உள்ளடக்கத்துக்குச் செல்

ஹான்ஸ் பிஷ்ஷர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹான்ஸ் பிஷ்ஷர்

பிறப்பு (1881-07-27)27 சூலை 1881
ஜெர்மனி
இறப்பு31 மார்ச்சு 1945(1945-03-31) (அகவை 63)
முனிச், ஜெர்மனி
தேசியம்ஜெர்மனி
துறைவேதியியல்
Alma materலோசான் பல்கலைக்கழகம்,
மார்போர்ன் பல்கலைக்கழகம்
துறை ஆலோசகர்தியோடர் ஜின்கே[சான்று தேவை]
முக்கிய மாணவர்
பரிசுகள்வேதியியல் நோபல் பரிசு (1930)
டேவி பதக்கம் (1937)

ஹான்ஸ் பிஷ்ஷர் (Hans fischer (27 ஜூலை 1881 - 31 மார்ச் 1945) ஒரு ஜெர்மன் கரிம வேதியியலாளர். ஹெமின் மற்றும் குளோரோபல் கலவையை கண்டறிந்ததற்காகவும், குறிப்பாக ஹெமின் கலவையை உருவாக்கிய அவரது ஆராய்ச்சிக்காகவும் 1930 ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசை பெற்றார்[1].

ஆரம்ப ஆண்டுகள்

[தொகு]

பிஷ்ஷர், ஹோச்ஸ்ட் ஆன் மென் இல் பிறந்தார். தற்போது இது பிராங்பேர்ட்டின் நகரத்தின் மாவட்டம் ஆகும். இவரது பெற்றோர் டாக்டர் யூஜென் பிஷ்ஷர், வைஸ்பேடனில் உள்ள கல்லெ & கோ நிறுவனத்தின் இயக்குனர், மற்றும் ஸ்டுட்கார்ட் தொழில்நுட்ப உயர்நிலை மற்றும் அண்ணா ஹெர்டெகன் பள்ளிகளில் விரிவுரையாளராகவும் பணிபுரிந்தார். இவர் ஸ்டூட்கார்ட்டில் ஆரம்ப பள்ளிக்குச் சென்றார். பின்னர் 1899 ஆம் ஆண்டில் வைஸ் பேடனில் "ஹுமனிஸ்டிஸ்செஸ் ஜிம்னாசியம்" இல் மெட்ரிகுலேசன் பள்ளியில் பயின்றார். முதலில் இவர் லோசான் பல்கலைக்கழகத்தில் வேதியியல் மற்றும் மருந்துவம் படித்து, பின்னர் மார்பர்க்கில் படித்தார். இவர் 1904 இல் பட்டம் பெற்றார், 1908 ஆம் ஆண்டில் இவர் எம்.டி. படிப்பிற்காக தகுதிபெற்றார்.

தொழில் வாழ்க்கை

[தொகு]

முதன்முதலில் மூனிச்சில் உள்ள மருத்துவ நிலையத்திலும், பின்னர் எமில் ஃபிஷ்ஷரின் கீழ் பர்ஸ்ட் பெர்லின் கெமிக்கல் இன்ஸ்டிடியூட்டிலும் பணிபுரிந்தார். இவர் 1911 இல் முனிச் திரும்பினார் மற்றும் ஒரு வருடத்திற்கு பின் அக மருத்துவவியல் பிரிவில் விரிவுரையாளராகத் தேர்வானார். 1913 ஆம் ஆண்டில் முனிச்சில் உள்ள உடலியல் கல்விநிறுவனத்தில் உடலியல் பிரிவில் விரிவுரையாளராக ஆனார். 1916 ஆம் ஆண்டில் இன்ஸ்பெர்க் பல்கலைக்கழகத்தில் மருத்துவ வேதியியல் பேராசிரியராக ஆனார். அங்கிருந்து இவர் 1918 இல் வியன்னா பல்கலைக் கழகத்தில் பணியாற்றினார்.

1921 ஆம் ஆண்டு முதல் முனிக்கின் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கரிம வேதியியல் பேராசிரியராக இருந்தார்.

பிஷ்ஷரின் விஞ்ஞானப் பணிகள் பெரும்பாலும் இரத்த, பித்த நீர், மற்றும் இலைகளின் குளோரோபில் நிறமிகள் ஆகியவற்றை ஆய்வு செய்வதோடு, இந்த நிறமிகளை உருவாக்கும் பைரொல்லின் வேதியியலுடன் தொடர்புடையவையாக இருந்தன. இவரது பிலிரூபின் மற்றும் ஹெமின் உருவாக்கம் முக்கியத்துவம் வாய்ந்தது. 1930 ல் நோபல் பரிசு பெற்றார். 1976 ஆம் ஆண்டில் இவரின் நினைவாக ஃபிஷர் நிலவுக் குழிகள் என நிலவுக் குழிக்கு பெயரிடப்பட்டது.

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

பிஷ்ஷர் 1935 இல் வில்ட்ரூட் ஹூப்பை திருமணம் செய்து கொண்டார். இரண்டாம் உலகப் போரின் கடைசி நாட்களில் இவர் தனது நிறுவனம் மற்றும் தனது உழைப்பு அழிக்கப்பட்டதால் ஏற்பட்ட விரக்தியால் முனிச் நகரில் தற்கொலை செய்துகொண்டார்.

மரியாதைகள்

[தொகு]
  • அறிவியல் லியோபோல்டினாவின் அகாடெமி (1919)
  • தனியார் கவுன்சிலர் (1925)
  • லிபிக் மெமோரியல் பதக்கம் (1929)
  • வேதியியல் நோபல் பரிசு (1930)
  • கௌரவ டாக்டர் பட்டம், ஹார்வர்ட் பல்கலைக்கழகம் (1936)
  • லண்டனின் ராயல் சொசைட்டி டேவி மெடல் (1937)

மேற்கோள்

[தொகு]

இலக்கியம்

[தொகு]
  • Heinrich Wieland (1950), "Hans Fischer und Otto Hönigschmid zum Gedächtniss", Angewandte Chemie, 62 (1): 1–4, doi:10.1002/ange.19500620102.
  • Bickel, M H (2001), "[Henry E. Sigerist and Hans Fischer as pioneers of a medical history institute in Zurich]", Gesnerus, 58 (3–4), pp. 215–9, PubMed
  • Stern, A J (1973), "Hans Fischer (1881–1945)", Ann. N. Y. Acad. Sci., 206 (1), pp. 752–61, Bibcode:1973NYASA.206..752S, doi:10.1111/j.1749-6632.1973.tb43252.x, PubMed
  • Watson, C J (1965), "Reminiscences of Hans Fischer and his laboratory", Perspect. Biol. Med., 8 (4), pp. 419–35, PubMed
  • Kämmerer, H (1961), "Hans Fischer (1881–1945). A reminiscence on the 80th anniversary of his birth", Münchener Medizinische Wochenschrift (1950) (published Nov 3, 1961), 103, pp. 2164–6, PubMed

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹான்ஸ்_பிஷ்ஷர்&oldid=3703637" இலிருந்து மீள்விக்கப்பட்டது