மார்ச்சு 31
Appearance
(மார்ச் 31 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | மார்ச் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
31 | ||||||
MMXXIV |
மார்ச்சு 31 (March 31) கிரிகோரியன் ஆண்டின் 90 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 91 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 275 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 307 – உரோமைப் பேரரசர் கான்சுடன்டைன் தனது மனைவி மினெர்வினாவை மணமுறிப்பு செய்த பின்னர், இளப்பாறிய பேரரசர் மாக்சிமியானின் மகள் பௌசுடாவைத் திருமணம் புரிந்தார்.
- 627 – அகழ்ப்போர்: முகம்மது நபி மதீனா (சவூதி அரேபியா) மீதான மக்காப் படையினரின் 14-நாள் முற்றுகையை எதிர்கொண்டார்.
- 1492 – எசுப்பானியாவில் இருந்து அனைத்து 150,000 யூதர்களும் முசுலிம்கலும் ரோமன் கத்தோலிக்கராக மாற வேண்டும் அல்லது அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என்ற உத்தரவை இசபெல்லா மாகாராணி பிறப்பித்தார்.
- 1774 – அமெரிக்கப் புரட்சிப் போர்: மாசச்சூசெட்ஸ், பாஸ்டன் துறைமுகத்தை மூடுமாறு பிரித்தானியா உத்தரவிட்டது.
- 1822 – கிரேக்கத் தீவான கியோசில் மேற்கொள்ளப்பட்ட கிளர்ச்சியை அடக்க அங்குள்ள மக்களை உதுமானிய இராணுவம் படுகொலை செய்தது.
- 1866 – சிலியின் வல்பரைசோ துறைமுகம் எசுப்பானியக் கடற்படையின் குண்டுத் தாக்குதலுக்குள்ளானது.
- 1885 – இலங்கையில் தமிழ், சிங்கள, இசுலாமிய வருடப் பிறப்பு நாட்கள் விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டன.[1]
- 1889 – ஈபெல் கோபுரத்தின் தொடக்க விழா கொண்டாடப்பட்டது.
- 1899 – முதலாவது பிலிப்பீன் குடியரசின் தலைநகர் மாலோலோசு அமெரிக்கப் படையினரால் கைப்பற்றப்பட்டது.
- 1909 – பொசுனியா எர்செகோவினா மீதான ஆஸ்திரியாவின் ஆளுமையை செர்பியா ஏற்றுக் கொண்டது.
- 1917 – ஐக்கிய அமெரிக்கா டானிசு மேற்கிந்தியத் தீவுகளை டென்மார்க்கிடம் இருந்து $25 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்குக் கொள்வனவு செய்து அமெரிக்க கன்னித் தீவுகள் எனப் பெயர் மாற்றியது.
- 1918 – ஏறத்தாழ 12,000 முசுலிம் அசர்பைஜான்கள் ஆர்மீனிய புரட்சிக் கூட்டமைப்புப் படையினராலும் போல்செவிக்குகளாலும் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1918 – ஐக்கிய அமெரிக்காவில் பகலொளி சேமிப்பு நேரம் முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1930 – திரைப்படங்களில் பாலியல், குற்றங்கள், சமயம், வன்முறை நிகழ்வுகளைக் காண்பிப்பதற்கான குறியீடுகள் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டன.
- 1931 – நிக்கரகுவாவின் தலைநகரமான மனாகுவாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 2,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
- 1931 – அமெரிக்காவின் டி.டபிள்யூ.ஏ வானூர்தி 599 கேன்சஸ் மாநிலத்தில் விபத்துக்குளாகியதில் எட்டு பேர் உயிரிழந்தனர்.
- 1942 – இரண்டாம் உலகப் போர்: கிறிஸ்துமஸ் தீவை சப்பான் பிரித்தானியாவிடம் இருந்து கைப்பற்றியது.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி செருமனி வானோடி ஒருவர் செருமனியில் இருந்து வெளியேறி மெசேர்ஸ்கிமிட் எம்.இ 262 என்ற உலகின் முதலாவது ஜெட் போர் விமானத்தை அமெரிக்காவுக்குக் கையளித்தார்.
- 1949 – நியூபவுன்லாந்து கனடியக் கூட்டமைப்பில் 10வது மாநிலமாக இணைந்தது.
- 1951 – அமெரிக்கவின் யூனிவாக் 1 என்ற முதலாவது வணிகக் கணினி அந்நாட்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நிறுவனத்துக்கு தரப்பட்டது.
- 1959 – திபெத்தின் 14வது தலாய் லாமா, டென்சின் கியாட்சோ, எல்லையைக் கடந்து இந்தியாவினுள் நுழைந்து அரசியல் புகலிட உரிமை கோரினார்.
- 1964 – பிரேசிலில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அங்கு காஸ்டெலோ பிராங்கோ தலைமையில் இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
- 1966 – சோவியத்தின் லூனா 10 விண்கலம் சந்திரனை நோக்கி ஏவப்பட்டது. இதுவே சந்திரனின் சுற்றுவட்டத்தை வலம் வந்த முதலாவது விண்கலமாகும்.
- 1970 – 12 ஆண்டுகள் விண்வெளியில் களித்த எக்ஸ்புளோரர் 1 விண்கலம் புவியின் வளிமண்டலத்துள் வந்தது.
- 1990 – இந்திய அமைதிப் படை ஈழத்தில் இருந்து முற்றாக விலக்கப்பட்டது.
- 1991 – ஜோர்ஜியாவில் 99 விழுக்காடு வாக்காளர்கள் சோவியத் ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
- 1995 – உருமேனியாவில் ஏ310 வானூர்தி வீழ்ந்ததில், அதில் பயணம் செய்த அனைத்து 60 பேரும் உயிரிழந்தனர்.
- 2004 – ஈராக் போர்: ஈராக்கின் பலூஜா நகரில் நான்கு அமெரிக்க தனியார் போர்ப்படையினர் கொல்லப்பட்டனர்.
- 2007 – முதலாவது புவி மணி நிகழ்வு சிட்னியில் இடம்பெற்றது.
பிறப்புகள்
- 1504 – குரு அங்கது தேவ், சீக்கிய குரு (இ. 1552)
- 1596 – ரெனே டேக்கார்ட், பிரான்சியக் கணிதவியலாளர், மெய்யியலாளர் (இ. 1650)
- 1685 – யோகான் செபாஸ்தியன் பாக், செருமானிய இசைக்கலைஞர், இசையமைப்பாளர் (இ. 1750)
- 1732 – ஜோசப் ஹேடன், ஆத்திரிய இசையமைப்பாளர் (இ. 1809)
- 1865 – ஆனந்தி கோபால் ஜோஷி, இந்திய மருத்துவர் (இ. 1887)
- 1884 – அதிரியான் வான் மானன், டச்சு-அமெரிக்க வானியலாளர் (இ. 1946)
- 1890 – வில்லியம் லாரன்ஸ் பிராக், நோபல் பரிசு பெற்ற ஆத்திரிய-ஆங்கிலேய இயற்பியலாளர் (இ. 1971)
- 1898 – சா. ஜே. வே. செல்வநாயகம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1977)
- 1908 – பிலிப் சைல்ட்சு கீனான், அமெரிக்க வானியலாளர் (இ. 2000)
- 1912 – ஏ. ஆர். ஏ. எம். அபூபக்கர், இலங்கை அரசியல்வாதி
- 1914 – ஒக்டாவியோ பாஸ், நோபல் பரிசு பெற்ற மெக்சிக்கோ கவிஞர் (இ. 1998)
- 1928 – இராம. அரங்கண்ணல், தமிழக எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர், அரசியல்வாதி (இ. 1999)
- 1934 – கமலா தாஸ், மலையாள கவிஞர் (இ. 2009)
- 1938 – சீலா தீக்சித், கேரளத்தின் 22வது ஆளுநர் (இ. 2019)
- 1948 – ஆல் கோர், அமெரிக்காவின் 45வது துணை அரசுத்தலைவர், நோபல் பரிசு பெற்றவர்
- 1950 – ஹல்தர் நாக், இந்தியக் கவிஞர்
- 1962 – ராம்கி, தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
- 1983 – அசீம் ஆம்லா, தென்னாப்பிரிக்கத் துடுப்பாளர்
இறப்புகள்
- 1631 – ஜான் டன், ஆங்கிலேய வழக்கறிஞர், கவிஞர் (பி. 1572)
- 1751 – பிரெடரிக், வேல்சு இளவரசர் (பி. 1707
- 1861 – என்றி மார்ட்டின், ஈழத் தமிழ் எழுத்தாளர், ஓவியர், மதப் போதகர்
- 1917 – எமில் அடால்ஃப் வான் பெர்ரிங், நோபல் பரிசு பெற்ற செருமானிய உயிரியலாளர் (பி. 1854)
- 1945 – ஹான்ஸ் பிஷ்ஷர், நோபல் பரிசு பெற்ற செருமனிய வேதியியலாளர் (பி. 1881)
- 1965 – தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான், தமிழகத் தமிழறிஞர் (பி. 1904)
- 1972 – மீனாகுமாரி, இந்தியத் திரைப்பட நடிகை (பி. 1932)
- 1980 – ஜெசி ஓவென்ஸ், அமெரிக்க தடகள வீரர் (பி. 1913)
- 1981 – சி. கதிரவேலுப்பிள்ளை, இலங்கை அரசியல்வாதி (பி. 1924)
- 1995 – செலெனா, அமெரிக்கப் பாடகி (பி. 1971)
- 1997 – இலைமன் சுட்டிராங் சுபிட்சர், அமெரிக்க இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1914)
சிறப்பு நாள்
- இனவழிப்பு நினைவு நாள் (அசர்பைஜான்)
- விடுதலை நாள் (மால்ட்டா)
மேற்கோள்கள்
- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 45