செப்டம்பர் 22
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | செப்டம்பர் 2015 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | |||
| MMXV | ||||||
செப்டம்பர் 22 (September 22) கிரிகோரியன் ஆண்டின் 265 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 266 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 100 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்[தொகு]
- 1499 - சுவிட்சர்லாந்து விடுதலை பெற்று தனி நாடாகியது.
- 1692 - ஐக்கிய அமெரிக்காவில் சூனியக்காரர்களின் கடைசித் தொகுதியினர் தூக்கிலிடப்பட்டனர்.
- 1711 - டஸ்கரோரா பழங்குடிகள் வட கரொலைனாவில் பாம்லிக்கோ ஆற்றுப் படுகையில் குடியேற்றவாசிகளைத் தாக்கி 130 பேரைக் கொன்றனர்.
- 1784 - அலாஸ்காவின் கோடியாக் என்ற இடத்தில் ரஷ்யா தனது குடியேற்றத்தை ஆரம்பித்தது.
- 1877 - யாழ்ப்பாணம் கத்தோலிக்க கார்டியன் பத்திரிகையின் ஆசிரியராக தமிழறிஞர் அருளப்ப முதலியார் நியமிக்கப்பட்டார்.
- 1888 - நஷ்னல் ஜியோகிரபிக் மகசின் (National Geographic Magazine) முதலாவது இதழ் வெளிவந்தது.
- 1893 - அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட தானுந்து முதன் முதலாகக் காட்சிப்படுத்தப்பட்டது.
- 1896 - பிரித்தானியாவின் அரச வம்சத்தில் அதிக காலம் ஆட்சியில் இருந்த பெருமையை விக்டோரியா மகாராணி பெற்றார்.
- 1908 - பல்கேரியா விடுதலையை அறிவித்தது.
- 1914 - ஜேர்மனியின் எம்டன் நாசகாரிக் கப்பல் இரவு 9:30 மணிக்கு சென்னைத் துறைமுகத்தையும் மற்றும் நகரப் பகுதிகளையும் குண்டுவீசித் தாக்கியது. மொத்தம் 130 குண்டுகளை அது வீசியது.
- 1934 - வேல்சில் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 266 பேர் கொல்லப்பட்டனர்.
- 1941 - யூதர்களின் புத்தாண்டில் உக்ரேனின் வின்னிட்சியா நகரில் 6,000 யூதர்கள் நாசி ஜேர்மனியரினால் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் முதல் நாட்களில் கொல்லப்பட்ட 24,000 யூதர்களில் உயிர் தப்பியோராவர்.
- 1944 - இரண்டாம் உலகப் போர்: ரஷ்ய இராணுவம் எஸ்தோனியாவின் தலைநகர் தாலின் நகரினுள் நுழைந்தனர்.
- 1955 - ஐக்கிய இராச்சியத்தில் ஐடிவி தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டது.
- 1960 - மாலிக் கூட்டமைப்பில் இருந்து செனெகல் விலகியதை அடுத்து சுடானியக் குடியரசு மாலி எனப் பெயர் மாற்றம் பெற்றது.
- 1965 - இந்திய-பாகிஸ்தான் போர், 1965: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் காஷ்மீர் தொடர்பாக இடம்பெற்ற போர் ஐநாவின் போர் நிறுத்த அழைப்பை ஏற்று முடிவுக்கு வந்தது.
- 1970 - மலேசியாவின் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் தனது பதவியை விட்டு விலகினார்.
- 1975 - ஐக்கிய அமெரிக்காவின் அதிபர் ஜெரால்ட் ஃபோர்ட் கொலை முயற்சி ஒன்றில் இருந்து தப்பினார்.
- 1980 - ஈரான் - ஈராக் போர்: ஈராக் ஈரானை முற்றுகையிட்டது.
- 1993 - ஜோர்ஜியாவின் பயணிகள் விமானம் ஒன்று சுகுமி என்ற இடத்தில் தீவிரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதில் 108 பேர் கொல்லப்பட்டனர்.
- 1995 - [[நாகர்கோயில் பாடசாலை சிறார்களின் படுகொலை,யாழ் நாகர்கோயில் பாடசாலை மீது 12:50 மணிக்கு இலங்கை விமானப்படையினர் நடத்திய குண்டுவீச்சில் 30 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.
- 1997 - அல்ஜீரியாவில் 200 கிராம மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
- 2006 - MSN தமிழ், ஹிந்தி பீட்டாவிற்கு விடைகொடுத்து இறுதிப் பதிப்பை ஆரம்பித்ததோடு, மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் பதிப்பை ஆரம்பித்தது.
பிறப்புகள்[தொகு]
- 1930 - பி.பி.ஸ்ரீநிவாஸ், பழம்பெரும் திரைப்பட பின்னணி பாடகர், (இ. 2013)
- 1791 - மைக்கேல் பரடே, ஆங்கில அறிவியலாளர் (இ. 1867)
இறப்புகள்[தொகு]
- 1539 - குரு நானக் தேவ், சீக்கிய மதத்தைத் தோற்றுவித்தவர் (பி. 1469)
- 2009 - எஸ். வரலட்சுமி, நடிகை, பாடகி (பி. 1927)
- 2009 - ஆர். பாலச்சந்திரன், பேராசிரியர், கவிஞர்
சிறப்பு நாள்[தொகு]
- பல்கேரியா - விடுதலை நாள் (1908)
- மாலி - விடுதலை நாள் (1960)
- தானுந்து அற்ற நாள்