உள்ளடக்கத்துக்குச் செல்

ஜான் டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அதி வணக்கத்துக்குரிய

ஜான் டன்
John Donne
ஐசாக் ஒலிவர் வரைந்த ஓவியம்
ஐசாக் ஒலிவர் வரைந்த ஓவியம்
பிறப்பு22 சனவரி 1572[1]
இலண்டன், இங்கிலாந்து
இறப்பு31 மார்ச்சு 1631(1631-03-31) (அகவை 59)
இலண்டன்
தொழில்கவிஞர், போதகர், வழக்கறிஞர்
தேசியம்ஆங்கிலேயர்
கல்வி நிலையம்ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்
கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்
வகைஅங்கதம், காதல் கவிதை, சரமகவி
கருப்பொருள்காதல், பாலுணர்வியல், சமயம், இறப்பு
இலக்கிய இயக்கம்நுண்புலக் கவிதை

ஜான் டன் (John Donne, 22 சனவரி 1572[1] – 31 மார்ச் 1631) இங்கிலாந்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் எழுத்தராக பணியாற்றிய ஜான் டன் மிகச் சிறந்த கவிஞரும் ஆவார்.

இவர் மனோதத்துவ கவிஞர்களின் முன்னோடியாக கருதப்படுகின்றார். இவரது கவிதைகள் செய்யுள்கள், மதப்பாடல்கள்,காதல் பாடல்கள் ஆகியவை அழுத்தமானதாகவும் உணர்வு பூர்வமானதாகவும் அமைந்துள்ளன. மேலும் இவரது கவிதைகள் மொழியின் அதிர்வுகள் நிரம்பியதாகவும், உருவகங்களாகவும் குறிப்பிடப்படுகின்றன. அதிரடி துவக்கத்துடன் கூடிய கதாபாத்திரங்கள், திடீர் திருப்பங்கள், முரண்பாடுகள் நிரம்பியதே இவரது நடையாகும். மேற்குறிப்பிட்ட நடையுடன் வியத்தகு நடைமுறை சந்தங்கள், கடினமான சொற்கள் ஆகியவை எலிசபெத்தியன் கவிதைகளுக்கு எதிரானவை. ஜான் டன் அவர்களது கவிதைப் புலமை மற்றும் ஆங்கில மொழியின் மீதான புலமை சீரிய புலனாய்விற்குப் பின்பே செம்மைப்படுத்தப்பட்டது. இவரது கவிதைகளின் மற்றும் ஒரு சிறப்பு உண்மையான மதப்பற்றை தன்னகத்தே கொண்டுள்ளது ஆகும். இதை அவர் பெரும்பாலும் தன் கவிதைகளின் வாயிலாக ஆவணப்படுத்தியுள்ளார். ஜான் டன் அவர்கள் மதச்சார்பற்ற கவிதைகளையும் புனைந்துள்ளார். கற்பனை கவிதைகள், மற்றும் சிற்றின்பம் சார்ந்த கவிதைகளையும் புனைந்துள்ளார். இவரது மனோதத்துவ கற்பனை கவிதைகளே இவர் பிரபலமடைய முக்கிய காரணமாக அமைந்திருந்தது.

சிறந்த கல்வியும், கவிதை எழுதும் திறனுமிருந்தும் ஜான் டன் அவர்கள் வறுமையிலேயே பல வருடங்கள் வாழ்ந்தார். இவரது வாழ்வு இவரது பணக்கார நண்பர்களைச் சார்ந்தே அமைந்திருந்தது. இவர் சம்பாதித்த செல்வத்தின் பெரும்பகுதியை பெண்களுக்காகவும், இலக்கியங்களுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் மற்றும் பயணங்களுக்காகவுமே செலவழித்தார். 1601-ஆம் ஆண்டு ஜான் டன் அவர்கள் ”ஆன் மோர்” என்பவரை இரகசியமாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 12 குழந்தைகள் பிறந்தன. இவர் 1615 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட திருத்தொண்டராகவும், ஆங்கிலேய பாதிரியராகவும் நியமிக்கப்பட்டார். இவ்வாறு இருந்தும் ஜான் டன் அவர்கள் பரிசுத்த ஆணையை பெறவில்லை. ஏனெனில் முதலாம் ஜேம்ஸ் அரசர் தனிப்பட்ட முறையில் இப்பதவிகளை வழங்கியதால் பரிசுத்த ஆணையை பெற முடியவில்லை. 1621 ஆம் ஆண்டில் இலண்டனில் உள்ள புனித பால் கத்தீட்டரலின் தலைவராக நியமிக்கப்பட்டார். மேலும் இவர் 1601 ஆம் ஆண்டு முதல் 1614 ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். 

வாழ்க்கை வரலாறு

[தொகு]

இளமைக்காலம்

[தொகு]
இலண்டன் தேசிய உருவப்பட அரங்கில் வைக்கப்பட்ட ஜான் டன் அவர்களின் இளவயது உருவப்படம்-1595

ஜான் டன் அவர்கள் இலண்டனில் பிறந்தார்.இவர் பிடிவாதமுள்ள அடிபணிய மறுக்கும் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தார்.இங்கிலாந்தில் இம்மதம் முறையற்றதாகும்.ஆறுபேர் கொண்ட உறுப்பினர்களில் மூன்றாவது மகனாவார்.இவரது தந்தையின் பெயரும் ஜான் டன் என்பதாகும் இவர் வேல்ஸ் வம்சாவளியைச் சேர்ந்தவர்.இவர் இலண்டனில் உள்ள இரும்பு வணிக நிறுவனத்தின் பாதுகாவலர் ஆவார்.இவர் ஒரு மரியாதைக்குரிய ரோமானிய கத்தோலிக்கர்.ஆனால் துன்புறுத்தலுக்கு பயந்து அரசின் கவனத்தை தவிர்த்தார்.

ஜான் டன்னுக்கு நான்கு வயதாகும் போதே அவரது தந்தை 1576 காலமானார் இவரது மனைவி எலிசபெத் ஹேவுட் தந்தையற்ற குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை தனியாக ஏற்றார் இவரும் அடிபணிய மறுக்கும் பிடிவாதமுள்ள ரோமானிய கத்தோலிக்கப் பிரிவைச் சார்ந்தவர். இவர் ஜான் ஹேவுட் என்பவரது மகளும் ஜோசப் ஹேவுட் என்பவரது சகோதரியும் ஆவார். ஜான் ஹேவுட் ஒரு நாடக ஆசிரியர். ஜோசப் ஹேவுட் ஒரு வரையறுக்கப்பட்ட பாதிரியார் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஆவார். அதுமட்டுமல்ல இவர் ரோமானிய கத்தோலிக்க தியாகி தாமஸ் மோரின் சிறந்த மருமகளும் ஆவார். ஜான்சனின் நெருங்கிய உறவினர்கள் பலர் வீரமரணம் அடைவது வழக்கமானது ஆகும். இவர்களில் பலர் கொல்லப்பட்டனர் மற்றும் நாடுகடத்தப்பட்டனர். ஜான்டன் தனிப்பட்ட முறையில் கல்வி கற்பிக்க பட்டார். ஜான்டன் சபையினரால் கற்பிக்கப்பட்டதற்கான வெளிப்படையான சான்றுகள் எதுவும் இல்லை ஜான் டன்னின் தந்தை இழந்த சில மாதங்களில் இவரது தாயார்,டாக்டர் ஜான் ஸ்மிங்கர் என்ற மனைவியை இழந்த மூன்று குழந்தைகள் உடைய பணக்காரரை மணந்தார். இவ்வாறு ஜான் டன்னுக்கு மாற்று தந்தை கிடைத்தார். ஜான்டன்னின் சகோதரிகள் மேரி மற்றும் கேத்தரின் ஆகியோர் 1581 இல் இறந்தனர். புனித பால் தேவாலயத்தின் தலைவராக ஜான் டன் இருக்கும் பொழுது அவரது தாயார் 1631 இல் இறந்தார். சில மாதங்களிலேயே ஜான்டன் காலமானார். ஜான் டன் 1583 அவரது 11வது வயதில் ஹார்ட் ஹாலில் தனது படிப்பைத் தொடங்கினார் தற்போது அது ஹார்ட்போர்ட் கல்லூரி ஆக்ஸ்போர்ட் ஆக உள்ளது. 3 வருட படிப்பிற்கு பிறகு அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். 3 ஆண்டுகள் இடைவிடாது பயின்றார். ஆனாலும் அவரால் பட்டம் பெற முடியவில்லை ஏனெனில் மேலாதிக்க உறுதிமொழியை அவர் ஏற்க மறுத்துவிட்டார்[2]

குறிப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  • Long, William J. (2013). English Literature: Its History and Significance for the Life of the English-Speaking World. Start Classics. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-62793-876-1.
  • Walton, Izaak (1999). Devotions Upon Emergent Occasions: And, Death's Duel. Vintage Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-375-70548-9.
  • Colclough, David (19 May 2011). "Donne, John (1572–1631)". Oxford Dictionary of National Biography (online). Oxford University Press. DOI:10.1093/ref:odnb/7819.  (Subscription or UK public library membership required.)

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஜான் டன்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. 1.0 1.1 Long 2013.
  2. Walton 1999.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_டன்&oldid=3813607" இலிருந்து மீள்விக்கப்பட்டது