பிரபு (நடிகர்)
பிரபு | |
|---|---|
| பிறப்பு | மகாபிரபு (பிரபு) 25 திசம்பர் 1956[1] |
| மற்ற பெயர்கள் | இளைய திலகம், பிரபு கணேசன் |
| பணி | நடிகர், தயாரிப்பாளர் |
| செயற்பாட்டுக் காலம் | 1982– தற்போது வரை |
| உயரம் | 5 அடி 8 அங்குலம் |
| பெற்றோர் | சிவாஜி கணேசன் கமலா கணேசன் |
| வாழ்க்கைத் துணை | புனிதா பிரபு |
| பிள்ளைகள் | விக்ரம் பிரபு ஐஸ்வர்யா பிரபு |
| உறவினர்கள் | ராம்குமார் கணேசன் (அண்ணன்) |
பிரபு (Prabhu) (பிறப்பு: 27 திசம்பர் 1956) தமிழகத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்தவற்றுள் தமிழ்மொழி திரைப்படங்களே அதிகம். இவர் நடிகர் சிவாஜி கணேசனின் மகன் ஆவார். சங்கிலி திரைப்படத்தில் இருந்து நடித்துவரும் இவர் இயக்குநர் பி. வாசுவின் இயக்கத்தில் உருவான சின்னத் தம்பி திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் திரைப்பட விருதைப் பெற்றார். கும்கி, அரிமா நம்பி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர் விக்ரம் பிரபு இவரது மகனாவார்.
நடிப்பு
[தொகு]பெங்களூருவில் உள்ள பிஷப் காா்டன் பள்ளியில் படித்து முடித்த பிறகு, இவரது சித்தப்பா வி. சி. சண்முகம் தனது அண்ணன் சிவாஜி கணேசனின் பல திரைப்படங்களின் கால்ஷீட் மற்றும் அவர் சிவாஜியின் நடிப்பு கதாபாத்திர ஆலோசனைகள் தீர்மானித்தல் மற்றும் சிவாஜி நடிக்கும் பட தயாரிப்பு தளங்களில் அவருடன் இணைந்து நிர்வாக தயாரிப்பாளராகப் பணியாற்றினார். திரைப்படத் தயாரிப்பில் உள்ள நுணுக்கங்களை இவர் சிறந்த முறையில் தனது சித்தப்பாவிடமே கற்றார். பிரபுவின் தந்தையான நடிகர் சிவாஜி கணேசன், பிரபு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பத்தில் தயக்கம் காட்டினார். ஆனால் சித்தப்பா சண்முகத்தின் உறுதியான உதவியால் பிரபுவின் நடிப்புத் திறமையைப் பார்த்து பல தயாரிப்பாளர்களிடம் இருந்து புதிய திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்புகள் வந்தன.[2][3][4]
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]பிரபுவின் பெற்றோர் நடிகர் சிவாஜி கணேசன், கமலா ஆகியோருக்கு 3வது மகனாகப் பிறந்தார்.[5][6] இவரது அண்ணன் ராம்குமார், திரைப்படத் தயாரிப்பாளராவார். இவருக்கு சாந்தி என்ற அக்காவும், தேன்மொழி என்ற ஒரு தங்கையும் உள்ளனர். இவர் புனிதா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா என இரு பிள்ளைகள் உள்ளனர். இவரது மகனான விக்ரம் பிரபு, 2012-வது ஆண்டில் வெளியான கும்கி திரைப்படத்தின் வாயிலாக நடிகராக அறிமுகமானார்.[7]
குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்
[தொகு]- சின்ன தம்பி
- குரு சிஷ்யன் 1988
- சந்திரமுகி
- வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்
- சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்
- அக்னி நட்சத்திரம்
- அஞ்சலி
- பந்தா பரமசிவம்
- தாமிரபரணி
- பில்லா 2007
- அரங்கேற்ற வேளை
- ராவணன்
- அயன்
- சிலம்பாட்டம்
- 3
நடித்த திரைப்படங்கள்
[தொகு]1982 முதல் 1989 வரை
[தொகு]| ஆண்டு | எண் | திரைப்படம் | கதாபாத்திரம் | மொழி | குறிப்புகள் |
|---|---|---|---|---|---|
| 1982 | 1 | சங்கிலி | தமிழ் | ||
| 2 | அதிசய பிறவிகள் | தமிழ் | |||
| 3 | லாட்டரி டிக்கெட் | தமிழ் | |||
| 4 | கோழி கூவுது | தமிழ் | |||
| 5 | நலந்தானா | தமிழ் | |||
| 1983 | 6 | சூரப்புலி | தமிழ் | ||
| 7 | ராகங்கள் மாறுவதில்லை | தமிழ் | |||
| 8 | முத்து எங்கள் சொத்து | தமிழ் | |||
| 9 | வெள்ளை ரோஜா | தமிழ் | |||
| 10 | மிருதங்க சக்கரவர்த்தி | தமிழ் | |||
| 11 | கே | தமிழ் | |||
| கைராசிக்காரன் | ராதா | தமிழ் | |||
| சந்திப்பு | தமிழ் | ||||
| சூரக்கோட்டை சிங்கக்குட்டி | தமிழ் | ||||
| நீதிபதி | தமிழ் | ||||
| 1984 | எழுதாத சட்டங்கள் | தமிழ் | |||
| சரித்திர நாயகன் | தமிழ் | ||||
| தராசு | தமிழ் | ||||
| உங்க வீட்டு பிள்ளை | தமிழ் | ||||
| நியாயம் | தமிழ் | ||||
| பொழுது விடிஞ்சாச்சு | தமிழ் | ||||
| புதிய சங்கமம் | தமிழ் | ||||
| பிரியமுடன் பிரபு | தமிழ் | ||||
| ராஜா வீட்டு கண்ணுக்குட்டி | தமிழ் | ||||
| திருப்பம் | தமிழ் | ||||
| சிம்ம சொப்பனம் | தமிழ் | ||||
| இருமேதைகள் | தமிழ் | ||||
| 1985 | கன்னிராசி | லட்சுமிபதி | தமிழ் | ||
| அடுத்தாத்து ஆல்பர்ட் | ஆல்பர்ட் | தமிழ் | |||
| நீதியின் நிழல் | தமிழ் | ||||
| நம்பினார் கெடுவதில்லை | தமிழ் | ||||
| ராஜரிஷி | தமிழ் | ||||
| நேர்மை | தமிழ் | ||||
| 1986 | சாதனை | தமிழ் | |||
| ராஜா நீ வாழ்க | தமிழ் | ||||
| பாலைவன ரோஜாக்கள் | தமிழ் | ||||
| அறுவடை நாள் | முத்துவேல் | தமிழ் | |||
| நாளெல்லாம் பௌர்ணமி | தமிழ் | ||||
| 1987 | சின்னபூவே மெல்லப்பேசு | டேவிட் | தமிழ் | ||
| சின்னத்தம்பி பெரியதம்பி | சின்னத்தம்பி | தமிழ் | |||
| காவலன் அவன் கோவலன் | தமிழ் | ||||
| ஆனந்த் | ஆனந்த் | தமிழ் | |||
| பூப்பூவா பூத்திருக்கு | தமிழ் | ||||
| மேகம் கறுத்திருக்கு | தமிழ் | ||||
| வைராக்கியம் | தமிழ் | ||||
| இவர்கள் வருங்காலத் தூண்கள் | தமிழ் | ||||
| முப்பெரும் தேவியர் | தமிழ் | ||||
| அஞ்சாத சிங்கம் | தமிழ் | ||||
| 1988 | அண்ணாநகர் முதல் தெரு | தமிழ் | சிறப்புத் தோற்றம் | ||
| குரு சிஷ்யன் | பாபு | தமிழ் | ரஜினிகாந்த் உடன் முதல் திரைப்படம் | ||
| உரிமை கீதம் | தியாகு | தமிழ் | |||
| என் உயிர் கண்ணம்மா | தமிழ் | ||||
| என் தங்கச்சி படிச்சவ | தமிழ் | ||||
| மனசுக்குள் மத்தாப்பூ | சேகர் | தமிழ் | தாலவட்டம் மலையாளப் படத்தின் மறுஆக்கம் | ||
| தர்மத்தின் தலைவன் | ராஜு | தமிழ் | |||
| அக்னி நட்சத்திரம் | கௌதம் | தமிழ் | |||
| ரத்த தானம் | தமிழ் | ||||
| மணமகளே வா | தமிழ் | ||||
| பூவிழி ராஜா | ராஜா | தமிழ் | |||
| ஒருவர் வாழும் ஆலயம் | தமிழ் | ||||
| கலியுகம் | தமிழ் | ||||
| 1989 | நாளைய மனிதன் | தமிழ் | |||
| வெற்றி விழா | விஜய் | தமிழ் | |||
| பொண்ணு பாக்க போறேன் | தமிழ் | ||||
| நினைவுச் சின்னம் | முத்திகல் ராசு | தமிழ் | |||
| வரம் | தமிழ் | ||||
| பிள்ளைக்காக | தமிழ் | ||||
| வெற்றி மேல் வெற்றி | தமிழ் | ||||
| உத்தம புருஷன் | ரகு | தமிழ் | |||
| மூடு மந்திரம் | தமிழ் |
1990களில்
[தொகு]| ஆண்டு | எண் | திரைப்படம் | கதாபாத்திரம் | மொழி | குறிப்புகள் |
|---|---|---|---|---|---|
| 1990 | காவலுக்குக் கெட்டிக்காரன் | திலீப் | தமிழ் | ||
| ராஜா கைய வெச்சா | ராஜா | தமிழ் | |||
| மை டியர் மார்த்தாண்டன் | மார்த்தாண்டன் | தமிழ் | |||
| அரங்கேற்ற வேளை | சிவராம கிருஷ்ணன் | தமிழ் | |||
| நல்ல காலம் பொறந்தாச்சு | தமிழ் | ||||
| உறுதிமொழி | தமிழ் | ||||
| சத்தியவாக்கு | தமிழ் | ||||
| அஞ்சலி | தமிழ் | சிறப்புத் தோற்றம் | |||
| 1991 | தாலாட்டு கேக்குதம்மா | ராசைய்யா | தமிழ் | ||
| கும்பக்கரை தங்கய்யா | தங்கையா | தமிழ் | |||
| ஆயுள் கைதி | சேகர் | தமிழ் | |||
| வெற்றிக்கரங்கள் | தமிழ் | ||||
| சின்னத் தம்பி | சின்னத் தம்பி | தமிழ் | தமிழக அரசின் திரைப்பட விருது - சிறந்த நடிகர் | ||
| கிழக்குக் கரை | முரளி | தமிழ் | |||
| இரும்பு பூக்கள் | தமிழ் | சிறப்புத் தோற்றம் | |||
| 1992 | மன்னன் | அவராகவே | தமிழ் | சிறப்புத் தோற்றம் | |
| பாண்டித்துரை | பாண்டித்துரை | தமிழ் | |||
| நாங்கள் | கீர்த்தி | தமிழ் | |||
| சின்னவர் | முத்து | தமிழ் | |||
| நாளைய செய்தி | தமிழ் | ||||
| செந்தமிழ் பாட்டு | பாலசுப்ரமணியம் | தமிழ் | |||
| 1993 | சின்ன மாப்ளே | தங்கவேலு | தமிழ் | ||
| உத்தமராசா | தமிழ் | ||||
| 97 | மறவன் | தமிழ் | |||
| 98 | தர்மசீலன் | தமிழ் செல்வன், தர்மசீலன் |
தமிழ் | ||
| 99 | உழவன் | தமிழ் | |||
| 1994 | 100 | ராஜகுமாரன் | ராஜகுமாரன் | தமிழ் | 100வது திரைப்படம் |
| டூயட் | குணா | தமிழ் | |||
| பிரியங்கா | அர்ஜுன் | தமிழ் | |||
| வியட்நாம் காலனி | வெங்கடகிருஷ்ணன் | தமிழ் | வியட்நாம் காலனி மலையாள
திரைப்படத்தின் மறுஆக்கம் | ||
| தலைவனின் அருள் உள்ளம் | தமிழ் | ||||
| ஜல்லிக்கட்டுக்காளை | கோபாலகிருஷ்ணன் | தமிழ் | |||
| 1995 | கட்டுமரக்காரன் | முத்தழகு | தமிழ் | ||
| பசும்பொன் | தங்கபாண்டி | தமிழ் | |||
| சின்ன வாத்தியார் | சந்திரமௌலி/அரவிந்த் | தமிழ் | |||
| பெரிய குடும்பம் | தமிழ் | ||||
| மிஸ்டர். மெட்ராஸ் | முருகன் | தமிழ் | |||
| சீதனம் | முத்து மாணிக்கம் | தமிழ் | |||
| 1996 | பரம்பரை | பரமசிவம் | தமிழ் | ||
| காலாபானி | முகுந்த் ஐயங்கார் | மலையாளம் | |||
| சிவசக்தி | சிவா | தமிழ் | |||
| பாஞ்சாலங்குறிச்சி | கிச்சா | தமிழ் | |||
| 1997 | மாப்பிள்ளை கவுண்டர் | தமிழ் | |||
| தேடினேன் வந்தது | வேலுமணி /கோபாலகிருஷ்ணன் | தமிழ் | |||
| பெரியதம்பி | சிவா | தமிழ் | |||
| 1998 | பொன்மனம் | ஆனந்தன் | தமிழ் | ||
| என் உயிர் நீதானே | தமிழ் | ||||
| இனியவளே | பிரபாகர் | தமிழ் | |||
| 1999 | கும்மிப்பாட்டு | தமிழ் | |||
| திருப்பதி ஏழுமலை வெங்கடேசா | வெங்கடேசன் | தமிழ் | |||
| சுயம்வரம் | ஆவுடையப்பன் | தமிழ் | |||
| மனம் விரும்புதே உன்னை | சண்முகம் | தமிழ் |
2000 முதல் 2009 வரை
[தொகு]| ஆண்டு | எண் | திரைப்படம் | கதாபாத்திரம் | மொழி | குறிப்புகள் |
|---|---|---|---|---|---|
| 2000 | திருநெல்வேலி | துளசி | தமிழ் | ||
| தை பொறந்தாச்சு | கிரி | தமிழ் | |||
| கந்தா கடம்பா கதிர்வேலா | கந்தா | தமிழ் | |||
| பட்ஜெட் பத்மநாபன் | பத்மநாபன் | தமிழ் | |||
| வண்ணத் தமிழ்ப்பாட்டு | பூபதி, ரத்னவேல் ராஜா | தமிழ் | |||
| 2001 | தாலி காத்த காளியம்மன் | சந்திரபோஸ் | தமிழ் | ||
| மிடில் கிளாஸ் மாதவன் | மாதவன் | தமிழ் | |||
| சூப்பர் குடும்பம் | அருண் | தமிழ் | |||
| மிட்டா மிராசு | செல்லையா | தமிழ் | |||
| 2002 | மலையாளி மாமனு வணக்கம் | பெரியகுளம் கண்ணையா | மலையாளம் | கவுண்டர் வீட்டு மாப்பிள்ளை என தமிழில் மறுஆக்கம் | |
| சார்லி சாப்ளின் | ராமகிருஷ்ணன் | தமிழ் | சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் திரைப்பட விருது | ||
| 2003 | வார் அன் லவ் | சரத்சந்திரன் | மலையாளம் | காலம் என தமிழில் மொழிமாற்றம் | |
| எஸ் மேடம் | சிவராமகிருஷ்ணன் | தமிழ் | |||
| பந்தா பரமசிவம் | பரமன் | தமிழ் | |||
| 2004 | கண்ணிணும் கண்ணடிக்கும் | அவராகவே | மலையாளம் | சிறப்புத் தோற்றம் | |
| வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் | வத்தி | தமிழ் | |||
| 2005 | சந்திரமுகி | செந்தில்நாதன் | தமிழ் | ||
| 2006 | பாசக்கிளிகள் | சேதுபதி | தமிழ் | ||
| குஸ்தி | ஜீவநாதன் | தமிழ் | |||
| உனக்கும் எனக்கும் | முத்துபாண்டி | தமிழ் | |||
| 2007 | தாமிரபரணி | சரவண பெருமாள் | தமிழ் | ||
| வேகம் | தமிழ் | ||||
| பில்லா | ஜெயபிரகாஷ் டிஜிபி | தமிழ் | |||
| 2008 | குசேலன் | செந்தில்நாதன் | தமிழ் | சிறப்புத் தோற்றம் | |
| சிலம்பாட்டம் | முத்துவேல் | தமிழ் | |||
| 2009 | அ ஆ இ ஈ | சுப்ரமணியம் | தமிழ் | ||
| அயன் | தாஸ் | தமிழ் | பரிந்துரை - சிறந்த துணை நடிகருக்கான
பிலிம்பேர் விருது – தமிழ் | ||
| மலை மலை | பழனிவேல் | தமிழ் | |||
| கந்தசாமி | பரந்தாமன் | தமிழ் |
2010 முதல் தற்போது வரை
[தொகு]| ஆண்டு | எண், | திரைப்படம் | கதாபாத்திரம் | மொழி | குறிப்புகள் | |
|---|---|---|---|---|---|---|
| 2010 | அசல் | மிராசி | தமிழ் | |||
| தம்பிக்கு எந்த ஊரு | குமாரசாமி | தமிழ் | ||||
| ப்ரமணி | வர்க்கிசான் ஜோசப் | மலையாளம் | சிறப்புத் தோற்றம் | |||
| டார்லிங் | ஹனுமந்த ராவ் | தெலுங்கு | ||||
| மாஞ்சா வேலு | கௌதம் கணேஷ் | தமிழ் | சிறப்புத் தோற்றம் | |||
| மகனே என் மருமகனே | அவராகவே | தமிழ் | சிறப்புத் தோற்றம் | |||
| ராவணன் | சிங்கரசன் | தமிழ் | ||||
| தில்லாலங்கடி | கிருஷ்ணாவின் அப்பாவாக | தமிழ் | ||||
| பெஸ்ட் ஆப் லக் | விநாயக நாயக்கர் | மலையாளம் | ||||
| ஆரஞ்சு | ஜானுவின் அப்பாவாக | தெலுங்கு | ||||
| 2011 | பாஸ் | சேதுநாதன் ஐயர் | கன்னடம் | |||
| தம்பிக்கோட்டை | சண்முகம் | தமிழ் | ||||
| ஆடுபுலி | பாக்யநாதன் | தமிழ் | ||||
| பொன்னர் சங்கர் | சோழ மன்னன் | தமிழ் | ||||
| சக்தி | மகாதேவராயர் | தெலுங்கு | ||||
| சங்கரன் கோயில் | தமிழ் | |||||
| பெஜவாடா | காளி பிரசாத் | தெலுங்கு | ||||
| 2012 | 3 | ராமுவின் அப்பாவாக | தமிழ் | |||
| தருவு | யமா | தெலுங்கு | ||||
| ஊ கொடத்தாரா? உலிக்கி படத்தாரா? | ராயுடு | தெலுங்கு | ||||
| மிரட்டல் | சங்கர் தாதா | தமிழ் | ||||
| தூனீகா தூனீகா | ராமசாமி | தெலுங்கு | ||||
| தேனிகைனா ரெடி | வீர நரசிம்ம நாயுடு | தெலுங்கு | ||||
| 2013 | ஓங்கோல் கீதா | நாராயணா | தெலுங்கு | |||
| ஷேடோ | தெலுங்கு | |||||
| டிராகுலா 2012 | மலையாளம் | |||||
| ஆல் இன் ஆல் அழகு ராஜா | முத்துகிருஷ்ணன் | தமிழ் | ||||
| 2014 | என்னமோ நடக்குது | பார்த்திபன் | தமிழ் | |||
| என்னமோ ஏதோ | சக்கரவர்த்தி | தமிழ் | ||||
| உயிருக்கு உயிராக | ரங்கசாமி | தமிழ் | ||||
| திரிஷ்யா | பண்ணீ ராவ் | கன்னடம் | ||||
| கத்தி | தமிழ் | |||||
| கயல் | தமிழ் | |||||
| பவர் | கன்னடம் | |||||
| 2015 | காசு பணம் துட்டு | தமிழ் | ||||
| ஆம்பள | தமிழ் | |||||
| காக்கி சட்டை | தமிழ் | |||||
| எதிரி எண் 3 | தமிழ் | |||||
| புலி | தமிழ் | |||||
| அப்பாடக்கரு | தமிழ் | |||||
| தானா | தமிழ் | |||||
| 2016 | தெறி | சிபி சக்ரவர்த்தி | தமிழ் | |||
| வெற்றிவேல் | ராஜமாணிக்கம் | தமிழ் | ||||
| உன்னோடு கா | ஜெயவேல் | தமிழ் | ||||
| மீன் குழம்பும் மண் பானையும் | அண்ணாமலை | தமிழ் | 200வது படம் | |||
| 2017 | முப்பரிமாணம் | அவராகவே | தமிழ் | சிறப்புத் தோற்றம் | ||
| 7 நாட்கள் | விஜய் ரகுநாத் | தமிழ் | ||||
| வீடேவடு | ஜகந்நாதன் | தெலுங்கு | ||||
| யார் இவன் | ஜகந்நாதன் | தமிழ் | ||||
| 2018 | மன்னர் வகையறா | தமிழ் | ||||
| உத்தரவு மகாராஜா | தமிழ் | படப்பிடிப்பில் | ||||
| ஜானி | தமிழ் | படப்பிடிப்பில் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Srivatsan (26 December 2016). "Rajinikanth, Kamal Haasan wish actor Prabhu on his 60th birthday". India Today. Archived from the original on 12 April 2017. Retrieved 11 April 2017.
- ↑ https://groups.google.com/forum/#!searchin/soc.culture.malaysia/wanted$20gangai$20amaren/soc.culture.malaysia/wChllR1Tv-g/tMZ-sqNhV_8J
- ↑ http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news-interviews/On-roll/articleshow/3716963.cms
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2000-01-18. Retrieved 2014-07-31.
- ↑ http://www.thehindujobs.com/thehindu/2001/08/09/stories/13090785.htm
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-11-24. Retrieved 2014-08-05.
- ↑ http://www.deccanchronicle.com/131119/entertainment-kollywood/article/appa-taught-me-everything-prabhu-ganesan