செப்டம்பர் 29
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | செப்டம்பர் 2015 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | |||
| MMXV | ||||||
செப்டம்பர் 29 (September 29) கிரிகோரியன் ஆண்டின் 272 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 273 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 93 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்[தொகு]
- கிமு 480 - தெமிஸ்டோகில்ஸ் தலைமையிலான கிரேக்கக் கடற்படை பேர்சியப் படையை சலாமிஸ் என்ற இடத்தில் தோற்கடித்தது.
- 1227 - புனித ரோமப் பேரரசன் இரண்டாம் பிரெடெரிக் சிலுவைப் போரில் பங்குபற்றாமல் போனதை அடுத்து திருத்தந்தை ஒன்பதாம் கிரகரி அவனை மதவிலக்கம் செய்தார்.
- 1567 - பிரான்சில் இரண்டாம் சமயப் போர் ஆரம்பமானது.
- 1833 - மூன்று வயதுள்ள இரண்டாம் இசபெல்லா ஸ்பெயின் அரசியாக முடிசூடினாள்.
- 1848 - ஹங்கேரியப் படையினர் குரொவேசியர்களை பாகொஸ்ட் என்ற இடத்தில் இடம்பெற்ற ஹங்கேரிப் புரட்சிப் போரில் தோற்கடித்தனர்.
- 1850 - இங்கிலாந்திலும் வேல்சிலும் ரோமன் கத்தோலிக்க உயர்சபையை திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் மீண்டும் அமைத்தார்.
- 1885 - உலகின் முதலாவது மின்சார திராம் வண்டி இங்கிலாந்தில் பிளாக்பூல் நகரில் சேவையை ஆரம்பித்தது.
- 1911 - இத்தாலி ஒட்டோமான் பேராட்சிக்கெதிராகப் போர் தொடுத்தது.
- 1916 - ஜோன் ரொக்பெல்லர் உலகின் முதலாவது கோடீசுவரர் ஆனார்.
- 1918 - முதலாம் உலகப் போர்: பல்கேரியா கூட்டுப் படைகளுடன் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது.
- 1938 - செக்கோசிலவாக்கியாவின் சுடெட்டென்லாந்துப் பகுதியை ஆளும் உரிமையை ஜேர்மனிக்கு வழங்குவதற்கான உடன்படிக்கையில் பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, மற்றும் இத்தாலி ஆகியன கைச்சாத்திட்டன.
- 1941 - உக்ரேனின் கீவ் நகரில் குறைந்தது 33,771 யூதர்கள் நாசி ஜேர்மனியரினால் கொல்லப்பட்டனர்.
- 1962 - கானடாவின் முதலாவது செய்மதி அலூட் 1 ஏவப்பட்டது.
- 1971 - அரபுக் கூட்டமைப்பில் ஓமான் இணைந்து கொண்டது.
- 1972 - ஜப்பான் மக்கள் சீனக் குடியரசுடனான தூதரக உறவை மீள அமைத்து, சீனக் குடியரசுடனான உறவை முறித்துக் கொண்டது.
- 1991 - எயிட்டியில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.
- 1993 - மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 10,000 பேர் கொல்லப்பட்டனர்.
- 1998 - இலங்கை, பலாலி விமானநிலையத்தில் இருந்து இரத்மலானை நோக்கி 56 பேருடன் புறப்பட்ட லயன் எயார் பயணிகள் விமானம் புறப்பட்டு 10 நிமிடங்களில் காணாமல் போனது.
- 2003 - சூறாவளி ஜுவான் கனடாவின் ஹாலிபாக்ஸ் துறைமுகத்தைத் தாக்கிப் பேரழிவை விளைவித்தது.
பிறப்புக்கள்[தொகு]
- 1901 - என்ரிக்கோ பெர்மி, இத்தாலிய இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1954)
- 1920 - அரங்க. சீனிவாசன், தமிழகக் கவிஞர், எழுத்தாளர் (இ. 1996)
- 1928 - பிரிஜேஷ் மிஸ்ரா, இந்தியாவின் முதல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
- 1936 - சில்வியோ பெர்லுஸ்கோனி, இத்தாலியப் பிரதமர்
- 1951 - மிசெல் பாச்செலெட், சிலியின் குடியரசுத் தலைவர்
- 1975 - ஸ்டுவட் கிளார்க், அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்
- 1988 - கெவின் டுரான்ட், அமெரிக்க கூடைப்பந்து ஆட்டக்காரர்
இறப்புகள்[தொகு]
- 1969 - சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா, இலங்கையில் இலவசக்கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் (பி. 1884)