அக்டோபர் 1
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | அக்டோபர் 2015 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | ||||
| 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
| 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
| 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
| 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
| MMXV | ||||||
அக்டோபர் 1 (October 1) கிரிகோரியன் ஆண்டின் 274 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 275 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 91 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்[தொகு]
- கிமு 331 - மகா அலெக்சாண்டர் பேர்சியாவின் மூன்றாம் டாரியஸ் மன்னனை போரில் வென்றான்.
- 959 - முதலாம் எட்கார் இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான்.
- 1787 - "சுவோரொவ்" தலைமையில் ரஷ்யர்கள் கின்பேர்ன் என்ற இடத்தில் துருக்கியரைத் தோற்கடித்தனர்.
- 1788 - நியூவென் ஹியூ வியட்நாமின் மன்னராகத் தன்னை அறிவித்தார்.
- 1795 - பிரான்ஸ் பெல்ஜியத்தைப் பிடித்தது.
- 1799 - புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டான்.
- 1800 - ஸ்பெயின் லூசியானாவை பிரான்சிடம் தந்தது.
- 1814 - நெப்போலியனின் தோல்வியை அடுத்து ஐரோப்பாவின் புதிய அரசியல் வரைபடத்தை வரைவதற்காக வியென்னா காங்கிரஸ் கூடியது.
- 1827 - இவான் பஸ்க்கேவிச் தலைமையில் ரஷ்ய இராணுவம் ஆர்மேனியாவின் தலைநகர் யெரெவானைப் பிடித்தது.
- 1843 - நியூஸ் ஒஃப் தெ வேர்ல்ட் பத்திரிகை லண்டனில் வெளியிட ஆரம்பிக்கப்பட்டது.
- 1854 - இந்திய அஞ்சல் துறை ஏற்படுத்தப்பட்டது.
- 1869 - உலகின் முதல் தபால் அட்டை ஆஸ்திரியாவில் வெளியிடப்பட்டது.
- 1880 - இந்தியாவுடனான காசுக்கட்டளை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1880 - முதலாவது மின் விளக்கு தொழிற்சாலையை தொமஸ் எடிசன் ஆரம்பித்தார்.
- 1887 - பிரித்தானியரினால் பலூசிஸ்தான் கைப்பற்றப்பட்டது.
- 1892 - இலங்கையில் இந்திய இரண்டு அணா நாணயம் செல்லுபடியற்றதாக்கப்பட்டது. பதிலாக வெள்ளி நாணயம் அறிமுகமானது.
- 1895 - பிரெஞ்சுப் படைகள் மடகஸ்காரின் அண்டனனாரிவோ நகரைக் கைப்பற்றினர்.
- 1898 - ரஷ்யாவின் முக்கிய நகரங்களிலிருந்து யூதர்கள் இரண்டாம் நிக்கலாஸ் மன்னனால் வெளியேற்றப்பட்டனர்.
- 1910 - லாஸ் ஏஞ்சலீஸ் டைம்ஸ் கட்டடம் பெரும் குண்டுவெடிப்பினால் தகர்க்கப்பட்டது. இதில் 21 பேர் கொல்லப்பட்டனர்.
- 1918 - முதலாம் உலகப் போர்: அரபுப் படைகள் சிரியாவின் டமாஸ்கஸ் நகரைக் கைப்பற்றினர்.
- 1931 - ஜோர்ஜ் வாஷிங்டன் பாலம் திறக்கப்பட்டது.
- 1943 - இரண்டாம் உலகப் போர்: நேப்பில்ஸ் கூட்டுப் படைகளிடம் வீழ்ந்தது.
- 1949 - மா சே துங்கினால் மக்கள் சீனக் குடியரசு அறிவிக்கப்பட்டது.
- 1953 - ஆந்திரா மாநிலம் உருவாக்கப்பட்டது.
- 1960 - சைப்பிரஸ், மற்றும் நைஜீரியா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றன.
- 1961 - கிழக்கு மற்றும் மேற்கு கமரூன் ஒன்றுபட்டு கமரூன் சமஷ்டிக் குடியரசு ஆகியது.
- 1965 - இந்தோனேசியாவில் நிகழ்ந்த கம்யூனிசப் புரட்சி ஜெனரல் சுகார்ட்டோவினால் முறியடிக்கப்பட்டது.
- 1969 - கொன்கோர்ட் விமானம் முதற்தடவையாக ஒலியின் வேகத்தை மீறியது.
- 1971 - வால்ட் டிஸ்னி உலகம் புளோரிடாவில் அமைக்கப்பட்டது.
- 1975 - சிஷெல்ஸ் சுயாட்சியைப் பெற்றது. எலீஸ் தீவுகள் கில்பேர்ட் தீவுகளிலிருந்து பிரிக்கப்பட்டு துவாலு என்ற பெயரைப் பெற்றது.
- 1977 - பிரேசில் கால்பந்தாட்ட வீரர் பெலே இளைப்பாறினார்.
- 1978 - துவாலு ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
- 1979 - ஐக்கிய அமெரிக்கா பனாமா கால்வாயை பனாமாவுக்கு மீள் அளித்தது.
- 1982 - சொனி நிறுவனம் முதலாவது குறுந்தட்டு ஒலிபரப்பு சாதனத்தை (CDP-101) வெளியிட்டது.
- 1992 - விடுதலைப் புலிகள் கட்டைக்காடு இராணுவக் காவலரணைத் தாக்கி பெருந்தொகையான ஆயுதங்களைக் கைப்பற்றினர்.
- 1994 - பலாவு ஐநாவிடம் இருந்து விடுதலை பெற்றது.
- 2001 - ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையைத் தகர்க்க தற்கொலைப் படையினர் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
- 2005 - பாலியில் நடந்த குண்டுவெடிப்பில் 23 பேர் கொல்லப்பட்டனர்.
- 2006 - பாண்டிச்சேரி மாநிலத்தின் பெயர் புதுச்சேரி என மாற்றம் பெற்றது.
பிறப்புக்கள்[தொகு]
- 1847 - அன்னி பெசண்ட், பெண் விடுதலைக்குப் போராடியவர் (இ. 1933)
- 1924 - ஜிம்மி கார்ட்டர், அமெரிக்காவின் 39வது குடியரசுத் தலைவர்
- 1927 - சிவாஜி கணேசன், தமிழ்த் திரைப்பட நடிகர் (இ. 2001)
- 1928 - ஜூ ரோங்ஜி, சீனத் தலைவர்
- 1932 - அரங்க முருகையன், தமிழறிஞர், எழுத்தாளர் (இ 2009)
- 1936 - கே. எஸ். சிவகுமாரன், ஈழத்து எழுத்தாளர், திறனாய்வாளர்
- 1947 - ஆரன் சீசேனோவர், நோபல் பரிசு பெற்ற இசுரேலியர்
இறப்புகள்[தொகு]
- 1973 – பாபநாசம் சிவன், கருநாடக இசை, தமிழிசை அறிஞர் (பி. 1890)
- 2008 - பூர்ணம் விஸ்வநாதன், தமிழக நாடக, திரைப்பட நடிகர்
சிறப்பு நாள்[தொகு]
- மக்கள் சீனக் குடியரசு - தேசிய நாள் (1949)
- சைப்பிரஸ் - விடுதலை நாள் (1960)
- நைஜீரியா - விடுதலை நாள் (1960)
- துவாலு - விடுதலை நாள் (1978)
- சிங்கப்பூர் - சிறுவர் நாள்
- ஆர்மேனியா - ஆசிரியர் நாள்
- அனைத்துலக முதியோர் நாள்
- அக்டோபர் 1-7 உலக வனவுயிரி வாரம்