எல். ஐ. சி. நரசிம்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எல். ஐ. சி. நரசிம்மன் (இறப்பு: அக்டோபர் 27, 2011, அகவை 71) தமிழகத் திரைப்பட நடிகர்.

எல்.ஐ.சியில் அதிகாரியாக பணியாற்றி வந்த இவர் திரைப்பட, நாடக ஆசையால் விருப்ப ஓய்வு பெற்று நடிக்க வந்தார். நாடகத்துறையில் இருந்து திரைப்படத் துறைக்கு வந்த நரசிம்மன் ஏராளமான படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த், கமலஹாசன், பிரபு, கார்த்திக் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார். எஸ். பி. முத்துராமன் இயக்கிய படங்கள் அனைத்திலும் நடித்துள்ளார். தொலைக்காட்சி நாடகத் தொடர்களிலும் நரசிம்மன் நடித்து வந்தார்.

மறைவு[தொகு]

நரசிம்மன் சில ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்பட்டு 2011 அக்டோபர் 27 இரவு 11:30 அளவில் சென்னையில் காலமானார். சின்மயா நகர் நெற்குன்றத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த அவரின் மனைவி பெயர் நளினி. சுரேஷ் என்ற மகனும் ஜெயந்தி என்ற மகளும் உள்ளனர்.

நடித்த சில படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் மொழி கதாப்பாத்திரம் குறிப்பு
1972 ஆசிர்வாதம் தமிழ்
1975 அந்தரங்கம் தமிழ் சாராய வியாபாரி
1979 ஆறிலிருந்து அறுபது வரை தமிழ் ரஜினிகாந்த் சகோதரன்
1983 துடிக்கும் கரங்கள் தமிழ் மருத்துவர்
1983 அடுத்த வாரிசு தமிழ் சுந்தரம்
1988 புதிய வானம் (திரைப்படம்) தமிழ் சாமுவேல்
1988 குரு சிஷ்யன் தமிழ் டிஜிபி சிறீ ராம் மற்றும் பாபுவின் தந்தை
1990 புது வசந்தம் தமிழ்
1990 புதுப்பாடகன் தமிழ்
1990 எதிர்காற்று தமிழ்
1991 கிழக்கு கரை தமிழ்
1992 டிராவிட் அங்கில் தமிழ்
1993 தங்கக்கிளி தமிழ்
1995 சக்ரவர்த்தி தமிழ் பிரதீப்
1996 ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே தமிழ் டாக்டர். மாறி
1998 தர்மா தமிழ்
1999 நினைவிருக்கும் வரை தமிழ்
2002 தயா தமிழ்
2003 ரமச்சந்திரா தமிழ் நீதிபதி

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்._ஐ._சி._நரசிம்மன்&oldid=2693156" இருந்து மீள்விக்கப்பட்டது