அந்தரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அந்தரங்கம்
இயக்கம்முக்தா சீனிவாசன்
தயாரிப்புஎம்.வேணுகோபால்
மாயா ஆர்ட்ஸ்
கதைஏ. எஸ். பிரகாசம்
இசைஜி. தேவராஜன்
நடிப்பு
ஒளிப்பதிவுஆர். சம்பத்
படத்தொகுப்புஎல். பாலு
வெளியீடுதிசம்பர் 12, 1975
நீளம்3909 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அந்தரங்கம் (Andharangam) 1975 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், தீபா மற்றும் பலர் நடித்திருந்தனர். "ஞாயிறு ஒளி மழையில்" எனும் பாடல் கமல்ஹாசன் திரைத்துறையில் பாடிய முதல் பாடலாகும்.[1][2] இத்திரைப்படம் தெலுங்கில் அந்தலராஜா எனும் பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது 1977 அக்டோபர் 29 அன்று வெளியிடப்பட்டது.

நடிகை சாவித்திரி நடிப்பில் கடைசி வெற்றிப் படமாக இப்படம் அமைந்தது.[3]

நடிகர்கள்[தொகு]

கதை[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

தங்கதுரை மற்றும் மல்லிகா ஆகியோர் தம்பதிகள். இருவருக்கும் தீபா என்ற மகள் பிறக்கின்றாள். தங்கதுரை தன்னுடைய நண்பர்கள் வாங்கிய கடனுக்காக தொடர்ந்து சாட்சி கையெழுத்து போடக் கூடியவராக இருக்கின்றார். அதனால் நண்பர்கள் கட்டாத கடன் தொகையை தரக்கூடிய தேவை அவருக்கு வந்து விடுகிறது. ஒவ்வொரு முறையும் தன்னுடைய மனைவி மல்லிகாவின் நகைகளை அடமானம் வைத்து பணம் திரட்டி கடன்களை அடைத்து வருகின்றார். ஒருமுறை அவ்வாறு நகையை கேட்கும் பொழுது மல்லிகா தர மறுத்து விடுகிறார். அம்முறை மிகக் கடுமையான தண்டனையாக காவல் துறையை அவரை கைது செய்து விடுகிறது.

தான் சிறைக்குச் சென்றதற்கு காரணம் மல்லிகா தன்னை நம்பி நகையை தராதது தான் என தவறாக தங்கத்துரை புரிந்து கொள்கிறார். அதனால் மல்லிகாவின் மேல் கோபம் கொண்டு விவாகரத்து தந்து அவரை பிரிய நினைக்கின்றார், ஆனால் அவர்களுடைய மகள் திருமணம் இதனால் பாதிக்கும் என்பதனை மல்லிகா எடுத்துக் கூற.. மகள் வளர்ந்து பருவம் அடைந்து திருமணம் செய்து கொள்ளும் போது இருவரும் பிரிந்து விட வேண்டும் என மகளின் மீது சத்தியம் செய்து கொள்கின்றனர். இந்த விடயத்தை யாரிடமும் கூறாமல் அந்தரங்கமாக பாதுகாக்கின்றார்கள்.

தீபாவ அளந்து ஜிமெயில் மாஸ்டராக இருக்கக்கூடிய கமலஹாசனை காதல் செய்கின்றார். இருவரும் திருமணம் செய்து கொள்ள நினைக்கின்றனர். கமலஹாசனை தன்னுடைய வீட்டிற்கு வந்து பெண் கேட்கும் படி தீபா கூறுகின்றார். ஆனால் அதற்குள் தான் திருமணம் செய்து கொண்டால் பெற்றோர்கள் பிரிந்து விடுவார்கள் என்பதை தீபா அறிந்து கொள்கிறார். அதனால் பெண் பார்க்க வரக்கூடிய கமலஹாசனை தனக்கு பிடிக்கவில்லை என கூறிவிடுகிறார். ஏன் அவ்வாறு தீபா கூறினார் என்பதை கமலஹாசன் அறிந்து கொள்கிறார். தங்கதுரை மற்றும் மல்லிகா தம்பதிகள் பிரியாமல் ஒருவருக்கொருவர் புரிந்து வாழ கமலஹாசனும் கமலஹாசன் குடும்பத்தினரும் தீபாவும் இணைந்து ஒரு திட்டம் தீட்டுகின்றார்கள். திட்டத்தில் வெற்றி பெற்றார்களா மல்லிகா மற்றும் தங்கதுரை தம்பதிகள் இணைந்து வாழ்ந்தார்கள் என்பதை மீதி கதை.

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு ஜி. தேவராஜன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கண்ணதாசன், வாலி மற்றும் நேதாஜி ஆகியோர் எழுதியிருந்தனர். ஞாயிறு ஒளி மழையில் என்ற பாடலினை கமலஹாசன் பாடினார். நடிகராக இருந்து பின்னணிப் பாடகராக அவர் பாடிய முதல் பாடல் இதுவாகும்.‌

எண். பாடல் பாடகர்(கள்)
1 "குதிரைக் குட்டி" கே. ஜே. யேசுதாஸ்
2 "ஞாயிறு ஒளி மழையில்" கமல்ஹாசன்
3 "புது முகமே" கே. ஜே. யேசுதாஸ், பி. சுசீலா
4 "பாடகனைத் தேடிகொண்டு" பி. மாதுரி

மேற்கோள்கள்[தொகு]

  1. "உடலில் கதர்ச்சட்டை; உள்ளத்தில் கம்யூனிஸம்; எளிமை சினிமாவின் பிரமாண்டம்... முக்தா சீனிவாசன்!". இந்து தமிழ். 29 மே 2020. பார்க்கப்பட்ட நாள் 15 மே 2021.
  2. "தியாகராஜ பாகவதர் முதல் சிம்பு வரை... தமிழ் சினிமா கண்ட புதுமைகள்!". ஆனந்த விகடன். 23 பெப்பிரவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 12 செப்தெம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "சாவித்ரி - 21. கண்ணம்மா!". தினமணி. 25 செப்தெம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 27 செப்தெம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  4. "எம்ஜிஆர் 4, சிவாஜி 8, கமல் 10 - 75ம் வருட ப்ளாஷ்பேக்". இந்து தமிழ். 22 ஆகத்து 2019. பார்க்கப்பட்ட நாள் 13 சனவரி 2021.
  5. 5.0 5.1 5.2 5.3 "சிரிப்பு தேவதை". தினமணி. 15 அக்டோபர் 2015. பார்க்கப்பட்ட நாள் 12 செப்தெம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் அந்தரங்கம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தரங்கம்&oldid=3911644" இலிருந்து மீள்விக்கப்பட்டது