அஜித் குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அஜித் குமார்
Ajith Cropped Soundarya Wedding.jpg
இயற் பெயர் அஜித் குமார்
பிறப்பு மே 1, 1971 (1971-05-01) (அகவை 43)
இந்தியாவின் கொடி ஹைதராபாத் , இந்தியா
நடிப்புக் காலம் 1992 - தற்போது
துணைவர் ஷாலினி
பிள்ளைகள் அனுஷ்கா மற்றும் மகன்[1]
குறிப்பிடத்தக்க படங்கள் காதல் கோட்டை
வாலி
வரலாறு
பில்லா
மங்காத்தா

அஜித் குமார், (பி. மே 1, 1971) தென்னிந்திய தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். அமர்க்களம் திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை ஷாலினியைக் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனோஸ்கா என்ற பெண் குழந்தை உள்ளது. 2 மார்ச் 2015 அன்று இவர்களுக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது. [2]

காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, பில்லா 2 போன்ற பல வெற்றிப் படங்களில் அஜித்குமார் நடித்துள்ளார். அஜித் குமாரின் ரசிகர்கள் அவரை "அல்டிமேட் ஸ்டார்" என்றும் "தல" என்றும் பட்டப்பெயர்களுடன் அழைக்கிறார்கள். அஜித் குமார், கார் பந்தய வீரராகவும் அறியப்படுகின்றார்.

ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் இந்தியாவின் புகழ்பெற்ற மனிதர்கள் 2012-வது ஆண்டு பட்டியலில் அஜித் குமாருக்கு 61-வது இடம் கிடைத்தது. [3] 2014 ஆவது ஆண்டிற்கான இப்பட்டியலில் 10 இடங்கள் முன்னேறி 51 ஆவது இடத்தைப் பிடித்தார்.[4] மேலும் 2013-வது ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய திரைப்பட நடிகராக வலம் வருகிறார்.[5]

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

அஜித் குமார், இந்தியாவின் ஐதராபாத் நகரில் ஒரு தமிழ் தந்தைக்கும் ,ஒரு சிந்தி தாயிற்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார்.[6] இவர் திரைப்படங்களில் நடிப்பதன் மூலமே தமிழ் பேச கற்றுக்கொண்டார். 1986 இல் உயர்தர கல்வியைப் பூர்த்தி செய்யாமலே கல்வியை இடைநிறுத்தினார். தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகும் முன்னர், 1992 இல் பிரேம புஸ்தகம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார். இந்தப் படத்தில் இவருக்கு சிறந்த புதுமுகத்திற்கான விருது கிடைத்தது.

இதன் பின்னர் தான் அமராவதி என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் படம் வெற்றி இல்லை. அடுத்த ஆண்டில் பாசமலர்கள், பவித்ரா, ராஜாவின் பார்வையிலே ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இதில் பவித்ரா திரைப்படம் இவருக்குக் குறிப்பிடத்தக்க திரைப்படமாக அமைந்தது.

அஜித் குமாரின் முதல் வெற்றித் திரைப்படம் ஆசை திரைப்படமாகும். இடையில் மோட்டார் பந்தயம் ஒன்றில் போட்டியிட்டுப் படுகாயமடைந்தார். இதனால் நடிப்பில் தடை ஏற்பட்டது. அதன் பின்னர் சரணின் காதல் மன்னன் எனும் திரைப்படத்தில் நடித்தார்.

சர்ச்சைகள்[தொகு]

பிப்ரவரி 06, 2010 அன்று நிகழ்ந்த கருணாநிதி பாராட்டு விழாவில் நடிகர் அஜித்குமார் பேசும்போது திரையுலகினரை அரசியல் காரணங்களுக்காகத் திரைப்பட விழாக்களில் பங்கெடுக்குமாறு சிலர் மிரட்டுவதாகப் பகிங்கரமாகப் புகார் கூறினார். இதனால் அஜித்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. இந்த நிகழ்ச்சிகளால் மன வருத்தம் அடைந்த அஜித் மீண்டும் கார்ப்பந்தயத்தில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டினார்.

உதவி[தொகு]

பல நல்ல காரியங்களுக்கு உதவிகள் செய்துள்ள இவர் 2014ஆம் ஆண்டு தனது வீட்டில் வேலை செய்பர்கள் 12 பேருக்கு வீடுகள் கட்டிக்கொடுத்து உதவி செய்துள்ளார். [7]

இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம்[தொகு]

2013 ஆவது ஆண்டில் சென்னையில் தனது BMW S1000RR ரக துள்ளுந்தில் அமர்ந்திருக்கும் அஜித் குமார்

பாதுகாப்பான பயணத்தை வலியுறுத்தி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் 2013 ஆகஸ்டு 18 அன்று சென்னை முதல் பெங்களூர் வரையிலான இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றார்.[8]

விருதுகள்[தொகு]

 • அஜித் குமார் தாம் நடித்த முதல் தெலுங்கு படத்திற்காக (பிரேம புஸ்தகம்) பரத்முனி ஆர்ட் அகாடமியின் சிறந்த புதுமுக நடிகருக்கான விருதைப் பெற்றுள்ளார்.
 • 1999 ஆம் ஆண்டு அஜித் குமார் வாலி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது, சினிமா எக்ஸ்பிரஸ் விருது மற்றும் தினகரன் சினிமா விருதைப் பெற்றுள்ளார்.
 • 2000ஆம் ஆண்டு முகவரி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருதைப் பெற்றுள்ளார்.
 • 2001 ஆம் ஆண்டு சிறப்பு நடிகருக்கான மாநில விருதை பூவெல்லாம் உன் வாசம் படத்திற்காக வென்றுள்ளார்.
 • 2002ஆம் வருடம் வில்லன் படத்திற்காக சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது மற்றும் தினகரன் சினிமா விருதைப் பெற்றுள்ளார்.
 • தென் இந்திய சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை இருமுறைப் பெற்றுள்ளார். கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றுள்ளார்.
 • 2011 ஆம் ஆண்டு மங்காத்தா திரைப்படத்தில் நடித்ததற்காக விஜய் அவார்ட்ஸின் சிறந்த வில்லன் மற்றும் விருப்பமான நாயகன் என இரண்டு விருதுகளை பெற்றுள்ளார்.

தமிழக அரசு திரைப்பட விருதுகள்[தொகு]

வென்றவை

பிலிம்பேர் விருதுகள்[தொகு]

வென்றவை
பரிந்துரைக்கப்பட்டது

விஜய் விருதுகள்

 • 2011 ஆம் ஆண்டு மங்காத்தா திரைப்படத்தில் நடித்ததற்காக விஜய் அவார்ட்ஸின் சிறந்த வில்லன் மற்றும் விருப்பமான நாயகன் (ஃபேவரிட்ஹீரோ) என இரண்டு விருதுகளை பெற்றுள்ளார்.
வென்றவை
பரிந்துரைக்கப்பட்டது

பிற விருதுகள்[தொகு]

வென்றவை

திரைப்பட விபரம்[தொகு]

நடித்துள்ள திரைப்படங்கள்[தொகு]

எண் ஆண்டு படம் பாத்திரம் தயாரிப்பு குறிப்புகள்
1 1992 பிரேம புஸ்தகம் சித்தார்த் தெலுங்கு (அறிமுகம்)
2 1993 அமராவதி அர்ஜூன் சோழா கிரியேசன்ஸ் தமிழ் (அறிமுகம்)
3 1994 பாசமலர்கள் குமார் நட்புக்காக
4 பவித்ரா அசோக் தனுஜா பிலிம்ஸ்
5 1995 ராஜாவின் பார்வையிலே சந்துரு நட்புக்காக
6 ஆசை ஜீவானந்தம் ஆலயம்
7 1996 வான்மதி கிருஷ்ணா
8 கல்லூரி வாசல் வசந்த்
9 மைனர் மாப்பிள்ளை சுனில் விக்டரி மூவீஸ்
10 காதல் கோட்டை சூர்யா சிவசக்தி மூவி மேக்கர்ஸ்
11 1997 நேசம் நாதன் தனுஜா பிலிம்ஸ்
12 ராசி தினேஷ் குமார் நிக் ஆர்ட்ஸ்
13 உல்லாசம் குரு அமிதாப் பச்சன் கார்ப்பரேஷன்
14 பகைவன் பிரபு விஷ்வாஸ் பிலிம்ஸ்
15 ரெட்டை ஜடை வயசு சிவகுமார் பாக்யம் சினி கம்பைன்ஸ்
16 1998 காதல் மன்னன் சிவா வெங்கடேஸ்வராலயம்
17 அவள் வருவாளா ஜீவா ஸ்ரி விஜயமாத்ருகா பிலிம்ஸ்
18 உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் சஞ்சய் லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் நட்புக்காக
19 உயிரோடு உயிராக அஜய்
20 1999 தொடரும் ஆனந்த் ஸ்ரி தேவி மூவி மேக்கர்ஸ்
21 உன்னை தேடி ரகு லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ்
22 வாலி சிவா, தேவா நிக் ஆர்ட்ஸ் இரட்டை வேடம்
23 ஆனந்த பூங்காற்றே ஜீவா ரோஜா கம்பைன்ஸ்
24 நீ வருவாய் என சுப்ரமணி சூப்பர் குட் பிலிம்ஸ் நட்புக்காக
25 அமர்க்களம் வாசு வெங்கடேஸ்வராலயம்
26 2000 முகவரி ஸ்ரீதர் நிக் ஆர்ட்ஸ்
27 கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் மனோகர் வி. கிரியேஷன்ஸ்
28 உன்னை கொடு என்னை தருவேன் சூர்யா சூப்பர் குட் பிலிம்ஸ்
29 2001 தீனா தீனா விஜயம் சினி கம்பைன்ஸ்
30 சிட்டிசன் அறிவானந்தம் ,சுப்ரமணி நிக் ஆர்ட்ஸ்
31 பூவெல்லாம் உன் வாசம் சின்னா ஆஸ்கர் பிலிம்ஸ்
32 அசோகா சுஷீமா டிரீம்ஸ் அன்லிமிடட் இந்தி (அறிமுகம்), நட்புக்காக
33 சாம்ராட் அசோகா சுஷீமா டிரீம்ஸ் அன்லிமிடட் நட்புக்காக
34 2002 ரெட் ரெட் நிக் ஆர்ட்ஸ்
35 ராஜா ராஜா செரீன் மூவி மேக்கர்ஸ்
36 வில்லன் சிவா, விஷ்ணு நிக் ஆர்ட்ஸ் இரட்டை வேடம்
37 2003 என்னை தாலாட்ட வருவாளா சதீஷ் நட்புக்காக
38 ஆஞ்சநேயா பரமகுரு நிக் ஆர்ட்ஸ்
39 2004 ஜனா ஜனா ரோஜா கம்பைன்ஸ்
40 அட்டகாசம் குரு, ஜீவா விஜயம் சினி கம்பைன்ஸ் இரட்டை வேடம்
41 2005 ஜீ வாசு நிக் ஆர்ட்ஸ்
42 2006 பரமசிவன் பரமசிவன் (சுப்ரமணிய சிவா ) * கனகரத்னா மூவீஸ்
* சாம்ராட் பிலிம் கார்ப்பரேஷன்
பி. வாசு இயக்கத்தில்
43 திருப்பதி திருப்பதி ஏ . வி. எம். புரொடக்சன்ஸ்
44 வரலாறு சிவஷங்கர், விஷ்ணு, ஜீவா நிக் ஆர்ட்ஸ் மூன்று வேடங்கள்
45 2007 ஆழ்வார் சிவா ஸ்ரி ராஜகாளியம்மன் பிலிம்ஸ்
46 கிரீடம் சக்திவேல் ராஜராஜன் சுஜாதா சினி ஆர்ட்ஸ்
47 பில்லா 2007 டேவிட் பில்லா, சரவணவேலு ஆனந்தா பிக்சர்ஸ் சர்க்கியூட் இரட்டை வேடம்
48 2008 ஏகன் சிவா ஐங்கரன் இண்டர்நேஷனல்
49 2010 அசல் சிவா, ஜீவானந்தம் சிவாஜி புரொடக்ஷன்ஸ் இரட்டை வேடம், திரைக்கதை
50 2011 மங்காத்தா விநாயக் மகாதேவன் கிலௌடு நைன் மூவீஸ்
51 2012 பில்லா 2 டேவிட் பில்லா சுரேஷ் பாலாஜி & இன் என்டெர்டெயின்மென்ட் சக்ரி இயக்கத்தில்
52 இங்கிலிஷ் வெங்கிலிஷ் கௌரவ தோற்றத்தில்
53 2013 ஆரம்பம் அசோக் குமார்
54 2014 வீரம் விநாயகம் விஜயா புரொடக்சன்சு
55 2015 என்னை அறிந்தால் சத்யதேவ்
56 சிறுத்தை சிவா உடனான திரைப்படம் முன்தயாரிப்பு

வர்த்தக விளம்பரங்கள்[தொகு]

அஜித் குமார் திரைப்படங்கள் மட்டுமின்றி சில வர்த்தக விளம்பரங்களிலும் நடித்துள்ளார். தற்போது விளம்பரங்களில் நடிப்பதை முற்றிலும் தவிர்த்து விட்டார். இது இவர் நடித்துள்ள வர்த்தக விளம்பரங்களின் பட்டியலாகும்.

எண் ஆண்டு விளம்பரம் பாத்திரம் தயாரிப்பு குறிப்புகள்
1 மியாமி குசன் [9] -
2 2005 நெஸ்லே சன்ரைஸ் - ராஜீவ் மேனன் நடிகை சிம்ரனுடன் இணைந்து நடித்தது. [10]

வெளி இணைப்புகள்[தொகு]

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

 1. [1]
 2. அஜித் குமாருக்கு ஆண் குழந்தை
 3. இந்தியாவின் புகழ்பெற்ற மனிதர்கள் - ஃபோர்ப்ஸ் 2012
 4. "2014 Ajith Forbes Ranking".
 5. கூகுளில் அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய நடிகர்
 6. அஜித் குமார் உடனான நேர்காணல்
 7. வீட்டில் வேலை செய்யும் 12 பேருக்கு சொந்த வீடு- நடிகர் அஜீத் கட்டி கொடுத்தார்
 8. அஜித்தின் விழிப்புணர்வு பேரணி
 9. "மியாமி குசன்". யூ டியூப். பார்த்த நாள் 2014 திசம்பர் 13.
 10. "நெஸ்லே சன்ரைஸ்". யூ டியூப்.காம். பார்த்த நாள் 2014 திசம்பர் 13.
"http://ta.wikipedia.org/w/index.php?title=அஜித்_குமார்&oldid=1815990" இருந்து மீள்விக்கப்பட்டது