பக்கிரிசாமி சந்திரசேகரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பக்கிரிசாமி சந்திரசேகரன் (15 எப்பிரல் 1934) இந்தியாவைச் சேர்ந்த தடயவியல் துறை நிபுணர் ஆவார் [1] இராசிவ் காந்தி கொல்லப் பட்டபோது பெல்ட் பாம் கொண்டு அவர் கொல்லபட்டார் என்பதைக் கண்டறிந்து அறிவித்தார்.[2]

வாழ்க்கைக்குறிப்பு[தொகு]

தமிழ்நாடு நாகப்பட்டினத்தில் பிறந்த சந்திரசேகரன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் மற்றும் முதுஅறிவியல் பட்டம் பெற்றார். தமிழ் நாட்டில் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த தடயவியல் துறையைப் பிரித்து தனித் துறையாக ஆனபிறகு அதன் தலைவராக அமர்த்தப்பட்டார். பன்னாட்டுத் தடயவியல் நிறுவனத் தலைவராக இருந்தார். தடயவியல் துறை தொடர்பான பல கட்டுரைகளை எழுதினார். இவர் எழுதிய  'உலகின் முதல் மனித வெடிகுண்டு' என்னும் நூல் பல நாடுகளில் காவல் துறையில் பாடப் புத்தகங்களாக உள்ளது.[3]

ஜெய்ப்பூர் பல்கலைக்கழக துணைவேந்தராகவும் பணியாற்றியவர். 2000 ஆம் ஆண்டில் இந்திய நடுவணரசு இவருக்குப் பத்மபூசண் விருது வழங்கி கௌரவித்தது.

மேற்கோள்[தொகு]