ஈபெல் கோபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஈபெல் கோபுரம்
Eiffel Tower
La Tour Eiffel
The Eiffel Tower as seen from
the Champ de Mars
ஈபெல் கோபுரம் is located in பாரிசு
ஈபெல் கோபுரம்
Location within Paris
பொதுவான தகவல்கள்
வகை அவதானிப்புக் கோபுரம்,
வானொலி ஒலிபரப்புக் கோபுரம்
அமைவிடம் பாரிசு, பிரான்சு
உரிமையாளர் பாரிசு நகரம், பிரான்சு
கட்டுமானம்
தொடக்கம் 1887
நிறைவு 1889
தள எண்ணிக்கை 3
முதன்மை ஒப்பந்தகாரர் அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல்
வடிவமைப்புக் குழு
கட்டிடக்கலைஞர் ஸ்டீவன் சவஸ்ட்ரி
அமைப்புப் பொறியாளர் மொரிசு கொச்லின்,
ஏமிலி நோகியே

ஈபெல் கோபுரம் (பிரெஞ்சு: Tour Eiffel, /tuʀ ɛfɛl/) பாரிஸில் மிகக் கூடுதலாக அடையாளம் காணத்தக்க குறிப்பிடமாகும். அத்துடன், உலகம் முழுவதிலும், இது பாரிஸிற்கான ஒரு குறியீடாகவும் அறியப்படுகிறது. இதை வடிவமைத்த குஸ்ட்டேவ் ஈபெல்ல்லின் பெயரினால் அழைக்கப்படும் இக் கோபுரம், முக்கியமான சுற்றுலாத் தலமாகும். ஆண்டுதோறும் 55 இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் இதைப் பார்க்க வருகிறார்கள். இக் கோபுரம் தனது 20 கோடியாவது பார்வையாளரை 2002, நவம்பர் 28 ஆம் திகதி பெற்றது.

அறிமுகம்[தொகு]

1887 தொடக்கம் 1889 வரையான காலப்பகுதியில், இவ்வமைப்பு, பிரெஞ்சுப் புரட்சியின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான, எக்ஸ்பொசிசன் யூனிவேசெல் (1889) என்னும் உலகக் கண்காட்சி விழாவுக்கு, நுழைவாயில் வளைவாகக் கட்டப்பட்டது. 1889, மார்ச் 31 ஆம் திகதி தொடக்கவிழா நடைபெற்று, மே 6 இல் திறந்துவிடப்பட்டது. 300 உருக்கு வேலையாட்கள், 5 இலட்சம் ஆணிகளைப் பயன்படுத்தி, 18,038 உருக்குத் துண்டுகளை ஒன்றுடனொன்று பொருத்தினார்கள். அக்காலத்திய பாதுகாப்புத் தரத்தைக் கருத்தில் கொள்ளும்போது, இதன் கட்டுமானக் காலத்தில், உயர்த்திகளைப் பொருத்தும்போது, ஒரேயொரு தொழிலாளி மட்டுமே இறக்க நேர்ந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

இக் கோபுரம், அதன் உச்சியிலுள்ள, 20மீட்டர் உயரமுள்ள, தொலைக்காட்சி அண்டெனாவைச் சேர்க்காது, 300 மீட்டர்கள் (986 அடிகள்) உயரமானதும், 10,000 தொன்களிலும் (2 கோடியே 10 இலட்சம் இறாத்தல்) கூடிய நிறையை உடையதுமாகும். இது கட்டிமுடிக்கப்பட்டபோது, உலகின் அதிக உயரமான அமைப்பு இதுவேயாகும். இதன் பராமரிப்புக்காக, ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை 50 தொன்கள் கடும் மண்ணிறப் பூச்சு மை பயன்படுத்தப்படுகிறது. வெப்பநிலைமாறும் போது, உருக்கு சுருங்கி விரிவதன் காரணமாக, ஈபெல் கோபுரத்தின் உயரத்தில் பல சதம மீட்டர்கள் வேற்பாடு ஏற்படுகின்றது.

இது கட்டப்பட்ட காலத்தில், எதிர்பார்க்கக் கூடியவகையில், பொதுமக்களிடமிருந்து எதிர்ப்பு இருந்தது. பலர் இது பார்வைக்கு அழகாக இராதென்றே கருதினார்கள். இன்று இது உலகிலுள்ள மிகக் கவர்ச்சிகரமான கட்டிடக்கலைகளுள் ஒன்று என்று கருதப்படுகிறது.

ஆரம்பத்தில், இக் கோபுரத்தை 20 ஆண்டுகள் அவ்விடத்தில் நிறுத்திவைப்பதற்கு ஈபெல் அநுமதி பெற்றிருந்தார், எனினும், தொடர்புகளுக்கு இது மிகவும் பெறுமதி மிக்கதாக இது இருந்ததனால், அனுமதிப்பத்திரம் காலாவதியான பின்னும், கோபுரம் அங்கே நிற்க அனுமதிக்கப்பட்டது.

கட்டமைப்பு[தொகு]

ஐஃபல் கோபுரத்தின் அடித்தளம் 1887ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கிழக்கு மற்றும் தெற்கு கால்கள் நேராகவும் மற்றும் ஒவ்வொரு கால்களும் 6 அடி 6 அங்குலம் உள்ள திண்ணமான சிமிட்டி பலகையில் நிறுத்தப்பட்டது. மற்ற இரு கால்களும், சேனி நதி அருகே இருந்ததால் ஒவ்வொன்றிக்கும் இரண்டு ஆழ் அடித்தளம் தேவைப்பட்டது.அவை அழுதப்பட்ட காற்று கேய்சான்கள் மூலமாக (49 X 20 X 22 அடி ) அமைக்கப்பட்டது. இந்த பலகையானது இரும்பு வேலைப்பாடுகளை(லாடம்) தாங்கக்கூடிய வளைந்த தலை உடைய சுண்ணாம்பு தொகுதியால் அமைக்கப்பட்டது.இந்த லடாமானது 25 அடி நீளமும் 4 அங்குலம் சுற்றளவும் கூடிய திருகு அச்சாணியால் இரும்பு வேலைப்பாட்டுடன் கோர்க்கப்பட்டது.

நிகழ்ச்சிகள்[தொகு]

ஜனவரி 12, 1908 ல், முதலாவது தொலைதூரத் தகவல் வானொலி கோபுரத்திலிருந்து அனுப்பப்பட்டது.

1929 ல், கிறிஸ்லெர் கட்டிடம் நியு யார்க்கில் கட்டி முடிக்கப்பட்டபோது, ஈபெல் கோபுரம், உலகின் அதி உயர்ந்த அமைப்பு என்ற பெயரை இழந்தது.

அடால்ஃப் ஹிட்லர், இரண்டாவது உலக யுத்தத்தின்போது, பாரிஸுக்கு விஜயம் செய்தபோது, அவர் 1792 படிகளையும், ஏறியே உச்சிக்குச் செல்லட்டும் என்பதற்காக, பிரெஞ்சுக்காரர் அதன் உயர்த்திகளைச் செயலிழக்கச் செய்தனர். அதனைப் பழுதுபார்க்கத் தேவைப்படும் உதிரிப்பாகத்தைப் பெற்றுக்கொள்வது, யுத்தச் சூழலில் முடியாது என்று கருதப்பட்டதெனினும், நாஸிகள் புறப்பட்டுச் சென்ற சில மணி நேரத்திலேயே அது செயல்படத் தொடங்கிவிட்டது. ஹிட்லர் கீழேயே நின்றுவிட்டுச் சென்றுவிட்டார்.

ஜனவரி 3, 1956 ல் தீயொன்றினால் கோபுரத்தின் மேற்பகுதி சேதமடைந்தது.

1959ல் தற்போதுள்ள வானொலி அலைவாங்கி அதன் உச்சியில் பொருத்தப்பட்டது.

தொடர்பாடல்[தொகு]

20ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து, வானொலி ஒலிபரப்பியாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. 1950 வரை, மின்கம்பி மூலமாகவே இணைக்கப்பட்டிருந்தது. 1909ம் ஆண்டு நெடுந்தொலைவு அலைபரப்பிகள், கட்டிடத்தின் அடியில் பதிக்கப்பட்டது. தெற்கு தூணிலிருக்கும் இந்த அலைபரப்பியை இப்பொழுதும் காணலாம். இன்று, இரு வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையங்கள் ஈபெள் கோபுரத்தின் மூலம் தங்கள் அலைவரிசைகளை ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றது.

பண்பலை[தொகு]

அலைவரிசை kW சேவை நிறுவனம்
87.8 MHz 10 பிரான்சு இன்டர்
89.0 MHz 10 RFI பாரீஸ்
89.9 MHz 6 TSF ஜாஸ்
90.4 MHz 10 நாஸ்டல்கி
90.9 MHz 4 சான்ட் பிரான்சு

பிரதிபண்ணல்களும், போலிகளும்[தொகு]

ஈபெல் கோபுரத்தின் பிரதிகளை உலகம் முழுவதும் காணலாம் அவற்றுல் முக்கியமானவை சில:

  • டோக்கியோ, யப்பான் டோக்க்யோ கோபுரம் என அழைக்கப்படு இது ஈபெல் கோபுரத்தைவிட 13 மீட்டர் உயரமானதாகும்.(அளவு விகிதம் 1.04:1)

உலகின் உயரமான கோபுரங்கள்[தொகு]

பெயர் மொத்த உயரம் திறக்கப்பட்ட ஆண்டு நாடு நகர் குறிப்புகள்
டோக்கியோ ஸ்கை ட்ரி 2,080 ft (634 m) 2011 சப்பான் டோக்கியோ
கியிவ் தொலைக்காட்சி நிலைய கோபுரம் 1,263 ft (385 m) 1973 உக்ரைன் கியிவ்
தாசுகெந்த் கோபுரம் 1,230 ft (375 m) 1985 உஸ்பெகிஸ்தான் தாசுகெந்த்
சவுசான் தீவு பாலத்தின் கோபுரம் 1,214 ft (370 m) 2009 சீனக் குடியரசு சியாங்கயின்
யாங்சட் ஆற்றின் குறுக்கேயுள்ள பாலத்தின் கோபுரம் 1,137 ft (347 m) 2003 சீனக் குடியரசு சியாங்கயின்
டிராகன் கோபுரம் 1,102 ft (336 m) 2000 சீனக் குடியரசு ஆர்பின்
டோக்கியோ கோபுரம் 1,091 ft (333 m) 1958 சப்பான் டோக்கியோ
விட்டி தொலைக்காட்கி கோபுரம் 1,078 ft (329 m) 1962 ஐக்கிய அமெரிக்கா சோர்வுத், விஸ்கன்சின்
டபுள்யு.எஸ்.பி. தொலைக்காட்கி கோபுரம் 1,075 ft (328 m) 1957 ஐக்கிய அமெரிக்கா அட்லான்டா, ஜார்ஜியா

பிரான்சிலுள்ள ஈபெல் கோபுரத்தைவிட உயரமான கோபுரங்கள்[தொகு]

பெயர் மொத்த உயரம் திறக்கப்பட்ட ஆண்டு கட்டிட வகை நகர் குறிப்புகள்
நெடுந்தொலைவு அலைபரப்பி 350 m (1,150 ft) 1974 உயர் கோபுரம் அலோயஸ்
எச்.டபுள்யு.யு அலைபரப்பி 350 m (1,150 ft)  ? உயர் கோபுரம் ரோஸ்நே இராணுவ அலைபரப்பி
வியாதக் தி மில்லாவு 343 m (1,125 ft) 2004 பாலத்தின் தூண் மிலாவு
நியார்ட்-மைசோனே தொலைக்காட்சி கோபுரம் 330 m (1,080 ft)  ? உயர் கோபுரம் நியார்ட்
மான்ஸ்-மாயத் அலைபரப்பி 342 m (1,122 ft) 1993 உயர் கோபுரம் மாயத்
லா ரெஜினே அலைபரப்பி 330 m (1,080 ft) 1973 உயர் கோபுரம் சாயிசாக் இராணுவ அலைபரப்பி
ரோமுலஸ் அலைபரப்பி 330 m (1,080 ft) 1974 உயர் கோபுரம் ரோமுலஸ்

காட்சியகம்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈபெல்_கோபுரம்&oldid=1826649" இருந்து மீள்விக்கப்பட்டது