ஏக் தூஜே கே லியே
ஏக் தூஜே கே லியே Ek Duuje Ke Liye | |
---|---|
இயக்கம் | கே.பாலச்சந்தர் |
தயாரிப்பு | எல். வி. பிரசாத் |
கதை | கே.பாலச்சந்தர் |
இசை | லஸ்மிகாந்த் பியாரெலால் |
நடிப்பு | கமல்ஹாசன், ரதி அக்னிகோத்ரி, மாதவி |
ஒளிப்பதிவு | பி. எஸ். லோகநாத் |
படத்தொகுப்பு | என். ஆர். கிட்டு |
வெளியீடு | சூன் 5, 1981 |
ஓட்டம் | 163 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | இந்தி |
மொத்த வருவாய் | ₹100 மில்லியன் (US$1.3 மில்லியன்)[1] |
ஏக் தூஜே கே லியே (ஆங்கிலம்:Ek Duuje Ke Liye) 1981 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தித் திரைப்படமாகும். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ரதி அக்னிகோத்ரி, மாதவி மற்றும் பலர் நடித்திருந்தனர். 300 நாட்கள் மேல் வெற்றிகரமாக ஓடி மிகப்பெரிய சாதனை படைத்தது இத்திரைப்படம்.[2]
இத்திரைப்படமானது 1978 ஆண்டில் தெலுங்கு மொழியில் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன், சரிதா நடித்து 700 நாட்கள்[3] மேல் வெற்றிகரமாக ஓடிய மரோசரித்ரா எனும் படத்தின் மறுபதிப்பாகும்.
மரோசரித்ரா போலவே, ஏக் தூஜே கே லியேவும், மாபெரும் வெற்றி பெற்றது. வட இந்தியாவில் இந்தத் திரைப்படம் 80 வாரங்கள் ஓடியது.[4]
வகை
[தொகு]நடிகர்கள்
[தொகு]கமல்ஹாசன் முதன்முறையாக இந்தி மொழியில் 1977 ஆண்டில் 'ஆய்னா' எனும் திரைப்படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார். ஆனால் இப்படமே கமல் கதாநாயகனாக நடித்த முதல் இந்தித் திரைப்படமாகும்.
நடிகர் | கதாபாத்திரத்தின் பெயர் |
---|---|
கமல்ஹாசன் | எஸ். வாசுதேவன் 'வாசு' |
ரதி அக்னிகோத்ரி | சப்ணா |
மாதவி | சந்தியா |
ராகேஷ் பேடி | சக்ரம் |
பூர்ணம் விஸ்வநாதன் | வி. சிவராமகிருஷ்ணன், வாசுவின் தந்தை |
அதிலிலட்சுமி | வந்தனா, வாசுவின் தாயார். |
சத்யன் கப்பு | ஜகநாத் |
அரவிந்த் டேஷ்பண்டி | குந்தன்லால், சப்ணாவின் தந்தை. |
சுபா ஹோதி | திருமதி. குந்தன்லால், சப்ணாவின் தாயார். |
ராச்சா முராட் | டேனி |
அஸ்ராணி | ஜி. ஹரிபாபு |
சுனில் தபா | நூலகம் ஊழியர் |
பாடல்கள்
[தொகு]லஸ்மிகாந்த் - பியாரெலால் ஆகியோரால் இப்படத்திற்கு இசை அமைக்கப்பட்டது. இந்தி பாடல் வரிகள் ஆனந்த் பக்சியால் எழுதப்பட்டது. பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் இத்திரைப்படத்தின் மூலம் இந்தி மொழியில் அறிமுகமானார்.
எண். | பாடல் | பாடகர்கள் |
1 | டெரெ மெரெ பீச் மெய்ன் (Tere Mere Beech Mein) ... | எஸ். பி. பாலசுப்பிரமணியம், லதா மங்கேஷ்கர் |
2 | ஹம் டம் டோனோ ஜாப் மில் ஜயென் (Hum Tum Dono Jab Mil Jayen) ... | எஸ். பி. பாலசுப்பிரமணியம், லதா மங்கேஷ்கர் |
3 | மெரெ ஜீவன் சாதி (Mere Jeevan Saathi) ... | எஸ். பி. பாலசுப்பிரமணியம், அனுராதா பாட்வால் |
4 | ஹம் பானெ டம் பானெ (Hum Bane Tum Bane) ... | எஸ். பி. பாலசுப்பிரமணியம், லதா மங்கேஷ்கர் |
5 | டெரெ மெரெ பீச் மெய்ன் (சோகம்) (Tere Mere Beech Mein) ... | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
6 | சோலக் பாரஸ் கி பாலி யுமர் (Solah Baras Ki Bali Umar) ... | லதா மங்கேஷ்கர், அனுப் ஜலோடா |
விருதுகள்
[தொகு]- சிறந்த ஆண் பின்னணிப் பாடகர் – எஸ். பி. பாலசுப்பிரமணியம்
- வென்றவர்கள்
- சிறந்த படத்தொகுப்பு – கே.ஆர் கிட்டு
- சிறந்த பாடலாசிரியர் – ஆனந்த் பாக்சி (தேரே மேரே பீச் மேனி என்ற பாடலுக்காக)
- சிறந்த திரைக்கதை – கை. பாலசந்தர்
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "ஏக் தூஜே கே லியே திரைப்படத்தின் மொத்த வருவாய்". Box Office India. Archived from the original on 2009-09-03. பார்க்கப்பட்ட நாள் டிசம்பர் 17, 2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "கமல்ஹாசனை இந்தியாவின் ஸ்டாராக்கிய ஸ்பெஷல் சினிமா... இதன் சீக்வெலும் செம ஹிட் தெரியுமா?! #40YearsofEkDuujeKeLiye". ஆனந்த விகடன். https://cinema.vikatan.com/bollywood/kamal-haasan-has-become-indias-star-because-of-ek-duuje-ke-liyes-success.
- ↑ "அழியாத கோலங்கள்" (in ta). குங்குமம். 18 May 2015 இம் மூலத்தில் இருந்து 22 February 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180222101352/http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=8724&id1=6&issue=20150518.
- ↑ "பாலசந்தர் டைரக்ஷனில் உருவான மரோசரித்ரா அற்புத சாதனை". மாலை மலர். 31 சனவரி 2021. பார்க்கப்பட்ட நாள் 6 மே 2021.