சி. கதிரவேலுப்பிள்ளை
எஸ். கதிரவேலுப்பிள்ளை நாஉ | |
---|---|
![]() | |
கோப்பாய் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1965–1981 | |
முன்னவர் | எம். பாலசுந்தரம், இதஅக |
பின்வந்தவர் | எம். ஆலாலசுந்தரம், தவிகூ |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | அக்டோபர் 24, 1924 |
இறப்பு | மார்ச்சு 31, 1981 சென்னை, இந்தியா | (அகவை 56)
அரசியல் கட்சி | இலங்கை தமிழரசுக் கட்சி |
பிற அரசியல் சார்புகள் |
தமிழர் விடுதலைக் கூட்டணி |
தொழில் | வழக்கறிஞர் |
சமயம் | சைவ சமயம் |
இனம் | இலங்கைத் தமிழர் |
சிவசுப்பிரமணியம் கதிரவேலுப்பிள்ளை (Sivasubramaniam Kathiravelupillai, 24 அக்டோபர் 1924 - 31 மார்ச் 1981) இலங்கையின் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், வழக்கறிஞரும் ஆவார்.
வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]
1924 அக்டோபர் 24 இல் பிறந்த கதிரவேலுப்பிள்ளை இலங்கைப் பல்கலைக்கழகத்தில் மெய்யியலில் பட்டம் பெற்றவர். பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனார்[1].
அரசியலில்[தொகு]
இலங்கை தமிழரசுக் கட்சியில் இணைந்த கதிரவேலுப்பிள்ளை மார்ச் 1960, மற்றும் சூலை 1960 தேர்தல்களில் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்[2][3]. பின்னர் 1965 ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் கோப்பாய் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்[4]. தொடர்ந்து அதே தொகுதியில் 1970 தேர்தலில் வெற்றி பெற்றார்[5]. 1977 தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் கோப்பாய் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று 1981 இல் இறக்கும் வரையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
எழுதி வெளியிட்ட நூல்கள்[தொகு]
- Glimpses of Western philosophy
- Omarkhayam songs (மொழிபெயர்ப்பு)
- coexistence, and not confrontation
- மேல்நாட்டுத் தரிசன வரலாற்றின் சுருக்கம்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ எம். கே. ஈழவேந்தன் (3 ஏப்ரல் 2005). "S. Kathiravelupillai, MP : A powerful intellectual". சண்டே ஒப்சேர்வர். 2011-06-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 7 சூன் 2009 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Result of Parliamentary General Election 1960-03-19" (PDF). Department of Elections, Sri Lanka. 2015-07-12 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2011-12-27 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Result of Parliamentary General Election 1960-07-20" (PDF). Department of Elections, Sri Lanka. 2015-09-24 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2011-12-27 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Result of Parliamentary General Election 1965" (PDF). Department of Elections, Sri Lanka. 2015-07-13 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2011-12-27 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Result of Parliamentary General Election 1970" (PDF). Department of Elections, Sri Lanka. 2009-12-09 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2011-12-27 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter
|=
ignored (உதவி)
- Sachi Sri Kantha (4 February 2005). "Kathiravelupillai's Eelam Statement Revisited on the 57th Anniversary of Sri Lankan Independence". Ilankai Tamil Sangam. 7 June 2009 அன்று பார்க்கப்பட்டது.
- 1924 பிறப்புகள்
- 1981 இறப்புகள்
- இலங்கை அரசியல்வாதிகள்
- இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள்
- இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசியல்வாதிகள்
- இலங்கையின் 6வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 7வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 8வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- யாழ்ப்பாணத்து நபர்கள்
- இலங்கைத் தமிழ் வழக்கறிஞர்கள்
- ஈழத்து எழுத்தாளர்கள்
- இருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்
- இலங்கையின் வட மாகாண நபர்கள்