முதலாம் கான்ஸ்டன்டைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
முதலாம் கான்ஸ்டன்டைன்
ரோமப் பேரரசன்
Constantine Musei Capitolini.jpg
கப்பிட்டோலீன் அருங்காட்சியகத்தில் உள்ள கான்ஸ்டண்டைனின் சிலையின் தலை.
ஆட்சி 25 ஜூலை 306 – 29 அக்டோபர் 312
29 அக்டோபர் 312 – 19 செப்டெம்பர் 324
19 September 324 – 22 மே 337 (ஒருங்கிணைந்த பேரரசின் பேரரசன்)
முன்னிருந்தவர் கான்ஸ்டன்டியஸ் குளோரஸ்
பின்வந்தவர் கான்ஸ்டண்டைன் II, கான்ஸ்டன்டியஸ் II மற்றும் கான்ஸ்டன்ஸ்
மனைவிகள்
முழுப்பெயர்
பிளேவியஸ் வலேரியஸ் ஒரேலியஸ் கான்ஸ்டன்டினஸ்
அரச குலம் கான்ஸ்டன்டிய வம்சம்
தந்தை கான்ஸ்டன்டியஸ் குளோரஸ்
தாய் ஹெலெனா
சமயம் பல கடவுள், பின்னர் கிறிஸ்தவம்

முதலாம் கான்ஸ்டன்டைன் என்று பொதுவாக அழைக்கப்படும் பிளேவியஸ் வலேரியஸ் ஒரேலியஸ் கான்ஸ்டன்டினஸ் (27 பெப்ரவரி 272 – 22 மே 337) ரோமப் பேரரசர் ஆவார். இவர் கிழக்கத்திய மரபுவாதிகள், ஓரியண்டல் மரபுவாதிகள், பைசண்டைன் கத்தோலிக்கர் ஆகியோர் மத்தியில் புனிதர் கான்ஸ்டன்டைன் எனவும் அறியப்படுபவர். இவர் கி.பி 324 ஆம் ஆண்டு முதல் இறக்கும்வரை ஆட்சியில் இருந்தார். முதல் கிறிஸ்தவ ரோமப் பேரரசரான இவர், தனக்கு முன்னிருந்த அரசனான டியோகிளீசியனால் கிறிஸ்தவர்களுக்கு விதிக்கப்பட்ட துன்புறுத்தல்களை இல்லாமல் செய்ததுடன், அவரது இணைப் பேரரசரான லிசினியசுடன் சேர்ந்து 313 ஆம் ஆண்டில் மிலான் ஆணை எனப்படும் சமய நல்லிணக்க ஆணையை வெளியிட்டார்.

கிழக்கத்திய மரபுவாதத் திருச்சபையினரால் பயன்படுத்தப்படும் பைசண்டியப் பொது வழிபாட்டு நாட்காட்டிப்படியும், கிழக்கத்திய கத்தோலிக்கத் திருச்சபை வழக்கப்படியும் கான்ஸ்டண்டைனும், அவரது தாயாரான ஹெலெனாவும் புனிதர்களாகக் குறிப்பிடப்படுகின்றனர். ஆனால், இலத்தீன் திருச்சபை இவரைப் புனிதராகக் காட்டவில்லை. எனினும், கிறிஸ்தவ மதத்துக்கு அவர் செய்த பணிகளுக்காக அவர் ஒரு பெரியவராக அவர்களால் மதிக்கப்படுகிறார்.

ஆட்சி[தொகு]

பேரரசர் கான்ஸ்டன்டைன் காலத்தில் ரோமானிய பேரரசின் பல நிர்வாக , நிதி , சமூக , மற்றும் இராணுவ சீர்திருத்தங்கள் இயற்றப்பட்டது.மேலும் அரசு,குடிமையில் மற்றும் இராணுவ அதிகாரங்கள் தனித்தனியே பிரித்து மறு சீரமைக்கப்பட்டது.மேலும் அப்போதே பணவீக்கத்தை கட்டுப்படுத்த சொலிடுஸ் என்ற ஒரு புதிய தங்க நாணயத்தை அறிமுகப்படுத்தினார். இது ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பைசண்டைன் மற்றும் ஐரோப்பிய நாணயங்களின் பொதுவான நாணயமாகபயன்பட்டது.உள்நாட்டு அச்சுறுத்தல்கள் மற்றும் காட்டுமிராண்டிகளின் படையெடுப்புகளை எதிர்கொள்வதற்காக ரோமானிய இராணுவதில் தரவரிசை முறையில் வகைபடுத்தி படைகளை பலப்படுத்தினர். கான்ஸ்டன்டைன் முந்தைய நூற்றாண்டின் உள்நாட்டு கலகத்தின் கைவிடப்பட்ட ரோமன் எல்லைகளை பழங்குடியினரிடமிருந்து வெற்றிகரமாக மீட்டார்.கான்ஸ்டன்டைன் 324-ல் பேரரசர்கள் மசேந்தியஸ் மற்றும் லிசினுஸ் எதிரான உள்நாட்டு போர்களை வென்றதன் காரணமாக மேற்கு மற்றும் கிழக்கு ரோமின் ஒரே ஆட்சியாளரானார்.

கான்ஸ்டன்டைன் பண்டைக் கிரேக்கக் குடியேற்றமான பைசன்டியத்தை பேரரசின் தலைநகரமாக ஆக்கினார்,அவர் களத்தில் புதிய ரோம் என பெயரிடப்பட்ட இது பின்னர், அவர் பெயரால் கான்ஸ்டன்டினோப்பிள் என்று அழைக்கப்பட்டது. இது பைசன்டைன் பேரரசின் தலைநகரமாக ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நீடித்திருந்தது.இதன் காரணமாக, அவர் பைசண்டைன் பேரரசின் நிறுவனர் என்று அழைக்கபடுகின்றார்.அவரது அரசு அவருக்கு பின் வந்தவர்களால் தழைத்தோங்கியது.

அவரை மதச்சார்பற்ற ஆட்சியாளர்களின் ஒரு முன்மாதிரி மற்றும் சட்டப்பூர்வ பேரரசின் முன்னோடி என்று கூறப்பட்டார்.ஆனால் சில விமர்சகர்கள் அவரை ஒரு கொடுங்கோல் அரசனாகவும்அவர் தன ஆட்சியை தக்கவைத்து கொள்வதர்க்காக நடித்தார் என்றும் கூறுகின்றனர்.

சாதனைகள்[தொகு]

அவர் இறந்த பிறகு நீண்ட கிரிஸ்துவர் வரலாற்றாசிரியர்களிடம் இருந்து ("Μέγας") "கிரேட்" என்ற தனது மரியாதைக்குரிய பெயரை பெற்றார் என்றாலும் அவர் தனது இராணுவ சாதனைகள் மற்றும் வெற்றிகளுக்காகவே அப்பெயர் பெற்றார்.கான்ஸ்டன்டைன் 313-14 மீண்டும் 306-8 உள்ள பிராங்க்ஸ் மற்றும் அலாம்னி மீது படையெடுத்து பெரு வெற்றி பெற்றார்.334 ல் பிராங்க்ஸ் வெற்றி மற்றும் 332-ன் சர்மடியன்ஸ் வெற்றி ஆகியவை மூலம் வரலாற்றில் ஒரு பெரிய பெயரை பெற்றார்.

மத கொள்கை[தொகு]

கிறித்துவம் வரலாற்றில் கான்ஸ்டன்டைன் - முதல் கிரிஸ்துவ பேரரசர் ஆவர். இயேசுவின் கல்லறைஉள்ளதாக நம்பப்படும் ஜெருசலேத்தில் அவரது உத்தரவின் பேரில் புனித செபுல்ச்ரே திருச்சபை கட்டப்பட்டது. போப்கள் கான்ஸ்டன்டைன் மூலம் பெரிய அளவில் அதிகாரத்தை பெற்றனர்.

பிப்ரவரி 313 இல் , கான்ஸ்டன்டைன் அவர்கள் மிலனின் லிசினயுஸ் மன்னரை சந்தித்து மிலன் என்ற அரசாணை உருவாக்கினார்.இந்த அரசாணை கிரிஸ்துவர் மெது எந்த அடக்குமுறையும் இல்லாமல் அவர்களை சுதந்திரமாக அவர்களின் மதத்தை பின்பற்ற அனுமதிக்க வேண்டும் என்று கூறினார். அதுவரை துன்புறுத்தப்பட்டு வந்த பல கிரிஸ்துவர்கல் விடுதலை செய்யப்பட்டனர் மேலும் அபராதமாக பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் திரும்பி தரப்பட்டன.இந்த அரசாணை யாரையும் அவர்கள் விரும்பும் எந்த தெய்வத்தையும் வழிபாட அனுமதித்தது. கான்ஸ்டன்டைன் மற்றும் அவரது தாயார் செயின்ட் ஹெலினா படிப்படியாக கிறிஸ்தவ மதத்தை ஏற்றுகொண்டார். அவர் இறுதியாக தன்னை அறிவித்தார்.கிறிஸ்தவ எழுத்தாளர்களின் படி , கான்ஸ்டன்டைன் தனது 40வது வயதில் தன்னை ஒரு கிறிஸ்தவராக அறிவித்தார்.தனது ஆட்சியல் பல தேவாலயங்களை கட்டினார்.அவற்றுள் மிக பிரபல கட்டிடங்கள் புனித செபுல்ச்ரே திருச்சபை, மற்றும் பழைய புனித பீட்டர் பசிலிக்கா போன்றவையாகும்.

கடைசி காலம்[தொகு]

கான்ஸ்டன்டைன் அவரது மரணத்தருவாயில் புனித அப்போஸ்தலர் சர்ச் அருகே ரகசியமாக கல்லறை கட்டி தயாராக வைக்கப்பட்ட சொன்னார்.அவர் மரணம் அவர் எதிர்பார்த்ததை விட விரைவிலேயே வந்தது. 337 அன்று ஈஸ்டர் விருந்திற்கு பின்னர் கான்ஸ்டன்டைன் தீவிரமாக நோய்வாய்ப்பட்டார்.அவர் பின்னர் கான்ஸ்டான்டினோபிள் திரும்ப முயற்சித்தார். அவர் தனக்கு ஞானஸ்நானம் செய்யப்பட வேண்டும் என கேட்தார் அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டாலும் அதற்க்கு முன்பே அச்சிரோனில் 337 ஆம் ஆண்டு மே 22, பஸ்கா பண்டிகையை தொடர்ந்து பெண்டேகோஸ்ட் ஐம்பது நாள் திருவிழாவின் கடைசி நாளில் கான்ஸ்டன்டைன் இறந்தார்.