அசல் (திரைப்படம்)
அசல் | |
---|---|
![]() | |
இயக்கம் | சரண் |
தயாரிப்பு | ராம்குமார் பிரபு |
கதை | சரண் யூகி சேது |
கதைசொல்லி | சரண் |
இசை | பரத்வாஜ் வை - கின்ஸ் |
நடிப்பு | அஜித் குமார் சமீரா ரெட்டி பாவனா பிரபு ராஜீவ் கிருஷ்ணா சம்பத் பிரதிப் ராவட் யூகி சேது |
ஒளிப்பதிவு | பிரசாந் |
படத்தொகுப்பு | அந்தோனி |
விநியோகம் | சிவாஜி பிலிம்ஸ் |
வெளியீடு | பெப்ரவரி 5, 2010 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | 40 கோடி |
மொத்த வருவாய் | 60 கோடி |
அசல் (ஒலிப்பு (உதவி·தகவல்)) சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில், சரணின் இயக்கத்தில் பெப்ரவரி 5,2010 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். அஜித் குமார், சமீரா ரெட்டி, பாவனா மற்றும் பிரபு ஆகியோர் இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். சரண் காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம் ஆகிய அஜித்தின் வெற்றி படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது, இதனால் ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இத்திரைப்படத்தின் கதையை யூகி சேது எழுதியுள்ளார். இவர் ஏற்கனவே அஜித் குமார் நடித்த வில்லன் திரைப்படத்திற்கு கதை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வகை[தொகு]
வர்த்தக, மசாலாப்படம்
பாத்திரங்களும் தொழினுட்பக் கலைஞர்களும்[தொகு]
பாத்திரங்கள்[தொகு]
நடிகர்கள் | பாத்திரம் |
---|---|
அஜித் குமார் | சிவா மற்றும் சிவாவின் தந்தை |
பிரபு | மிராசி |
சமீரா ரெட்டி | சாரா |
பாவனா | சுலபா |
யூகி சேது | டொண் சமோசா |
சுரேஷ் | டேணியல் தர்மராஜ் |
சம்பத் | சேம் |
ராஜீவ் கிருஷ்ணா[1] | விக்கி |
பிரதிப் ராவட் | கலிவர்தன் |
கெலி டொர்ஜு | செட்டி |
ஆதித்யா | |
கரண் மீயோ சப்புரு |
தொழிநுட்ப கலைஞர்கள்[தொகு]
சிவாஜி பிலிம்ஸ் தயாரித்த படத்தில், அஜித் ஜோடியாக சமீரா ரெட்டி மற்றும் பாவனா நடித்துள்ளனர். சரணின் பிற படங்கள் போலவே இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். நீரவ்சாவின் அசிஸ்டெண்ட் பிரசாந்த் படத்துக்கு ஒளிப்பதிவு. விவேக் கருணாகரன் காஸ்ட்யூம். படத்தை தயாரித்ததுடன் பிரபுவும் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். முதல் மூன்று படங்களுக்கு இசையமைத்த பரத்வாஜ் நான்காவது முறையாக அஜித், சரண் கூட்டணியுடன் ஒன்றிணைந்த திரைப்படமாகும்.
பாடல்கள்[தொகு]
இப்படத்திற்கு ஐந்தாவது முறையாக அஜித்துடன் இணைந்த பரத்வாஜ் ஸ்காட்லாந்து இசை குழுவினரான வை - கின்ஸ் உடன் சேர்ந்து இசை அமைத்துள்ளார்.
எண் | பாடல் | பாடியவர்கள் | வரிகள் |
---|---|---|---|
1 | அசல் | சுனிதா மேணன் | வைரமுத்து |
2 | குதிரைக்கு தெரியும் | சூர்முகி, ஹீரீ சரன் | வைரமுத்து |
3 | டொட்டொடய்ங் | முகேஷ், ஜணனி | வைரமுத்து |
4 | எங்கே எங்கே | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | வைரமுத்து |
5 | துஷ்யந்தா | சூர்முகி, குமரன் | வைரமுத்து |
6 | எம் தந்தை | பரத்வாஜ் | வைரமுத்து |
7 | எங்கே எங்கே | கார்த்திகேயன் மற்றும் குழுவினர் | வைரமுத்து |
படப்பிடிப்பு[தொகு]
படப்பிடிப்பு 2009 சூன் ஆரம்பித்து 31ம் திகதி டிசம்பர் நிறைவடைந்தது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ வெப்துனியா (2009). "அசல் வில்லன்". Tamil webdunia. பார்த்த நாள் புதன், 3 ஜூன் 2009.