மசாலா திரைப்படம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மசாலாப்படம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

மசாலா திரைப்படம் (Masala film) என்பது இந்தியத் திரைப்படத்துறையில் ஏற்பட்டிருக்கும் திரைப்பட வகையே மசாலாப்படமாகும். மசாலாப்படமானது காதல், நாடகம், பாட்டு, நடனம், நகைச்சுவை , சண்டைக்காட்சிகள் போன்ற பல ரசனைக் கலவைகளினால் ஏற்படும் திரைப்படங்களைப் பெரும்பாலானோர் அழைப்பர்.[1]

மசாலாக்கலவைகள் பெரும்பாலும் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிப்படங்களில் எடுக்கப்படுவது அதிகமாகக் காணப்படுகின்றது. இத்தகு மசாலாப்படங்கள் ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் சில திரைப்படங்களிலும் காணலாம். மேலும் இன்றைய இந்தியத் திரைப்படத்துறையில் பலதரப்பட்ட மக்களாலும் வரவேற்புக்குள்ளான திரைப்படவகை மசாலாப்பட வகையாகும். அனைத்து மக்களையும் கவரும் வகையில் அமையப்பெற்றிருக்கும் இத்திரைப்படவகையில் வெளிவரும் திரைப்படங்கள் பிரமாண்ட வசூல் சாதனையைப் பெறுவதும் குறிப்பிடத்தக்கது.[2]

வரலாறு[தொகு]

மசாலா திரைப்படம் 1970 களின் முற்பகுதியில் திரைப்பட தயாரிப்பாளர் நசீர் உசேன்,[3] திரைக்கதை எழுத்தாளர் சலீம்-ஜாவேத் ஆகியோருடன் சலீம் கான் மற்றும் ஜாவேத் அக்தர் ஆகியோ ருடன் இணைத்து 1973 ஆம் ஆண்டு யாதோன் கி பாராத் என்ற முதல் மசாலா திரைப்படம் தயாரிக்கப்பட்து.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மசாலா_திரைப்படம்&oldid=3315780" இருந்து மீள்விக்கப்பட்டது