajadhyaksha & Willemen 1998, பக். 117.
 28. "கமல் 25 : பிறந்தநாள் ஸ்பெஷல்" (Tamil). Dinamalar (7 November 2016). மூல முகவரியிலிருந்து 5 February 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 3 February 2017.
 29. Nagarajan, A. P. (1974). Gumasthavin Magal (motion picture). C. N. V. Movies. Archived from the original on 12 February 2017. 
 30. "கமல் 60 - 60 - பிறந்தநாள் ஸ்பெஷல் ஸ்டோரி!!" (Tamil). Dinamalar (7 November 2014). மூல முகவரியிலிருந்து 5 February 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 3 February 2017.
 31. Ramachandran 2012, பக். 63.
 32. Muthuraman, S. P. (30 September 2015). "சினிமா எடுத்துப் பார் 28 - 'சிவாஜிக்கு முன், சிவாஜிக்குப் பின்'" (in Tamil). The Hindu. Archived from the original on 5 February 2017. https://web.archive.org/web/20170205133450/http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-28-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/article7705686.ece. பார்த்த நாள்: 5 February 2017. 
 33. "உலக கலைஞன் கமல் - ஆறிலிருந்து அறுபது வரை: கமல்ஹாசன் 60வது பிறந்த நாள் ஸ்பெஷல் ஸ்டோரி! - Kamal hassans 60th Birthday Special story". தினமலர் - சினிமா (6 November 2014). மூல முகவரியிலிருந்து 5 February 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 3 February 2017.
 34. http://www.youtube.com/watch?v=TOSRawKJPyI
 35. en:The Blast (album)
 36. K. Jeshi (2004). "No stopping him". The Hindu. மூல முகவரியிலிருந்து 25 April 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 19 October 2009.
 37. "Kamal Haasan Awards (till 2000)". BizHat.com (2009). மூல முகவரியிலிருந்து 3 June 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 22 January 2011.
 38. 38.0 38.1 "No day, no show-30 Bollywood movies that never were released". India Today (2006-07-03). பார்த்த நாள் 2015-11-26.
 39. "Commentry - Bhagyathinte Marukara". Vellinakshatram: 28–32. 7 January 1996. 
 40. "Marudhanayagam song released". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (2016-03-05). பார்த்த நாள் 2016-07-18.
 41. "Actor Kamal Haasan to be Bigg Boss host in TN". Business Line. 26 May 2017. http://www.thehindubusinessline.com/news/variety/actor-kamal-haasan-to-be-bigg-boss-host-in-tn/article9713488.ece. 
 42. "கமல்ஹாசன், வைரமுத்துவுக்கு பத்ம பூஷண் விருது". பார்த்த நாள் January 27, 2014.
 43. பல்கலை.யில் உரை: கமலுக்கு கிடைத்த கவுரவம்11 ஜனவரி 2016

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கமல்ஹாசன்&oldid=2621238" இருந்து மீள்விக்கப்பட்டது