மாஸ் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாஸ்
இயக்கம்ராகவ லாரன்ஸ்
தயாரிப்புநாகர்ஜூன்
கதைராகவ லாரன்ஸ்,
பருச்சுரி சகோதரர்கள்
இசைதேவி சிறீ பிரசாத்
நடிப்புநாகர்ஜூன்,
யோதிகா,
சர்மி,
ரகுவரன்
ஒளிப்பதிவுஷியாம் கே.நாயுடு
படத்தொகுப்புமார்தாண்ட் கே.வெங்கடேஷ்
விநியோகம்அன்னபூர்னா ஸ்டீடியோஸ்
வெளியீடுடிசம்பர் 23, 2004
ஓட்டம்170 நிமிடங்கள்.
மொழிதெலுங்கு

மாஸ் திரைப்படம் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு மொழித் திரைப்படமாகும்.ராகவ லாரன்ஸ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகர்ஜூன்,யோதிகா,சர்மி,ரகுவரன் மற்றும் பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வகை[தொகு]

மசாலாப்படம்

கதை[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

மாஸ் (நாகர்ஜூன்) ஒரு அனாதையாவான்.அதி என்பவனுடன் நெருங்கிய நண்பனாக இருக்கின்றான் மாஸ்.விசாக் நகரில் காடையர்களுக்குத் தலைவனாக இருக்கும் சத்யாவின் (ரகுவரன்) மகளின் மீது காதல் கொள்கின்றான் அதி.இதனை அறியும் சத்யா அவர்களின் காதலைச் சேர்த்து வைக்காது பிரித்து பின்னர் அதியைக் கொலை செய்யத் திட்டமிடுகின்றான்.பின்னர் கொலையும் செய்கின்றான்.இதனையறிந்து கொள்ளும் மாஸ் காடையர்களின் தலைவனைப் பழிவாங்குகின்றான்.சத்யாவைக் கொலை செய்யத் திட்டம் தீட்டி அவனது ஊரான விAசாக்கில் விடுதி ஒன்றி தங்கி பின்னர் கொலை செய்கின்றான்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாஸ்_(திரைப்படம்)&oldid=2923835" இருந்து மீள்விக்கப்பட்டது