எஸ். பி. பாலசுப்பிரமணியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எஸ். பி. பாலசுப்ரமணியம்
S. P. Balasubrahmanyam.jpg
பின்னணித் தகவல்கள்
பிறப்பிடம் இந்தியாவின் கொடி ஆந்திரப் பிரதேசம்
இசை வடிவங்கள் திரைப்படப் பாடல்
தொழில்(கள்) பாடகர் , நடிகர் , திரைப்பட தயாரிப்பாளர், இசையமைப்பாளர்
இசைத்துறையில் 1966 -
இணையத்தளம் இணையத்தளம்

ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் (பிறப்பு ஜூன் 4, 1946, நெல்லூர் மாவட்டம், மெட்ராஸ் மாகாணம் தற்போது ஆந்திரப் பிரதேசம்) புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட இசைப் பாடகர் ஆவார். எஸ். பி. பி (S.P.B) என்ற முன்னெழுத்துகளால் பரவலாக அறியப்படுகிறார். 1966இல் ஒரு தெலுங்குத் திரைப்படத்தில் பாடியதில் இருந்து திரைப்படங்களில் பாடத் தொடங்கினார். 1966 முதல் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். திரைப்பட பாடகர் மட்டுமல்லாது இவர் திரைப்பட இசை அமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைப்பட நடிகர், திரைப்பட பின்னணிக் குரல் தருபவர் எனப் பன்முக அடையாளம் கொண்டவர். இந்திய அரசு இவருக்கு 2001 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும் 2011 ஆம் ஆண்டில் பத்மபூஷன் விருதும் வழங்கியது.[1]

தொடக்கம்[தொகு]

1960களின் பிற்பகுதியில் தமிழ்த் திரையிசை உலகில் அறிமுகமான எஸ். பி. பாலசுப்பிரமணியம் ஐம்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து முன்னணிப் பாடகராக உள்ளார்[2].[3][4]இவர் தமிழில் முதலில் பாடியது சாந்தி நிலையம் படத்தில் வரும் இயற்கையெனும் இளையகன்னி என்ற பாடலாகும். ஆனால் அது வெளிவரும் முன்பே எம்.ஜி.ஆர் நடித்த அடிமைப் பெண் திரைப்படத்தில் பாடிய ஆயிரம் நிலவே வா வெளிவந்தது.[5]

சாதனைகள்[தொகு]

நாற்பதாயிரம் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார்[6][7][8]. ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கிறார். எஸ். பி. பி. முறையாக கர்நாடக இசையைப் பயின்றது இல்லை என்றாலும் சங்கராபரணம் என்ற படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றார். இதுவரை தேசிய விருதினை நான்கு மொழிகளுக்குப் பெற்ற ஒரே திரைப்படப் பின்னணிப் பாடகர் இவர் ஒருவரே. பிலிம்பேர் விருதினை ஒரு முறையும் பிலிம்பேர் விருது (தெற்கு) மூன்று முறையும் பெற்றுள்ளார். மேலும் இவர் தமிழக மற்றும் கர்நாடக அரசுகளின் பல மாநில விருதுகளும் ஆந்திர அரசின் நந்தி விருதினை 25 முறையும் பெற்றார். இவர் 1981 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றிருக்கிறார். எஸ் பி பி எந்த பாடகரும் செய்யாத சாதனைகளை இந்திய திரையிசையில் செய்திருக்கிறார். இவர் 1981 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதி கர்நாடகா, பெங்களூரில் உள்ள பதிவரங்கில் காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ஒரே நாளில் 21 பாடல்களை கன்னட மொழி இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காக பாடி சாதனை செய்துள்ளார். மேலும் தமிழ் மொழியில் 19 பாடல்களையும் (ஒரேநாளில்), இந்தி மொழியில் 16 பாடல்களையும் (6மணி நேரத்தில்) பாடி சாதனை செய்திருக்கிறார். இவைகளெல்லாம் இவருடைய குறிப்பிடத்தக்க சாதனைகளாகும்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

பாலசுப்பிரமணியம் எஸ் பி சம்பமூர்த்தி மற்றும் சகுந்தலம்மா தம்பதியருக்கு மகனாக கொணடம்பேட்டை, நெல்லூர் மாவட்டம், ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை எஸ் பி சம்பமூர்த்தி ஹரிஹத கலைஞர் ஆவார். இவர் உடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்கள் மற்றும் ஐந்து சகோதரிகள் இருக்கின்றனர். இவர்களில் எஸ். பி. சைலஜா இவருக்கு இளைய தங்கை ஆவார் சைலஜாவும் 5000க்கும் மேற்பட்ட பாடல்களை தென்னிந்திய மொழிகளில் பாடியுள்ளார்.

பாலசுப்பிரமணியம் இசை ஆர்வத்தை இளவயதிலேயே வளர்த்து, தன் தந்தை ஹரிஹதத்தை வாசிக்கும் பொழுது கவனித்து, கற்று, இசை கருவிகளை வாசிக்கவும் தேர்ச்சி பெற்றார். அதில் குறிப்பிடத்தக்க கருவிகள் என்றால் ஹார்மோனியம் மற்றும் புல்லாங்குழல் ஆகும். இவர் பொறியாளர் ஆக வேண்டும் என்ற நோக்கத்தோடு ஜே.என்.டி.யு பொறியியல் கல்லூரி, அனன்டபூரில் மாணவனாக சேர்ந்தார்.

டைப்பாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பாலசுப்பிரமணியம் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சென்னையில் உள்ள வேறொரு கல்லூரியில் சேர்ந்து படித்தார். இவருடைய ஆசையோ பாடகனாக வேண்டும் என்பது ஆனால் இவருடைய தந்தையின் ஆசையோ தன் மகன் பொறியாளன் ஆக வேண்டும் என்றிருந்தது. கல்லூரியில் படிக்கும் போதே பல இசை போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்றுள்ளார்.

1964 ஆம் ஆண்டு அமெட்டூர் பாடகர்கள் ஏற்பாடு செய்திருந்த சென்னை மையமாக கொண்ட தெலுங்கு கலாச்சார நிறுவனம் நடத்திய இசை நிகழ்ச்சியில் எஸ் பி பி முதல் பரிசு பெற்றார்.

இளையராஜா (ஹிட்டார் பிறகு ஹார்மோனியம்), அனிருதா (ஹார்மோனியம்), பாஸ்கர் (percussion) மற்றும் கங்கை அமரன் (ஹிட்டார்) இவர்களோடு சேர்ந்து எஸ் பி பி இசை நிகழ்ச்சிகளையும் நாடககச்சேரிகளில் பாடல்கள் பாடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார். எஸ் பி கோதண்டபானி மற்றும் கண்டசாலா நடுவராக இருந்து பங்குபெற்ற பாட்டுப்போட்டியில் எஸ் பி பி சிறந்த பாடகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அடிக்கடி இசையமைப்பாளர்களை சந்திப்பதும், பாட வாய்ப்பு கேட்பதுமாக இருந்த எஸ் பி பிக்கு முதல் போட்டி பாடல் பி. பி. ஸ்ரீனிவாஸ் பாடிய நிலவே என்னிடம் நெருங்காதே என்ற பாடலாகும்.

குடும்ப வாழ்க்கை[தொகு]

பாலசுப்பிரமணியம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருடைய மனைவி பெயர் சாவித்ரி, மகன் எஸ். பி. பி. சரண், மகள் பல்லவி, எஸ் பி பி சரண் சிறந்த பின்னணி பாடகர், நடிகர், சின்னத்திரை தொடர் நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு வளர்ந்து வருகிறார்.[9]

திரையிசை வரலாறு (1960-1970)[தொகு]

எஸ் பி பிக்கு முதல் அரங்கேற்ற படம் எஸ். பி. கோதண்டபானி இசையமைத்த தெலுங்கு திரைப்படம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாத ரமணா (1966), இத்திரைப்படத்தில் ஒரு பாடலைப்பாடினார். அரங்கேற்ற பாடலுக்கு பிறகு வெறும் எட்டு நாட்களில் கன்னடம் மொழிப்பாடலை 1966இல் "நகரே அதே ஸ்வர்க" என்ற திரைப்படத்தில், கன்னட நகைச்சுவை நடிகர் டி. ஆர். நரசிம்மராஜுக்கு பாடினார். இவர் முதன் முதலில் தமிழ் மொழியில் பாடியது, 1969 ஆம் ஆண்டு ஜெமினி கணேசன் கதாநாயகனாக நடித்த சாந்தி நிலையம் திரைப்படத்தில் கவியரசர் கண்ணதாசன் இயற்றிய பாடலை எம். எஸ். விஸ்வநாதன் இசையில் இயற்கையெனும் இளையக்கன்னி பாடலைப் பாடினார்.தமிழில் இரண்டாவது பாடலாக எம். ஜி. ராமச்சந்திரன் நடித்த அடிமைப் பெண் திரைப்படத்தில் ஆயிரம் நிலவே பாடலைப்பாடினார். மலையாள திரையுலகிற்கு இசையமைப்பாளர் ஜி. தேவராஜன் என்பவரால் கடல்பலம் என்ற திரைப்படத்தில் "ஏ கடலும் மறு கடலும்" பாடலை பாடியதன் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார்.

இவர் இந்திய திரையிசையில் செழுமையான வாழ்க்கையை மிக கடின உழைப்பால் உருவாக்கிக் கொண்டார்.[10] இவர் 1970 களில் இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் இசையில் இணைந்து தமிழ் மற்றும் மலையாள மொழிப்பாடல்களைப் பாடியுள்ளார்.[11] [12] தமிழ் திரைப்பட நடிகர்களான எம். ஜி. ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் என பல நடிகர்களுக்கு 1970களில் பின்னணி பாடியுள்ளார்.[13] இவர் அப்பொழுது பிரபலமாக இருந்த பின்னணிப்பாடகிகளான பி. சுசீலா, எஸ். ஜானகி, வாணி ஜெயராம் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இவர்களோடு பல ஜோடிப்பாடல்களை பாடியுள்ளார். தென்னிந்திய திரையிசையில் வெற்றி கூட்டணியான இளையராஜா, எஸ். பி. பி , எஸ். ஜானகி கூட்டணி 1970களின் கடைசியில் உருவானது.[14][15]

1980-உலகளாவிய வெற்றி[தொகு]

எஸ் பி பாலசுப்பிரமண்யம் 1979 இல் வெளிவந்த சங்கராபரணம் திரைப்படப் பாடல்கள் பாடியதன் மூலம் உலகளவில் பிரபலமானார். சங்கராபரணம் தெலுங்கு திரையுலகில் சிறந்த திரைப்படமாக திகழ்கிறது. இத்திரைப்படம் இயக்குனர் கே. விஸ்வநாத்தால் இயக்கப்பட்டது. கே விஸ்வநாத் எஸ் பி பிக்கு பெரியப்பா மகன் ஆவார். இத்திரைப்படத்தின் பாடல்கள் திரையிசை திலகம் கே. வி. மகாதேவனால் கர்நாடக சங்கீதத்தை கொண்டு உருவாக்கப்பட்டது. எஸ் பி பி முறையாக கர்நாடக சங்கீதம் கற்கவில்லை என்றாலும் கேள்வி ஞானத்தை வைத்து சங்கராபரணம் படப்பாடல்களை பாடினார். இத்திரைப்படத்திற்காக இவர் முதல் தேசிய விருதும் பெற்றார்.[16]. இவருக்கு கிடைத்த அடுத்த தேசிய விருது ஏக் தூஜே கே லியே (1981) இந்தி மொழி திரைப்படம் இது இவருடைய முதல் இந்தி திரைப்படம் இயக்குனர் சிகரம் கே. பாலசந்தரால் எடுக்கப்பட்டது.[17]

எஸ் பி பாலசுப்பிரமணியம் தமிழ் திரைப்படங்களுக்கு நிறைய பாடல்களை பாடினார் குறிப்பாக இளையராஜாவின் இசையில் எஸ். ஜானகியோடு இணைந்து ஜோடிப்பாடல்களையும், தனித்தும், சக பின்னணிப்பாடகர்கள் மற்றும் பாடககிகளுடன் சேர்ந்து பல பாடல்களைப் பாடியிருக்கிறார். தமிழ் திரையிசையில் இளையராஜா, எஸ் பி பி, எஸ். ஜானகி இம்மூன்று பேரின் வெற்றிப்பாடல்கள் நிறைய உள்ளன. 1983 ஆம் ஆண்டு வெளிவந்த சகார சங்கமம் (தெலுங்கு திரைப்படம்) கிளாசிக்கல் இசையில் அமைத்ததனால் இளையராஜாவுக்கும் எஸ் பி பிக்கும் இந்திய தேசிய விருது கிடைத்தது. 1988 ஆம் ஆண்டு ருத்ரவீணா (தெலுங்கு) திரைப்படத்திற்காக மீண்டும் இவ்விருவருக்கும் இந்திய தேசிய விருது கிடைத்தது. இளையராஜா மட்டுமல்லாது இடைக்காலத்தில் இசையமைத்த எல்லா இசையமைப்பாளர்களின் இசையிலும் பின்னணி பாடியிருக்கிறார்.[18]

1989 ஆம் ஆண்டிலிருந்து எஸ் பி பி பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு பின்னணி பாடிவந்தார். அதிலும் மைனே பியார் க்யா மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் இத்திரைப்படத்தில் எல்லா பாடல்களையும் பாடியுள்ளார். எல்லா பாடல்களும் வெற்றி பெற்றது மட்டுமல்லாது தில் தீவானா பாடல் சிறந்த பின்னணிப் பாடகருக்கான பிலிம்பேர் விருதினையும் இவருக்கு வாங்கி கொடுத்தது. இவர் அடுத்த தலைமுறைக்கும் காதல் ரசனையோடு சல்மான் கான் திரைப்பட பாடல்களை பாடியுள்ளார். சல்மான் கான் நடித்த ஹம் ஆப்கே ஹே ஹான் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை குவித்தது இப்படத்தில் லதா மங்கேஷ்கர் உடன் எஸ் பி பி பாடிய திதி தேரா தேவர் தீவானா பாடல் மிகவும் பிரபலமானது இப்பாடலுக்காக லதா மங்கேஷ்கர் பிலிம்பேர் விருது சிறப்பு விருது பெற்றார். இவைகளெல்லாம் பாலசுப்பிரமணியம் ஒரு மிகப்பெரிய இந்தியப் பின்னணிப்பாடகர் என்பதை எடுத்துகாட்டுகிறது.

1990களில்[தொகு]

எஸ் பி பி 1990களில் இசையமைப்பாளர்களான தேவா, வித்யாசாகர், எம். எம். கீரவாணி, எஸ். ஏ. ராஜ்குமார் போன்றோரின் இசையில் நிறைய பாடல்களைப் பாடினார். [19]ஆனால் மிகப்பெரிய வெற்றி என்று சொன்னால் அது ஏ. ஆர். ரகுமான் இசையில் பாடிய பாடல்களாகும். ஏ ஆர் ரகுமானின் இசை அரங்கேற்ற படம் ரோஜா இதில் எஸ் பி பி மூன்று பாடல்களைப் பாடினார். ரோஜா திரைப்படத்திற்கு பிறகு நிறைய பாடல்களை ஏ ஆர் ரகுமானின் இசையில் நீண்ட காலமாகவும் பாடிவருகிறார். புதிய முகம் திரைப்படத்தில் "ஜுலை மாதம் வந்தால்" பாடலை அனுபமாவோடு பாடினார். அனுபமாவிற்கு அப்பாடல் அரங்கேற்ற பாடலாகும். கிழக்குச் சீமையிலே திரைப்படத்தில் "மானூத்து மந்தையிலே மாங்குட்டி" பாடல் நாட்டுப்புற நடையில் வித்தியாசமாகப் பாடினார். டூயட் படத்தில் ஏறத்தாழ எல்லா பாடல்களையும் பாடினார். மின்சார கனவு படத்தில் தங்கத்தாமரை மகளே பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகருக்கான இந்திய தேசிய விருது எஸ் பி பிக்கு 1996 ஆம் ஆண்டு கிடைத்தது. இதுதான் இவருக்கு கிடைத்த ஆறாவது தேசிய விருதாகும்.

பாலசுப்பிரமணியம் இசையமைப்பாளர் அம்சலேகாவின் இசையில் கன்னட திரைப்படங்களுக்கு பாடல்கள் பாடியுள்ளார். பிரேமலோக திரைப்படத்திற்குப் பிறகு நிறைய பாடல்களை அம்சலேகாவின் இசையில் பாடினார்.இவருடைய ஐந்தாவது தேசிய விருது அம்சலேகாவின் இசையில் பாடியதற்காக கிடைத்தது. கனயோகி பஞ்சக்சரி காவயி (1995) இத்திரைப்படத்தில் உமண்டு குமண்டு பாடலுக்காக, சிறந்த பின்னணிப் பாடகருக்கான இந்திய தேசிய விருது அம்சலேகாவின் ஹிந்துஸ்தானி கிளாசிக்கல் இசையில் பாடியதன் மூலம் பெற்றார்.

2000ஆம் ஆண்டிற்கு பிறகு[தொகு]

எஸ் பி பி 2000ஆம் ஆண்டிற்கு பிறகு இளைய தலைமுறை இசையமைப்பாளர்களான யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ்,டி. இமான், ஜி. வி. பிரகாஷ்குமார் போன்றோரின் இசையமைப்பில் பாடிக்கொண்டிருக்கிறார்.[20][21] [22]

எஸ் பி பி 2013 ஆம் ஆண்டு வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் என்ற திரைப்படத்தில் நடிகர் சாருக்கானுக்காக விஷால்-சேகரின் இசையில் "நிக்கல் நா சாயி சென்னை எக்ஸ்பிரஸ்" தலைப்பு பாடலை பாடியுள்ளார். இப்பாடல் பதினைந்து வருடங்களுக்கு பிறகு இவர் இந்தி திரையிசையில் பாடியதாகும்.

பாலசுப்பிரமணியம் 2015ஆம் ஆண்டு சனவரி மாதம் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்திற்கு ஆந்திரமாநிலத்தின் தூதராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.[23] இவர் மதங்களை கடந்து பக்திப்பாடல்கள் பல பாடியுள்ளார் இதற்காக 2015ஆம் ஆண்டுக்கான கேரள அரசின் "ஹரிவராசனம்" விருது பெற்றுள்ளார். [24][25]. [26]

பின்னணிக்குரல், இசையமைப்பு, நடிப்பு[தொகு]

எஸ் பி பி நடிகர் கமல்ஹாசனுக்கு 120 தெலுங்கு திரைப்படங்களில் பின்னணிக்குரல் கொடுத்துள்ளார்.[27]கமல் நடித்த தமிழ் திரைப்படம் மன்மத லீலை தெலுங்கில் மனமத லீலா என மொழிமாற்றம் செய்யப்பட்டது அதன்மூலம் எஸ். பி. பி தொடர்ந்து பல நடிகர்களுக்கு பின்னணிக்குரல் கொடுத்துள்ளார் குறிப்பாக கமல்ஹாசன், ரசினிகாந்த், சல்மான் கான், கே. பாக்யராஜ், மோகன், அணில்கபூர், கிரிஸ் கர்ணாட், ஜெமினி கணேசன், அர்ஜுன் சர்சா, நாகேஷ், கார்த்திக் மற்றும் ரகுவரன் ஆகியோருக்கு பல்வேறு மொழிப்படங்களில் பின்னணிக்குரல் கொடுத்துள்ளார்.[28] நடிகர் கமலஹாசனுக்கு குரல் ஒன்றிய பின்னணி கொடுப்பவராக திகழ்கிறார். கமல் நடித்த தசாவதாரம் திரைப்படத்தை தெலுங்கில் மாற்றிய போது மொத்தமுள்ள பத்து கதாபாத்திரங்களில் ஏழு கதாபாத்திரங்களுக்கு (பெண் கதாப்பாத்திரம் உட்பட) பின்னணி கொடுத்துள்ளார். இவர் சிறந்த பின்னணிக்குரல் கொடுப்பவருக்கான நந்தி விருதினை அன்னமயா மற்றும் ஸ்ரீ சாய் மகிமா திரைப்படத்திற்கும் பெற்றுள்ளார். 2012 ஆம் ஆண்டு வெளிவந்த ஸ்ரீ ராம ராஜ்ஜியம் (தமிழ்) படத்திற்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்காக பின்னணிக்குரல் கொடுத்துள்ளார்.

பாலசுப்பிரமணியம் தென்னிந்திய மொழிகளில் எழுபதுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.[29][30] தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி இந்நான்கு மொழிகளில் நாற்பத்தைந்து திரைப்படத்திற்கு மேல் இசையமைத்துள்ளார்.[31][32][33]

பெற்ற விருதுகள்[தொகு]

இந்திய தேசிய விருதுகள்[தொகு]

வருடம் திரைப்படம் பாடல் மொழி
1996 மின்சார கனவு தங்க தாமரை தமிழ்
1995 சங்கீத சகர கனயோகி பஞ்சக்சற கவை உமண்டு க்ஹுமண்டு கன கர் கன்னடம்
1988 ருத்ரவீன செப்பாழனி உண்டி தெலுங்கு
1983 சாகர சங்கமம் வேதம் அனுவனுவுன தெலுங்கு
1981 ஏக் தூஜே கே லியே தேரே மேரே பீச் மேனி இந்தி
1979 சங்கராபரணம் ஓம் கார நதானு தெலுங்கு

திரைப்பட பட்டியல்[தொகு]

நடித்த திரைப்படங்கள்[தொகு]

வருடம் திரைப்படங்கள் மொழி கதாப்பாத்திரம் குறிப்பு
1969 பெல்லண்டி நூரெல்ல பந்த தெலுங்கு
1971 முகமது பின் துக்ளக் தமிழ் சிறப்புத் தோற்றம்
1980 பக்கிண்டி அம்மாயி தெலுங்கு பால ராஜு
1982 பாலூன்டு சதுரங்க கன்னடம்
மல்லே பந்திரி தெலுங்கு சேக் மொசஸஷ் மூர்த்தி
1983 பாரத் 2000 கன்னடம்
திருகு பான கன்னடம் பாடலில் சிறப்பு தோற்றம் "இதே நாடு இதே பாஷே"
1987 மனதில் உறுதி வேண்டும் தமிழ் மருத்துவர்
1988 பிரேம தெலுங்கு வெங்கடேஷ்க்கு ஆலோசகராக
விவாஹ பூஜனம்பூ தெலுங்கு சிறப்புத் தோற்றம்
கல்லு தெலுங்கு
1990 கேளடி கண்மணி தமிழ் ஏ. ஆர். ரங்கராஜ்
பாலைவன ராகங்கள் தமிழ்
1991 சிகரம் தமிழ் தாமோதர்
1992 தியாகு தமிழ்
குணா தமிழ் காவல் அதிகாரி
பர்வதலு பானக்கலு தெலுங்கு பானக்கலு
தலைவாசல் தமிழ் சண்முகசுந்தரம்
பரதன் தமிழ் ராமகுமார்
1993 திருடா திருடா தமிழ் லட்சுமி நாராயணன் சி பி ஐ அதிகாரி
முதின மாவ கன்னடம் ராமய்யா
1994 காதலன் தமிழ் கதிரேசன்
1995 ராஜ ஹம்ச தெலுங்கு மருத்துவர், குடும்ப நண்பன்
பாட்டு பாடவா தமிழ் கிரிதரன்
1996 துரோகி தெலுங்கு
காதல் தேசம் தமிழ் தபுவின் தந்தை
மைனா தெலுங்கு
பவித்ர பந்தம் தெலுங்கு வெங்கடேஷின் தந்தை
அவ்வை சண்முகி தமிழ் சிறப்புத்தோற்றம்
கண்டேன் சீதையை தமிழ் காவல் அதிகாரி
1997 தேவல்லு தெலுங்கு கடவுள் விநாகர்
பெல்லிவரமண்டி தெலுங்கு கதாநாயகனின் தந்தை
பிரேன தெலுங்கு
உல்லாசம் தமிழ் தங்கய்யா
ரட்சகன் தமிழ் எல் ஐ சி பத்மநாபன்
மின்சார கனவு தமிழ் தங்கதுரை
பெரிய மனுஷன் தமிழ் மருத்துவர்
நந்தினி தமிழ்/தெலுங்கு அவரே / பிரகாஷ் ராஜுக்கு நண்பன்
1998 சந்தர்ப கன்னடம்
உய்யாலா தெலுங்கு மருத்துவர்
பெல்லடி ஜுப்பிஸ்டா தெலுங்கு அவரே, ரோஜாவின் குரு
மாங்கல்யம் தந்துநானேநா கன்னடம் ரவிசசந்திரனின் தந்தை
ஜாலி தமிழ் ஆசிரியர்
ஃவைப் ஆப் வி. வரபிரசாத் தெலுங்கு வினித்தின் தாத்தா
1999 ஆரோ பிரனம் தெலுங்கு கதாநாயகனின் தந்தை (வினித்)
தீர்க்க சுமங்கலி பவ தெலுங்கு தசரி குடும்பத்திற்கு நண்பன்
மெக்கானிக் மாவய்யா தெலுங்கு விஞ்ஞானி
பாடுடா தீயாக தெலுங்கு கதாநாயகியின் தந்தை (ஹீரா)
பெத்த மனசுலு தெலுங்கு
மாயா தமிழ்/தெலுங்கு/கன்னடம்
2000 கோபிண்டி அல்லுடு தெலுங்கு பாலகிருஷ்ணனின் தந்தை
மனசு பத்தனு கன்னி தெலுங்கு ராசியின் தந்தை
பிரியமானவளே தமிழ் விஷ்வநாத்
2001 சிரிச்சலு தெலுங்கு ரிச்சாவின் தந்தை
2002 இந்தரா தெலுங்கு அவரே சிறப்பு தோற்றம்
பதரெல்ல அம்மாயி தெலுங்கு
ஏப்ரல் மாதத்தில் தமிழ் அவரே சிறப்பு தோற்றம்
2003 மேஜிக் மேஜிக் 3D தமிழ் ஆச்சர்யா
ஃபூல்ஸ் தெலுங்கு சிறப்பு தோற்றம்
மகா ஏதபிதங்கி கன்னடம்
2006 மாயாபஜார் தெலுங்கு கடவுள் குபேரா
ரூம்மேட்ஸ் தெலுங்கு அவரே சிறப்பு தோற்றம்
2007 என் உயிரினும் மேலான தமிழ் என். திருமுருகன்
கல்யோனதவச கன்னடம் ஒய்வுபெற்ற ராணுவதளபதி
மல்லே பந்தரி தெலுங்கு
அஸ்ட்ரம் தெலுங்கு ராஜு கிர்வாணி
கெத்தரி கென்னன்னே கெரபெகு கன்னடம் Dr.தசரி நாராயண ராவ்
2010 நாணயம் தமிழ் சியுஓ விஸ்வநாத்
2011 சக்தி தெலுங்கு
2012 தேவஸ்தானம் தெலுங்கு
மிதுனம் தெலுங்கு அப்பா தாஸு
2014 திருடன் போலீஸ் தமிழ் பேராசிரியர்
2015 மூணே மூணு வார்த்தை தமிழ்
மூடு முக்கலோ செப்பலண்டி தெலுங்கு

இசையமைத்த திரைப்படங்கள்[தொகு]

வருடம் திரைப்படம் மொழி இயக்குனர் தயாரிப்பாளர்/பேனர்
1977 கன்னியா குமரி தெலுங்கு தசரி நாராயண ராவ் சரிகம ஆர்ட்ஸ்
1978 சந்தர்ப கன்னடம்
1979 கேப்டன் கிருஷ்ணா தெலுங்கு கே. எஸ். ஆர். தாஸ்
ரா ரா கிருஷ்ணய்யா தெலுங்கு
'தூர்ப்பு வெள்ள ரயிலு தெலுங்கு பாபு
1980 ஹம் பஞ்ச் (பின்னணி இசை) ஹிந்தி பாபு எஸ்.கே. ஃபிலிம்ஸ்
1981 ஒஹம்ம கத தெலுங்கு வசந்த சென்
சங்கீதா தெலுங்கு
1983 துடிக்கும் கரங்கள் தமிழ் சி வி ஸ்ரீதர் கே. ஆர். கங்காதரன்
உருண்ட சங்கரண்டி தெலுங்கு தசரி நாராயண ராவ்
1984 பர்யாமணி தெலுங்கு விஜய பாபிநீது ஸ்ரீநிவாசா தயாரிப்பு
சீதாம்மா பெல்லி தெலுங்கு பாபு முத்து ஆர்ட் மூவிஸ்
1985 பங்காரு சிலகா தெலுங்கு மகேஸ்வரி மூவிஸ்
புல்லெட் தெலுங்கு
தேவரல்லதனே கன்னடம் சாமுண்டி தயாரிப்பு
தூங்கல்லோ தூரா தெலுங்கு
ஜாக்கி தெலுங்கு முத்து ஆர்ட் மூவிஸ்
கொங்குமுடி தெலுங்கு விஜய பாபிநீது ராகவேந்திரா சினி கிரியேசன்ஸ்
மயூரி தமிழ் சிங்கீதம் ஸ்ரீநிவாச ராவ் பீ.ஆர். கிரியேசன்ஸ் உஷாகிரண் மூவிஸ் கூட்டணியில்
மயூரி தெலுங்கு சிங்கீதம் ஸ்ரீநிவாச ராவ் உஷாகிரண் மூவிஸ்
முத்துலா மனவரலு தெலுங்கு ஜந்த்யல முத்து ஆர்ட் மூவிஸ்
1986 பெடெ கன்னடம் வஜ்ரகிரி ஃபிலிம்ஸ்
மஹதீருடு தெலுங்கு ஸ்யாம் பிரசாத் ஆர்ட்ஸ்
நாச்சி மயூரி (பின்னணி இசை) ஹிந்தி டி. ராமா ராவ் லட்சுமி தயாரிப்பு
பதமதி சந்திய ராகம் தெலுங்கு ஜந்த்யல குமலூரி சாஸ்திரி, மீர் அப்துல்லா
சௌபாக்கியலட்சுமி கன்னடம் பார்கவ வாசு சித்ரா
1987 கௌதமி தெலுங்கு ராதா மாதவ ஃபிலிம்ஸ்
லாயர் சுகாசினி தெலுங்கு வம்சி ஜெயகிருஷ்ணா கம்பைன்ஸ்
பிரதீமா தெலுங்கு
ராமு தெலுங்கு சுரேஷ் தயாரிப்பு
1988 சின்னூடு பெட்டூடு தெலுங்கு ரெலங்கி நரசிம்ம ராவ் ஸ்ரீதேவி மூவிஸ்
கல்லு தெலுங்கு எம். வி. ரகு மகாசக்தி ஃபிலிம்ஸ்
நீக்கு நாக்கு பெல்லண்ட தெலுங்கு ஜந்த்யல ஜே.ஜே. மூவிஸ்
ஓ பார்ய கத தெலுங்கு மௌலி உஷாகிரண் மூவிஸ்
பிரம்மயானம் தெலுங்கு உஷாகிரண் மூவிஸ்
ரமண சமண கன்னடம் பீ. சுப்பாராவ் வாசு சித்ரா
விவாஹ போஜனம்பூ தெலுங்கு ஜந்த்யல ஜே.ஜே. மூவிஸ்
1990 சித்தார்த்தா தெலுங்கு
1991 மகாயானம் தெலுங்கு
சிகரம் தமிழ் அனந்து கவிதாலயா தயாரிப்பு
தையல்காரன் தமிழ் எஸ். பி. முத்துராமன் கலைப்புலி இன்டர்நேஷனல்
ஜெய்தர யாத்ரா தெலுங்கு ஸ்ரவந்தி மூவிஸ்
1992 பெல்லியப்பா பனகாரப்பா கன்னடம் பூர்ண பிரஜ்ன மது பங்காரப்பா
கிஸீர சஹார கன்னடம் சிங்கீதம் ஸ்ரீநிவாச ராவ்
ஊர்பஞ்சாயத்து தமிழ் மகேந்திரன்
போங்கடா நீங்களும் உங்க அரசியலும் தமிழ்
1993 முதின மாவ கன்னடம் ஓம் சாய் பிரகாஷ் விஜய ஸ்ரீதேவி கம்பைன்ஸ்
2003 உன்னை சரணடைந்தேன் தமிழ் சமுத்திரக்கனி கேபிடல் சினி ஒர்க்ஸ்

பின்னணிக்குரல் தந்த திரைப்படங்கள்[தொகு]

வருடம் திரைப்படம் மொழி நடிகர் குறிப்புகள்
1983 ஆனந்த பைரவி தெலுங்கு கிரிஷ் கர்னாட்
1991 ஆதித்யா 369 தெலுங்கு தினு ஆனந்த்
1997 அன்னமய்யா தெலுங்கு சுமன்
1997 அன்னமாச்சாரியா தமிழ்
2012 ஸ்ரீ ராம ராஜ்ஜியம் தமிழ் நந்தாமுரி பாலகிருஷ்ணா தமிழ் மொழியில் மட்டும்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்[தொகு]

பெயர் மொழி குறிப்புகள்
நதி எங்கே போகிறது தமிழ் நெடுந்தொடர்
சன்னல் தமிழ் நெடுந்தொடர்
வானம்பாடி தமிழ் இசை நிகழ்ச்சி
பாடுதே தீயாக தெலுங்கு இசை நிகழ்ச்சி
பாடலானி உந்தி தெலுங்கு இசை நிகழ்ச்சி
என்டரு மஹனுபவலு தெலுங்கு நெடுந்தொடர்
என்னோடு பாட்டுப் பாடுங்கள் தமிழ் இசை நிகழ்ச்சி
இதே தம்பி ஹாடுவேனு கன்னடம் இசை நிகழ்ச்சி
இசைவானில் இளையநிலா, ஏர்டெல் சூப்பர் சிங்கர் தமிழ் இசை நிகழ்ச்சி, சிறப்பு நடுவர்

மேற்கோள்கள்[தொகு]

 1. 26 January 2011 DC Correspondent New Delhi (26 January 2011). "SPB wins Padma Bhushan, no Bharat Ratna this year". Deccan Chronicle. பார்த்த நாள் 2 May 2011.
 2. "திரையுலகில் 50வது ஆண்டில் ௭ஸ். பி. பாலசுப்பிரமணியம் - ETR.NEWS".
 3. "௭ஸ்.பி.பாலசுப்ரமணியத்தை பார்த்து ஆச்சரியமடைந்த மோடி - ETR. NEWS".
 4. "திரையுலகில் 50 வது ஆண்டில் ௭ஸ். பி.பாலசுப்பிரமணியம்".
 5. "பாடும் நிலா பாலு".
 6. Staff Reporter (11 June 2012). "Singer S.P. Balasubrahmanyam honoured". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/singer-sp-balasubrahmanyam-honoured/article3513621.ece. பார்த்த நாள்: 22 July 2013. "According to the citation of the award, the singer who had won Padma Sri and Padma Bhushan had sung over 40,000 songs in four languages. He had also won six national awards He had directed music for over 40 films, and had worked as a dubbing artist, television anchor and even produced movies." 
 7. http://www.lokvani.com/lokvani/article.php?article_id=3493
 8. http://entertainment.oneindia.in/celebs/s-p-balasubramaniam/biography.html
 9. "SPB பற்றிய சுவையான சிறுகுறிப்புகள்".
 10. "பாடும் நிலா பாலு".
 11. "இன்று நினைத்தாலும் இனிக்கும்!".
 12. "எம்.எஸ்.விஸ்வநாதன்".
 13. "சிவாஜிகணேசனுக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய முதல் பாடல்".
 14. "எஸ். பி. பாலசுப்பிரமணியம்".
 15. "காதலிப்போம் பாடும் நிலாவை:July 2009".
 16. "கேட்ட ஞானத்தை வைத்தே பாடுகிறேன் -எஸ்.பி.பாலசுப்பிரமணியம்".
 17. "உதவி இயக்குநராக பணியாற்ற விரும்பிய பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்".
 18. "அமெரிக்காவில் கலக்கும் SPB இசை நிகழ்ச்சி".
 19. "எஸ்.பி.பி பாடிய பாடல்கள்".
 20. "Bollywood Cinema News, Latest Movies Online-Tamilbay-இமான் இசையில் பாட்டு பாடிய எஸ்.பி.பி".
 21. "பட்ஜெட்டை பார்க்காமல் பாடும் எஸ்.பி.பாலசுப்ரமணியம்!-S.P.Balasubramaniam sang also for low budjet films".
 22. "புதுமுக இசையமைப்பாளருக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வாழ்த்து! - தினமணி சினிமா".
 23. "SPB is now clean India ambassador".
 24. "News View- NewIndiaNews.com".
 25. "கேரள அரசின் விருதுக்கு பாடகர் எஸ்.பி.பி.தேர்வு-Dinamani-Tamil Daily News".
 26. . http://www.dinamalar.com/news_detail.asp?id=1279795. 
 27. "கமலுக்கு தெரியாத வித்தைகள் இல்லை:எஸ்.பி.பாலசுப்பிரமணியம்-Kamalhassan is a multitalented person:s.p.Balasubramanian".
 28. "ரஜினி, கமலுக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய பாடல்கள்".
 29. "Fashion--Cinema Express".
 30. "மூணே மூணு வார்த்தை : சிங்கிள் டிராக்கை வெளியிடும் எஸ்.பி.பி - 'Paadum nila' to launch the single track".
 31. "பாட்டும், நடிப்பும் இரு கண்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் - Acting, singing are like my two eyes says sp.Balasubramaniyam".
 32. "பாடும் நிலா பாலு".
 33. "கேளடி கண்மணி மூலம் கதாநாயகன் ஆனார், எஸ்.பி.பாலசுப்பிரமணியம்". http://www.maalaimalar.com/2014/04/01212632/keladi-kanmani-hero-sp-balasub.html. (மாலைமலர் செய்தி)