உள்ளடக்கத்துக்குச் செல்

முனி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முனி
முனி திரையரங்கு வெளியீடு சுவரொட்டி
இயக்கம்ராகவா லாரன்ஸ்
தயாரிப்புசரண்
கதைரமேஷ் கண்ணா
(உரையாடல்கள்)
திரைக்கதைராகவா லாரன்ஸ்
இசைபரத்வாஜ்
(பாடல்கள்)
எஸ். பி. வெங்கடேஷ் (பின்னணி இசை)
நடிப்புராகவா லாரன்ஸ்
வேதிகா குமார்
ராஜ்கிரண்
பியான்சா தேசை
ஒளிப்பதிவுகே. வி. குகன்
படத்தொகுப்புசுரேஷ் அர்ஸ்
கலையகம்ஜெமினி புரொடக்சன்
விநியோகம்ஜெமினி புரொடக்சன்
வெளியீடு9 மார்ச்சு 2007
நாடுஇந்தியா
மொழிதமிழ்

முனி (ஆங்கிலம்: Muni) என்பது 2007ல் வெளியான தமிழ், நகைச்சுவை, திகில் திரைப்படம் ஆகும். இதனை ராகவா லாரன்ஸ் எழுதி இயக்கியுள்ளார். இவரே இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரமாகவும் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் வேதிகா குமார், ராஜ்கிரண் ஆகியோரும் நடித்துள்ளனர். முனி திரைப்படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்துள்ளார். இது 9 மார்ச்சு 2007 அன்று வெளியானது. இத்திரைப்படம் அதே பெயரில் தெலுங்கு மொழியில் டப்பிங் முறையில் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. பின்பு இந்தி மொழியில் ப்ரடிஷோத் எக் ரியல் ரிவெஞ் ("Pratisodh-Ek Real Revenge") என்ற பெயரிலும் வெளியிடப்பட்டது.[1] 2011-இல், இதன் தொடரான காஞ்சனா திரைப்படம் வெளியானது. இதற்கு அடுத்து 2014-இல் முனி 3: கங்கா எனும் திரைப்படமும் வெளியானது. இது முனி திரைப்படத்தொடரின் முதலாவது திரைப்படம் ஆகும்.

விமர்சனம்

[தொகு]

ஆனந்த விகடன் வார இதழில் எழுதிய விமர்சனத்தில் "சீரியஸான இடங்களில் வரும் காமெடியும், காமெடி பண்ணவேண்டிய இடங்களில் வரும் சீரியஸ் டயலாக்குகளும் ‘இது என்ன டைப் படம்?’ என்று க்ளைமாக்ஸ் வரை குழப்புகிறது. கதைக்குக் கொஞ்சம் மெனக்கெட்டு, திரைக்கதையை இன்னும் காமெடியாகப் பின்னியிருந்தால் முனி எல்லார் மனசிலும் பாய்ந்திருக்கக்கூடும்!" என்று எழுதி 36/100 மதிப்பெண்களை வழங்கினர்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "'Muni' completes talkie part - Bollywood Movie News". IndiaGlitz. 2006-12-28. Archived from the original on 2012-10-24. Retrieved 2012-08-06.
  2. "சினிமா விமர்சனம்: முனி". விகடன். 2007-03-21. Retrieved 2025-05-24.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=முனி_(திரைப்படம்)&oldid=4590641" இலிருந்து மீள்விக்கப்பட்டது