திசம்பர் 23
Appearance
(டிசம்பர் 23 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | திசம்பர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 | 31 | ||||
MMXXIV |
திசம்பர் 23 (December 23) கிரிகோரியன் ஆண்டின் 357 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 358 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் எட்டு நாட்கள் உள்ளன
நிகழ்வுகள்
[தொகு]- 562 – கான்ஸ்டண்டினோபில் நகரில் நிலநடுக்கங்களால் சேதப்படுத்தப்பட்ட ஹேகியா சோபியா பெருங்கோவில் புனரமைக்கப்பட்டது.
- 962 – அரபு–பைசாந்தியப் போர்கள்: நிக்கொப்போரசு போக்கசு தலைமையில் பைசாந்திய இராணுவம் அலெப்போ நகரைத் தாக்கியது.
- 1572 – செருமனிய இறையியலாளர் யொகான் சில்வான் ஐடெல்பெர்கு நகரில் அவரது திரிபுவாத திருத்துவ-எதிர்க் கொள்கைகளுக்காகத் தூக்கிலிடப்பட்டார்.
- 1688 – மாண்புமிகு புரட்சியின் ஒரு கட்டமாக, இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு மன்னர் இங்கிலாந்தில் இருந்து பாரிசுக்குத் தப்பி ஓடினார்.
- 1783 – சியார்ச் வாசிங்டன் அமெரிக்க விடுதலைப் படையின் இராணுவத்தளபதி பதவியில் இருந்து விலகினார்.
- 1876 – கான்ஸ்டண்டினோபில் மாநாட்டின் ஆரம்ப நாளில் பால்கன் குடாவில் அரசியல் சீர்திருத்தத்திற்கு உடன்பாடு காணப்பட்டது.
- 1914 – முதலாம் உலகப் போர்: ஆத்திரேலிய, நியூசிலாந்துப் படைகள் கெய்ரோவில் தரையிறங்கினர்.
- 1916 – முதலாம் உலகப் போர்: எகிப்தின் சினாய்க் குடாவில் கூட்டுப் படைகள் துருக்கியப் படைகளுடன் இடம்பெற்ற சமரில் வெற்றி பெற்றன.
- 1941 – இரண்டாம் உலகப் போர்: 15 நாட்கள் சண்டைக்குப் பின்னர் சப்பானிய இராணுவம் வேக் தீவைக் கைப்பற்றியது.
- 1947 – முதலாவது டிரான்சிஸ்டர் பெல் ஆய்வுகூடத்தில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.
- 1948 – ஏழு சப்பானியப் போர்க் குற்றவாளிகளுக்கு டோக்கியோவின் சுகோமோ சிறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
- 1954 – முதலாவது மனித சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
- 1958 – டோக்கியோ கோபுரம், உலகின் மிகப்பெரிய இரும்பினாலான கோபுரம், திறக்கப்பட்டது.
- 1968 – வட கொரியாவில் 11 மாதங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த 82 அமெரிக்க மாலுமிகள் விடுவிக்கப்பட்டனர்.
- 1970 – நியூயார்க் நகரில் அமைந்துள்ள உலக வணிக மையத்தின் வடக்குக் கோபுரம் உலகின் மிக உயர்ந்த கட்டடமாக அறிவிக்கப்பட்டது.
- 1970 – காங்கோ மக்களாட்சிக் குடியரசு அதிகாரபூர்வமாக ஒரு-கட்சி நாடாக மாறியது.
- 1972 – நிக்கராகுவா தலைநகர் மனாகுவாவில் இடம்பெற்ற 6.5 அளவு நிலநடுக்கத்தில் 10,000 இற்கும் மேற்பட்டோர் இறந்தனர்.
- 1972 – தென்னமெரிக்காவில் ஆண்டீஸ் மலைத்தொடரில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிர் தப்பிய 16 பேர் 73 நாட்களுக்குப் பின்னர் காப்பாற்றப்பட்டனர்.
- 1979 – ஆப்கான் சோவியத் போர்: சோவியத் படையினர் ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலைக் கைப்பற்றினர்.
- 1986 – எங்கும் தரையிறங்காமல் முதன் முதலில் உலகைச் சுற்றி வந்த வொயேஜர் விமானம், டிக் ரூட்டன், ஜீனா யேகர் ஆகிய விமானிகளுடன் கலிபோர்னியாவில் தரையிறங்கியது.
- 1990 – 88% சுலோவீனிய மக்கள் யுகோசுலாவியாவில் இருந்து பிரிந்து செல்வதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
- 2003 – சீனாவின் சோங்கிங்கில் இடம்பெற்ற இயற்கை வாயு வெடி விபத்தில் 234 பேர் உயிரிழந்தனர்.
- 2005 – அசர்பைஜான் விமானம் புறப்பட்டு சில நிமிடங்களில் பக்கூ நகரில் வீழ்ந்து நொருங்கியதில் 23 பேர் உயிரிழந்தனர்.
- 2005 – சாட் சூடானுடன் போரை அறிவித்தது.
- 2007 – நேபாள இராச்சியம் கலைக்கப்பட்டு குடியரசாக மாறுவதற்கான உடன்பாடு எட்டப்பட்டது. பிரதமர் அரசுத்தலைவரானார்.
பிறப்புகள்
[தொகு]- 1722 – ஏக்சல் பிரெடரிக் குரான்ஸ்டெட், சுவீடன் கனிமவியலாளர், வேதியியலாளர் (இ. 1765)
- 1777 – முதலாம் அலெக்சாந்தர், உருசியப் பேரரசர் (இ. 1825)
- 1805 – இரண்டாம் யோசப்பு இசுமித்து, அமெரிக்க மதத் தலைவர் (இ. 1844)
- 1807 – அந்தோனி மரிய கிளாரட், ஸ்பானிய ரோமன் கத்தோலிக்க மறைப்போதகர் (இ. 1870)
- 1867 – மேடம் சி. ஜே. வாக்கர், அமெரிக்கத் தொழிலதிபர் (இ. 1919)
- 1902 – சரண் சிங், 5வது இந்தியப் பிரதமர் (இ. 1987)
- 1912 – அன்னா ஜேன் ஆரிசன், அமெரிக்க வேதியியலாளர் (இ. 1998)
- 1922 – அரோல்டு மாசுர்சுகி, அமெரிக்கப் புவியியலாளர், வானியலாளர் (இ. 1990)
- 1933 – அக்கிகித்தோ, சப்பானியப் பேரரசர்
- 1938 – பாபு கான், அமெரிக்கக் கணினி அறிவியலாளர், பரப்புகை கட்டுப்பாடு நெறிமுறையைக் கண்டுபிடித்தவர்
- 1940 – மம்நூன் உசைன், பாக்கித்தானின் 12-வது அரசுத்தலைவர்
- 1948 – ஜான் பீட்டர் அக்ரா, அமெரிக்க வானியலாளர் (இ. 2010)
- 1958 – அனிதா பிரதாப், இந்திய ஊடகவியலாளர், எழுத்தாளர்
- 1962 – இசுடீபன் எல், நோபல் பரிசு பெற்ற உருமேனிய-அமெரிக்க வேதியியலாளர்
- 1967 – கார்லா புரூனி, இத்தாலிய-பிரான்சிய பாடகி
- 1981 – ராதிகா சிற்சபையீசன், இலங்கை-கனடிய அரசியல்வாதி
இறப்புகள்
[தொகு]- 1834 – தோமஸ் மால்தஸ், ஆங்கிலேய பொருளியலாளர் (பி. 1766)
- 1907 – பியேர் ஜான்சென், பிரான்சிய வானியலாளர் (பி. 1824)
- 1952 – சா. தர்மராசு சற்குணர், தமிழகத் தமிழறிஞர் (பி. 1877)
- 1959 – இர்வின் பிரபு, பிரித்தானிய அரசியல்வாதி (பி. 1881)
- 1973 – ஜெரார்டு குயூப்பர், டச்சு-அமெரிக்க வானியலாளர், கோள் அறிவியலாளர் (பி. 1905)
- 1981 – பி. கக்கன், இந்திய விடுதலை போராட்ட வீரர், அரசியல்வாதி (பி. 1908)
- 2004 – பி. வி. நரசிம்ம ராவ், 9வது இந்தியப் பிரதமர் (பி. 1921)
- 2010 – கே. கருணாகரன், கேரளாவின் 7வது முதலமைச்சர் (பி. 1918)
- 2013 – மிக்கைல் கலாசுனிக்கோவ், ஏகே-47 துப்பாக்கியை வடிவமைத்த உருசியப் பொறியாளர் (பி. 1919)
- 2014 – கே. பாலச்சந்தர், தமிழகத் திரைப்பட இயக்குனர் (பி. 1930)
- 2014 – கூத்தபிரான், தமிழக நாடகக் கலைஞர் (பி. 1932)