சாய்ரா பானு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாய்ரா பானு
Saira Banu grace the Kresha Bajaj's store launch (7).jpg
2018இல் சாய்ரா பானு
பிறப்பு23 ஆகத்து 1944 (1944-08-23) (அகவை 76)
முசோரி, பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
(தற்பொழுது உத்தராகண்டம், இந்தியா)
பணிநடிகர் (திரைப்படம்
நாடகம்)
செயற்பாட்டுக்
காலம்
1961–1988
வாழ்க்கைத்
துணை
திலிப் குமார் (தி. 1966)

சாய்ரா பானு (பிறப்பு 23 ஆகஸ்ட் 1944), சாய்ரா பானோ என்றும் அழைக்கப்படுகிறார். இந்திய திரைப்பட நடிகை மற்றும் திரைப்பட நடிகர் திலிப் குமாரின் மனைவி. 1961 முதல் 1988 வரை பல பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். 1982ஆம் ஆண்டு கலாநிதி இயக்கத்தில் வெளிவந்த தமிழ் படமான "கடவுளுக்கு ஒரு கடிதம்" திரைப்படத்தில் நடிகர் ராஜிவுக்கு இணையாக கதாநாயகியாக நடித்தார்.[1]

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

சாயிரா பானு நடிகை நசீம் பானு அவர்களின் மகளாவார்.[2]

சாய்ரா தனது குழந்தை பருவத்தில் பெரும் பகுதியை லண்டனில் கழித்தார்.

தொழில்[தொகு]

1960 ஆம் ஆண்டில் சைரா பானு, தனது 16வது வயதில் இந்தித் திரைப்படங்களில் அவர் அறிமுகமானார்.[3] 1961 ஆம் ஆண்டில் ஜங்கிளீ என்ற படத்தில் ஷாமி கபூருடன் கதாநாயகியாக அறிமுகமானார், அதில் அவர் சிறந்த நடிகைக்கான முதல் பிலிம்பேர் பரிந்துரைப் பெற்றார். இந்த படத்தின் பிரபலமான பாடல் "யாஹூ!  ! சஹாய் கோய் முஜே ஜங்கிள் கே " முகம்மது ரஃபி பாடினார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

சாய்ரா பானு 1966 இல் நடிகர் திலீப் குமாரை மணந்தார்.[4][5] 1963 முதல் 1969 வரை இந்தி திரைப்படத்தில் மூன்றாவது அதிக ஊதியம் கொண்ட நடிகை சாய்ரா பானு. 1971 முதல் 1976 வரை நான்காவது அதிக ஊதியம் பெற்ற நடிகை. 2017ஆம் ஆண்டு நில அபகரிப்பு கும்பல் தங்கள் வீட்டை அபகரிக்க முயல்வதாக டுவிட்டரில் புகார் தெரிவித்தார்.[6] "பிரதமர் மோடி அவர்களை சந்திக்க விரும்புகிறேன். இதற்காக எனக்கு நேரம் ஒதுக்க வேண்டும். முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் தொடர் வாக்குறுதிகளை நம்பி களைப்படைந்துவிட்டேன். எனது கணவர் திலீப் குமாருக்கு சொந்தமாக உள்ள ஒரே ஒரு வீட்டை, நில மோசடியாளரான சமீர் போஜ்வானியிடமிருந்து பாதுகாக்க நீங்கள்தான் உதவ வேண்டும். நீங்கள்தான் எனக்கு கடைசி நம்பிக்கை" என்று கூறினார்.[7]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாய்ரா_பானு&oldid=2986330" இருந்து மீள்விக்கப்பட்டது