அதர்வா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அதர்வா
Atharvaa 61st Filmfare Awards South.jpg
பிலிம்பேர் விருதுகளில் அதர்வா
பிறப்புஅதர்வா முரளி
7 மே 1989 (1989-05-07) (அகவை 33)
சென்னை, தமிழ்நாடு
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2010–தற்போது வரை
பெற்றோர்
உறவினர்கள்எஸ். சித்தலிங்கையா (தாத்தா)
டேனியல் பாலாஜி (மாமா)

அதர்வா (7 மே 1989 என்பவர் தமிழ்நாட்டை சேர்ந்த திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2010 ஆம் ஆண்டு முதல் பாணா காத்தாடி (2010), முப்பொழுதும் உன் கற்பனைகள் (2012), பரதேசி (2013) போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல முன்னாள் நடிகர் முரளியின் மகன் ஆவார். 2013 ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிறப்பும் வளர்ப்பும்[தொகு]

அதர்வா 7 மே 1989 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கன்னட குடும்பத்தில் திரைப்பட நடிகர் முரளி மற்றும் சோபனா தம்பதியருக்கு இரண்டாவது குழந்தையாக சென்னையில் பிறந்தார். இவருக்கு காவ்யா என்ற அக்காவும், ஆகாஷ் என்ற தம்பியும் உள்ளார்கள்.[1] இவரின் தாத்தா எஸ். சித்தலிங்கையா என்பவர் முன்னாள் கன்னடத் திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்

திரைப்பட வாழ்க்கை[தொகு]

2009 இல் பத்ரி வெங்கடேஷ் இயக்கிய பாணா காத்தாடி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இந்த திரைப்படம் 2010 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மற்றும் இவரின் நடிப்பு பலரால் அவதானிக்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டு காதல் பரபரப்பூட்டும் திரைப்படமான முப்பொழுதும் உன் கற்பனைகள் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் 100 நாட்கள் வெற்றிகரமாக திரையிடப்பட்டது. 2012 ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழா வில் திரையிடப்பட்டது.[2]

2013 ஆம் ஆண்டு இவருக்கு மிகப்பெரிய படமாக பாலா இயக்கிய பரதேசி திரைப்படம் அமைந்தது. இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது உட்பட பல விருதுகளை வென்றார். அதை தொடர்ந்து இரும்புக் குதிரை (2014), சண்டி வீரன் (2015), கணிதன் (2016)[3], ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் (2017) போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த சண்டி வீரன் என்ற திரைப்படம் வசூல் ரீதியாக இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றது. 2018 ஆம் ஆண்டு நடிகை நயன்தாரா உடன் இணைத்து இமைக்கா நொடிகள்[4] என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் குறிப்புகள்
2010 பாணா காத்தாடி ரமேசு
2011 கோ நடிகர் சிறப்புத் தோற்றம்
2012 முப்பொழுதும் உன் கற்பனைகள் ராமச்சந்திரன்
2013 பரதேசி ராசா
2014 இரும்புக் குதிரை பிரிதிவிராஜ் நாராயணன்
2015 சண்டி வீரன் பாரி
ஈட்டி புகழ்
2016 கணிதன் கௌதம் ராமலிங்கம்
2017 ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் ஜெமினிகணேசன்
2018 செம போத ஆகாதே ரமேஷ்
இமைக்கா நொடிகள் அர்ஜூன்
2019 பூமராங் சிவா/சக்தி
100 சத்யா
கடலக்கொண்ட கணேஷ் அபிலாஷ் தெலுங்குத் திரைப்படம்
2020 குருதி ஆட்டம் படப்பிடிப்பில்
தள்ளி போகாதே
ஒத்தைக்கு ஒத்தை
ருக்குமணி வண்டி வருகுது

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்[தொகு]

ஆண்டு விருது பிரிவு முடிவு மேற்கோள்
பாணா காத்தாடி எடிசன் விருது சிறந்த புதுமுக நடிகர் வெற்றி
விஜய் விருதுகள் சிறந்த புதுமுக நடிகர் பரிந்துரை
பரதேசி ஆனந்த விகடன் சினிமா விருதுகள் சிறந்த நடிகர் வெற்றி [5]
[6]
BFI லண்டன் திரைப்பட விழா சிறந்த முன்னணி நடிகர் பரிந்துரை [7]
11வது சென்னை சர்வதேச திரைப்பட விழா சிறப்பு ஜூரி விருது வெற்றி [8]
எடிசன் விருது சிறந்த புதுமுக நடிகர் வெற்றி [9]
தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது வெற்றி [10]
நோர்வே தமிழ்த் திரைப்பட விழா சிறந்த நடிகர் வெற்றி [11]
டெக்கோஃப்ஸ் விருதுகள் சிறந்த நடிகர் வெற்றி [12]
விஜய் விருதுகள் சிறந்த நடிகர் பரிந்துரை [13]
[14]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Actor Murali in Coffee with Anu -Part 04/04". YouTube. 10 September 2010 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Movie Review : Muppozhudhum Un Karpanaigal". Sify.com. 7 ஏப்ரல் 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 25 October 2013 அன்று பார்க்கப்பட்டது.
  3. Metroplus. "Atharvaa turns producer". The Hindu. 18 January 2020 அன்று பார்க்கப்பட்டது.
  4. "'Imaikkaa Nodigal' review: Nayanthara, Anurag Kashyap are great, but script is lacking". The News Minute. 31 August 2018. 18 January 2020 அன்று பார்க்கப்பட்டது.
  5. "ஆனந்த விகடன் விருதுகள் 2013 – 1" [Ananda Vikatan Awards 2013 – 1]. Ananda Vikatan (Tamil). 8 January 2014. 19 May 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 19 May 2017 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: Unrecognized language (link)
  6. "Ananda Vikatan Awards 2013 Winners". Ananda Vikatan. 19 May 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 19 May 2017 அன்று பார்க்கப்பட்டது.
  7. Pyarilal, Vasanth (21 August 2013). "London international filmmakers film festival nominates director Bala's "Paradesi" (Vagabond) in eight categories". South Scope. 3 July 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 26 May 2017 அன்று பார்க்கப்பட்டது.
  8. "Offbeat films earn laurels at CIFF". தி இந்து. 20 December 2013. http://www.thehindu.com/news/cities/chennai/offbeat-films-earn-laurels-at-ciff/article5479609.ece. 
  9. "Director Atlee, Tapsee Among Recipients of Edison Award". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 17 February 2014. Archived from the original on 19 மே 2017. https://web.archive.org/web/20170519163624/http://www.newindianexpress.com/cities/chennai/2014/feb/17/Director-Atlee-Tapsee-Among-Recipients-of-Edison-Award-576520.html. 
  10. "Winners of 61st Idea Filmfare Awards South". Filmfare. 13 July 2014. 19 May 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 19 May 2017 அன்று பார்க்கப்பட்டது.
  11. "Tamilar Awards 2014: Winners and finalists announced!". Norway Tamil Film Festival Awards. 19 மே 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 19 மே 2017 அன்று பார்க்கப்பட்டது.
  12. "'Paradesi' sweeps Techofes'14 Awards". Sify. 14 February 2014. 19 May 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 19 May 2017 அன்று பார்க்கப்பட்டது.
  13. Seshagiri, Sangeetha (6 July 2014). "Vijay Awards: Ajith's 'Arrambam', Kamal Haasan, Sivakarthikeyan Bag Awards [Winners List"]. International Business Times. http://www.ibtimes.co.in/vijay-awards-ajiths-arrambam-kamal-haasan-sivakarthikeyan-bag-awards-winners-list-603771. 
  14. "8th Vijay Awards". Vijay Awards. Star Vijay.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அதர்வா&oldid=3630194" இருந்து மீள்விக்கப்பட்டது