பேச்சு:ஈபெல் கோபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Wikipedia-logo-v2-bw.svg ஈபெல் கோபுரம் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

இதன் பெயர் ஐஃவல் அல்லது ஐஃபல் என்று இருத்தல் நல்லது. ஐஃவெல், ஐபெல், என்றும் இருக்கலாம். பிரெஞ்ச்சு மொழியில் எப்படி ஒலிக்கிறார்கள் என்று அறிந்தவர்கள் தெரிவித்தால் அதன்படியே தமிழில் எழுதுவது இன்னும் நல்லது. ஆங்கில வழி பலுக்குலுக்கு இங்கே பார்க்கவும் --செல்வா 16:31, 9 ஜூலை 2007 (UTC)

:ஆங்கிலத்தில் பொதுவாக நானறிந்தவரையில் இரண்டு மெய் எழுத்துக்கள் (vowels) தொடர்ந்து வந்தால் (அதாவது a, e, i, o, u) பொதுவாக இரண்டாவது எழுத்தையே உச்சரிப்பதுதான். எடுத்துக்காட்டாக einstin (ஐன்ஸ்டின்). இது பிழையா சரியா என்பதை நான் அறியேன். யாராவது குறிப்பிட்டால் நல்லது. எனக்கு ஐபெல் சரியெனத் தோன்றுகின்றது. ஏனைய அண்மிய ஒலிபெயர்ப்புக்களிற்கு வழிமாற்றுப்பக்கங்கள் அமைக்கலாம். --Umapathy 16:48, 9 ஜூலை 2007 (UTC) எனது மேற்கண்ட கருத்துத் தவறானது. கீழே உள்ள செல்வாவின் கருத்தே சரியானது.--Umapathy 11:55, 11 ஜூலை 2007 (UTC)

செருமன் மொழியில் ei என்று வருமிடங்களிலெல்லாம் ஐ என்றும் ie என்று வருமிடங்களில் எல்லாம் ஈ என்றும் ஒலிப்பது வழக்கம். ஐன்ஸ்டின் என்பது செருமானியப் பெயர். ஆங்கிலத்தில் இவ்வகையான ஒழுங்குமுறைகள் ஏதும் இல்லை. ஆங்கிலத்தில் ஒலிப்பு ஒழுக்கம் இருப்பது மிகச்சிறுபான்மையே. ஆங்கிலத்தில் ஒவ்வொரு சொல்லையும் தனித்தனியாக பலுக்க கற்றுக்கொள்ள வேண்டும். ஒலிப்பொழுக்கத்தை நம்ப முடியாது. ஏனெனில் ஆங்கில ஒலிப்பொழுக்கம் அற்ற மொழி. இங்குள்ள சொல் பிரெஞ்ச்சு மொழியைச் சேர்ந்தது. --செல்வா 17:18, 9 ஜூலை 2007 (UTC)
இங்கே பிரெஞ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலர் effel (எfபெல்) என்றவாறு பலுக்கினார். என்னிடம் ஒலிப்பதிவு செய்யும் வசதிகள் இல்லை. இருந்தால் பதிவேற்றிவிடலாம். --Umapathy 12:05, 11 ஜூலை 2007 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஈபெல்_கோபுரம்&oldid=2294347" இருந்து மீள்விக்கப்பட்டது