சுழல் தாரை
Appearance
சுழல் தாரை (Turbojet) எந்திரங்களே, காற்றை சுவாசிக்கும் தாரை எந்திரங்களில் மிகவும் பழமையானவை. 1930-களின் பிற்பகுதியில் இங்கிலாந்தைச் சேர்ந்த பிரான்க் விட்டில் என்பாரும் ஜெர்மனியைச் சேர்ந்த ஹான்ஸ் வான் ஓகின் என்பாரும் வெறும் கருத்தாக்கத்தில் இருந்த எந்திரங்களை செயல்முறையில் தனித்தனியே செய்து காட்டினார்கள்.
மாக் 2 வேகத்துக்குக் கீழ் பயன்படுத்தும் போது இவ்வெந்திரம் திறம்பட செயல் புரியாது. மேலும் இவை மிகவும் சத்தத்தை எழுப்புபவை. பொருளாதார காரணங்களுக்காக விசிறி-சுழல் தாரை எந்திரங்கள் பெருமளவிலான போக்குவரத்து விமானங்களில் பயன்படுத்தப்படுகின்றன. சுழல் தாரை எந்திரங்கள் எறிகணைகளில் பயன்படுத்தப்படுகின்றன. ஏனெனில் அவை குறைந்த முகப்பு பரப்பு கொண்டவை, எளிதான செயல்பாடுடையவை மற்றும் மிக வேகமான புறம்செல் காற்றோட்டம் கொண்டவை.