உள்ளடக்கத்துக்குச் செல்

திலிப் குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திலீப்குமார்
2006இல் திலீப்
பிறப்புமுகம்மது யூசுப் கான்
(1922-12-11)திசம்பர் 11, 1922
பெசாவர், வடமேற்கு எல்லைப்புற மாகாணம் (1901-2010), பிரித்தானிய இந்தியா
இறப்பு7 சூலை 2021(2021-07-07) (அகவை 98) [1]
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
பணி
செயற்பாட்டுக்
காலம்
1944–1999
வாழ்க்கைத்
துணை
விருதுகள்
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
03 ஏப்ரல் 2000 – 02 ஏப்ரல் 2006
தொகுதிமகாராட்டிரம்
கையொப்பம்Dilip Kumar's signature

திலீப்குமார் (Dilip Kumar) என்ற தனது திரைப்பெயரால் நன்கு அறியப்பட்ட முகம்மது யூசுப் கான்[2] (11 திசம்பர் 1922 – 7 சூலை 2021)[3][4][5] ஓர் இந்திய நடிகரும், திரைப்படத் தயாரிப்பாளரும், நன்கொடையாளரும் ஆவார். இவர் முக்கியமாக, பாலிவுட் படங்களில் பணியாற்றியதற்காக மிகவும் பிரபலமானவர். இவர், தனது "சோகமாக நடிப்பதில் மன்னன்" என்று குறிப்பிடப்பட்டார்.[6] மேலும், இந்தித் திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி வரும் "கான்" குடும்பத்தின் முன்னோடியாகவும் இருந்தார்.[7][8] நடிப்பு நுட்பத்தின் தனித்துவமான வடிவத்தை திரைப்படத்துக்கு கொண்டு வந்த பெருமை இவருக்கு கிடைத்தது. சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதுகளை அதிகளவில் பெற்ற சாதனையை குமார் கொண்டிருந்தார்.[9][10]

திரை வாழ்க்கை

[தொகு]

பம்பாய் டாக்கீஸ் தயாரித்த "ஜவார் பாட்டா" (1944) படத்தில் குமார் ஒரு நடிகராக அறிமுகமானார். ஐந்து தசாப்தங்களாக நீடித்த ஒரு வாழ்க்கையில், இவர் 65க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றினார். காதல் படமான "அந்தாஸ்" (1949), " ஆன்" (1952), சமூக நாடகமான "தக்" (1952), தேவதாஸ் (1955), நகைச்சுவைப் படமான ஆசாத் (1955), காவிய வரலானா முகல்-இ-அசாம் (1960), சமூக குற்றப் பின்னணிப் பட்மான "கங்கா யமுனா (1961), நகைச்சுவையான "ராம் அவுர் ஷியாம்" (1967) உள்ளிட்ட பல படங்களில் தோன்றியுள்ளார் . இவர் 1976ல் திரைத்துறையை விட்டு வெளியேறி ஐந்தாண்டு இடைவெளி எடுத்துக்கொண்டார். 1981ல் மீண்டும் திரும்பி கிராந்தி எனும் மாபெரும் வெற்றிப்படத்தில் குணசித்திரப்பாத்தித்தில் நடித்தார். தொடர்ந்து ஷக்தி (1982), கர்மா (1986) சௌதாகர் (1991) போன்ற ஒரு சில படங்களில் நடித்தார். 1998இல் கடைசியாக "கியூலா" என்றப்படத்தில் நடித்தார்.

மாநிலங்களவை உறுப்பினர்

[தொகு]

மகாராட்டிராவிலிருந்து 2000-2006 காலகட்டத்தில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பில் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராக திலீப் குமார் பரிந்துரைக்கப்பட்டார்.[11][12]

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

குமார் 1922 திசம்பர் 11 அன்று பிரித்தானிய இந்தியாவின் பெசாவரிலுள்ள கிஸ்ஸா கவானி பஜார் பகுதியில் உள்ள குடும்ப வீட்டில் லாலா குலாம் சர்வார் கான் மற்றும் அவரது மனைவி ஆயிஷா பேகம் ஆகியோரின் பன்னிரண்டு குழந்தைகளில் ஒருவராகப் பிறந்தார். இவருக்கு முகமது யூசுப் கான் என்று பெயரிடப்பட்டது.[13] இவரது தந்தை பெசாவரில் பச்ழத்தோட்டங்களை வைத்திருந்தார். பின்னர் நாசிக் அருகே தியோலாலியில் இருந்தார்.

முகமது யூசுப் கான் நாசிக்கின் தியோலாலி, பார்ன்ஸ் பள்ளியில் கல்வி பயின்றார்.[14] திரையுலகில் இவரது நெருங்கிய சகாவான நடிகர் ராஜ் கபூர் இவரது இவரது இளமைக்கால நண்பனாவார்.

சொந்த வாழ்க்கை

[தொகு]

குமார், தன்னைவிட 22 வயது குறைந்த நடிகையான சாய்ரா பானுவை 1966ல் திருமணம் செய்து கொண்டார்.[15] இந்தத் திருமணம் 1983 ஜனவரியில் முடிந்தது.[16]

இறப்பு

[தொகு]

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர்[17], 2021 ஜூலை 7 அன்று மும்பையின் இந்துஜா மருத்துவமனையில் காலமானார்.[18]

விருதுகள்

[தொகு]
  • குமார் தனது திரைவாழ்க்கையில் பல விருதுகள் பெற்றுள்ளார். அதில் மிகச்சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதுகளை எட்டுமுறை பெற்றுள்ளார். மேலும், 19 தடவை விருதுக்கு இவரது பெயர் முன்மொழியப்பட்டது.
  • 1992ல் பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருதும் பெற்று கௌரவிக்கப்பட்டார்.
  • 1994ல் இந்திய அரசாங்கம் இந்தியாவில் திரைத்துறையில் முதன்மைச்சிறப்பிற்குத் தரப்படும் உயரிய விருதான தாதாசாகெப் பால்கே விருது அளித்து கௌரவித்தது.
  • 1980ல் மும்பையின் ஷெரிப்பாகவும் நியமிக்கப்பட்டார்.
  • 1997ல் திலீப்குமாருக்கு பாகிஸ்தானின் குடிமக்களுக்கு வழங்கப்படும் விருதான, நிஷான்-இ-பாகிஸ்தான் என்ற விருது வழங்கப்பட்டது.
  • 1997 இல் இவர் என்டிஆர் தேசிய விருது பெற்றார்.
  • 2009ல் சிஎன்என்-ஐபிஎன்-ன் வருடத்தின் சிறந்த இந்தியர்-வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Dilip Kumar Passed Away'" (in hi). Bollywood Galiyara. 7 July 2021 இம் மூலத்தில் இருந்து 7 ஜூலை 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210707032541/https://bollywoodgaliyara.com//hindi/dilip-kumar-sahab-passed-away-leaving-behind-his-memories-a/cid3496964.htm. 
  2. "Archived copy". Archived from the original on 15 August 2020. பார்க்கப்பட்ட நாள் 16 August 2020.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  3. "Dilip Kumar (1922-2021): Life and Times of the 'Tragedy King'" (in en). News18. 7 July 2021. https://www.news18.com/news/movies/dilip-kumar-1922-2021-life-and-times-of-the-tragedy-king-3934076.html. 
  4. "Dilip Kumar Passed Away' search more on PadhaiBeings hhj" (in hi). Bollywood Galiyara. 7 July 2021 இம் மூலத்தில் இருந்து 7 ஜூலை 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210707032541/https://bollywoodgaliyara.com//hindi/dilip-kumar-sahab-passed-away-leaving-behind-his-memories-a/cid3496964.htm. 
  5. "Dilip Kumar: The Grand Old Man Of Indian Cinema's Legendary Life". NDTV.
  6. Bose, Mrityunjay (2021-07-07). "Dilip Kumar: The undisputed 'Tragedy King'". Deccan Herald. பார்க்கப்பட்ட நாள் 2021-07-07.
  7. "Tragedy king Dilip Kumar turns 88". இந்தியன் எக்சுபிரசு. 11 December 2010 இம் மூலத்தில் இருந்து 11 October 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201011133812/http://archive.indianexpress.com/news/tragedy-king-dilip-Dilip-Kumar-turns-88/723390. 
  8. "Happy Birthday Dilip Kumar: As Dilip Kumar turns 94, a look at his titanic reputation as India's finest method actor". Indianexpress.com. 11 December 2016. பார்க்கப்பட்ட நாள் 21 March 2019.
  9. Sharma, Vishwamitra (2007). Famous Indians of the 21st Century. Pustak Mahal. p. 196. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-223-0829-7.
  10. Dawar, Ramesh (2006). Bollywood: yesterday, today, tomorrow. Star Publications. p. 8. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-905863-01-2.
  11. "Veteran Hindi actor Dilip Kumar admitted in hospital". The New Indian Express.
  12. "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". rajyasabha.nic.in.
  13. TNN (1 December 2017), "Dilip Kumar: Interesting chapters of the actor's life" பரணிடப்பட்டது 11 அக்டோபர் 2020 at the வந்தவழி இயந்திரம், தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Retrieved 23 June 2018.
  14. Renuka Vyavahare (28 December 2011). "Here's why Dilip Kumar speaks Marathi fluently!". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 29 October 2013. பார்க்கப்பட்ட நாள் 28 September 2013.
  15. "Bollywood | film industry, India". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-07.
  16. "BBRT - Information & Issues". Bbrtbandra.org. Archived from the original on 11 October 2020. பார்க்கப்பட்ட நாள் 21 March 2019.
  17. "Dilip Kumar had advanced prostate cancer, suffered kidney failure". The Indian Express (in ஆங்கிலம்). 2021-07-07. பார்க்கப்பட்ட நாள் 2021-07-07.
  18. "Film Legend Dilip Kumar Dies At 98". NDTV.com. Press Trust of India. 2021-07-07. பார்க்கப்பட்ட நாள் 2021-07-07.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=திலிப்_குமார்&oldid=3539515" இலிருந்து மீள்விக்கப்பட்டது