ஜெசி ஓவென்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜெசி ஓவென்ஸ்
Jesse Owens1.jpg
1936இல் ஜெசி ஓவென்ஸ்
தனித் தகவல்கள்
முழுப் பெயர் ஜேம்ஸ் கிளீவ்லன்ட் ஓவென்ஸ்
தேசியம் அமெரிக்கர்
பிறந்த நாள் செப்டம்பர் 12, 1913(1913-09-12)
பிறந்த இடம் ஓக்வில், அலபாமா, ஐக்கிய அமெரிக்கா
இறந்த நாள் மார்ச் 31, 1980 (அகவை 66)
இறந்த இடம் துஸ்கான், அரிசோனா, ஐக்கிய அமெரிக்கா
விளையாட்டு
நாடு அமெரிக்கா
விளையாட்டு தட கள விளையாட்டுக்கள்
நிகழ்வு(கள்) விரைவோட்டம், நீளம் தாண்டுதல்
 
பதக்கங்கள்
ஆண்கள் பிரிவு
 அமெரிக்கா
ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
தங்கம் 1936 பெர்லின் 100 மீ
தங்கம் 1936 பெர்லின் 200 மீ
தங்கம் 1936 பெர்லின் 4x100 மீ ரிலே
தங்கம் 1936 பெர்லின் நீளம் பாய்தல்

ஜேம்ஸ் கிளீவ்லன்ட் "ஜெசி" ஓவென்ஸ் (James Cleveland "Jesse" Owens, செப்டம்பர் 12, 1913-மார்ச் 31, 1980) ஓர் அமெரிக்க தட கள ஆட்டக்காரர் ஆவார்.

அலபாமாவில் வறுமை நிலையில் வளந்த ஜெசி ஓவென்ஸ் சிறுவராக இருக்கும்பொழுது ஓட ஆரம்பித்தார். 1933இல் தேசிய உயர்பள்ளிப் போட்டிகளில் உலகச் சாதனையுக்கு சமமாக நேரத்தில் 100 யார்ட் விரையோட்டத்தை ஓடியுள்ளார். ஒகையோ மாநிலப் பல்கலைக்கழகத்தை சேர்ந்து 1935இலும் 1936இலும் மொத்தத்தில் எட்டு தனி என்.சி.ஏ.ஏ. (கல்லூரிப் போட்டி) பட்டங்களை வென்றுள்ளார்.

பெர்லின், ஜெர்மனியில் நடந்த 1936 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் 100 மீ விரையோட்டம், 200 மீ விரையோட்டம், நீளம் பாய்தல், மற்றும் தொடர் ஓட்டம் ஆகிய தடகள போட்டிகளில் தங்கப் பதக்கத்தை வென்று அனைத்துலகில் புகழுக்கு வந்தார். இந்த காலத்தில் ஜெர்மனியின் தலைவர் இட்லரால் பிரபலப்படுத்திய வெள்ள இன மேன்மை நம்பிக்கையை ஜெசி ஓவென்ஸ் வெற்றியால் ஓர் அளவு மறுத்துவிட்டது. ஆனாலும், அமெரிக்காவில் கருப்பின மக்களும் வெள்ளை இன மக்களும் ஒரே விடுதியில் தங்கமுடியாத, ஒரே உணவகத்தில் சாப்பிடமுடியாத காலத்தில் ஜெசி ஓவென்ஸ் ஜெர்மனியில் வெள்ளை இன மக்கள் உடன் தங்கி சாப்பிட்டார்.

இன்று பெர்லின் நகரில் ஜெசி ஓவென்ஸ் பெயர்வைக்கப்பட்டு ஒரு தெரு உள்ளது. 1976இல் குடியரசுத் தலைவரின் சுதந்திர விருது பெற்றார். 1970இல் அலபாமா விளையாட்டுப் புகழவையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெசி_ஓவென்ஸ்&oldid=1496872" இருந்து மீள்விக்கப்பட்டது