ரெனே டேக்கார்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மேற்குலக மெய்யியல்
17 ஆவது நூற்றாண்டு மெய்யியலாளர்
Frans Hals - Portret van René Descartes.jpg
இரெனே தேக்கார்ட்டு

பெயர்

இரெனே தேக்கார்ட்டு

பிறப்பு

மார்ச் 31, 1596
La Haye en Touraine [now Descartes], Indre-et-Loire, பிரான்சு

இறப்பு

பெப்ரவரி 11, 1650(1650-02-11) (அகவை 53)
இசுட்டாக்கோம், சுவீடன்

கருத்துப் பரம்பரை

கார்ட்டீசியனிசம், அறிவுக்கரணியனிசம்(Rationalism), Foundationalism

முதன்மைக் கருத்துக்கள்

மீவியற்பியல், அறிமுறையியல்(Epistemology), அறிவியல், கணிதம்

குறிப்பிடத்தக்க கருத்துக்கள்

கோச்சிட்டோ எர்கோ சும்(Cogito ergo sum), method of doubt, காட்டீசியன் ஆள்கூற்று முறைமை, கார்ட்டீசிய இருமை, கடவுள் உள்ளார் என்பதற்கான உள்ளதியல் கரணியக்கூற்று (ontological argument); மேற்குலக மெய்யியலின் தந்தை எனக் கருதப்படுகின்றார்.

ஏற்ற தாக்கங்கள்

அல்-கசாலி, பிளேட்டோ, அரிசிட்டாட்டில், அன்செல்ம், தாமசு அக்குவைனசு, வில்லியம் ஆக்கம், பிரான்சிசிக்கோ சௌரெசு, மாரின் மெர்சென், செக்சிட்டசு எம்பிரிக்கசு, மிசெல் டி மோன்ட்டேய்ன், இடஞ்சு இசுக்கோட்டசு

ஊட்டிய
தாக்கங்கள்

பரூச்சு இசுப்பினோசா, தாமசு ஆபுசு, அன்ட்வான் அர்னால்டு, நிக்கோலசு மலெபிராஞ்செ, பிளேய்சு பாசுக்கல், சான் இலாக்கு, கோட்பிரீடு இலைப்னிட்சு, என்றி மோர், இம்மானுவேல் காண்.ட்டு, எட்மண்டு குசெர்ல், லிலியோன் பிரன்சுவிக்கு]], இசுலாவோ சிசெக்கு, நோம் சோம்சுக்கி, சேசன் இசுட்டான்லி

ரெனே டேக்கார்ட் (அ) இரெனே தேக்கார்ட்டு (René Descartes பிரெஞ்சு மொழி: IPA[ʁə'ne de'kaʁt]) (மார்ச் 31, 1596பெப்ரவரி 11, 1650), ஒரு பிரான்சு நாட்டு மெய்யியல் அறிஞர். இவர் வழக்கறிஞராகவும், அரசியல்வாதியாகவும்கூடஇருந்தார். இவரைத் தற்கால மேற்குலக மெய்யியலின் தந்தை எனப் பலரும் கருதுவர். இவர் கணிதத்துறையின் மேதைகளில் ஒருவர். இவர் இலத்தீன் மொழியில் ரெனேட்டசு கார்ட்டேசியசு (Renatus Cartesius) என அறியப்படுகின்றார்.

இவர் 1596 இல் பிரான்சு நாட்டில் பிறந்தவர். இவர் சிறு வயதிலேயே தன் தாயை இழந்தவர். இவரின் தந்தை ஒரு அரசியல்வாதி. இவர் கல்லூரியில் கணிதம் பயின்றார். அதன்பாற் கொண்ட அன்பினால் இயற்பியலையும் பயின்றார். இவர் ஓரு சிறந்த எழுத்தாளர். தனது இளமையை பெரும்பாலும் டச்சுக் குடியரசில் கழித்த இவர் நவீன தத்துவவியலின் தந்தை எனப்புகழப்படுகிறார். இவருடைய எழுத்துகளில் தற்காலத்தில் மிக அதிகமாக வாசிக்கப்படும் மேற்கத்திய தத்துவங்களின் சாயல்கள் காணப்படும்.[1] இவருடைய 'மெடிடேசன்ஸ் ஆப் பர்ஸ்ட் பிலாசபி'(Meditations on First Philosophy) என்ற நூல் பல பல்கலைக் கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

இவரின் கண்டுபிடிப்பான கார்டீசிய ஆய முறைமை (Cartesian coordinate system) கணிதத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. மேலும் பகுப்பாய்வு வடிவியலில் (analytical geometry) பெரிதும் பணியாற்றினார். இவரின் கண்டுபிடிப்புகள் பொறியியல், கணிதம், இயற்பியல் என பல துறைகளில் பயன்படுத்தப்படுகிறது.

என்ன தான் ரேனே கணிதத்தில் நல்ல ஆர்வம் காட்டினாலும், அவர் மனதில் ஆன்மா தொடர்ப்பான பல சந்தேகங்கள் இருந்தன. மேலும் அவர் மதங்களை நம்பினாலும் அதனுள் காணப்படும் உண்மைகளை மட்டுமே ஆராயும் ஆர்வம் கொண்டவராக இருந்தார். அக்காலத்தில் இருந்த மதச் சடங்குகளை தவிர்த்து அதன் வழி அறிவியல் ஆராய்ச்சியை நடத்தினார். இவர் மனித வாழ்வின் முடிவு என்ன? அதே போல் ஆரம்பம் என்ன? நம்மை கடவுள் தான் உருவாக்கினார் என்றால் அவருக்கு அந்த அளவிற்கு யார் சுதந்திரம் தந்தது என்ற கேள்விகளை தன்னுள் எழுப்பிக்கொண்டு அதற்கான விடைகளை தேட ஆரம்பித்தார். நாம் வாழ்வதற்கு ஏதேனும் காரணம் உண்டா? நீங்களும் நானும் பிறந்ததிற்கு ஏதேனும் காரணம் உண்டா? என அனைத்தையும் ஆராய்ந்தார். அப்போது தான் அவருக்கு பொறி தட்டியது இவற்றை பற்றி நாம் சிந்திக்கிறோம் ஆனால் நம் சிந்தனை பற்றி நாம் உணருவதில்லை என்ற எண்ணம் அவருக்கு உதித்தது. பின் தனது சிந்திக்கும் திறனை ஆராய்ந்தார். சிந்தனை என்ற ஒரு செயல் நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் மறைமுகமாக இருப்பதை உணர்ந்தார். மேலும் அவையே மனிதனுக்கு இருக்கும் சக்திகளில் மிக வலிமை வாய்ந்தது எனவும் கருதினார். இறுதில் இவர் தனது ஆராச்சியின் முடிவை, "நான் சிந்திக்கிறேன், ஆகையால் நான் இருக்கிறேன்" (I think, therefore I am) என தனது குறிப்பேட்டில் எந்தவித சந்தேகமின்றி எழுதினார்.

மேலும் மதங்களில் காணப்படும் தூய ஆவி, மற்றும் சாத்தான்களை பற்றி ஆராய்ந்து அவைகள் மனிதர்களால் மனிதர்களுக்கு திணிக்கப்பட்ட மூடநம்பிக்கைகள் மட்டுமே என்று கூறினார். இதனால் இவர் பல வழக்குகளை சந்தித்தார். ஆவிகளை ஆராயும் பணியில் இவர் தன்னை ஒரு ஆவி போல கற்பனை செய்து கொண்டார். பின்னர் அதன் உருவம், செயல் அனைத்தையும் கற்பனை செய்ய அவருக்கு மனம் தேவைப்பட்டது. அப்போது தான் அவருக்கு மனம் தொடர்பான சந்தேகம் எழுந்தது. மனம் என்றால் என்ன? அதுவும் கூட ஒரு வகையான சிந்தனையின் வெளிப்பாடுதான் என சிந்தித்தார். ஆகவே மனம் என்பது மூளை கொடுத்த சிந்தனையின் அதீத வெளிபாடு மட்டுமே என்று கூறினார். இந்த ஆராய்ச்சிக்காக இவர் தனது வீட்டை 17ம் நூற்றாண்டில் மாற்றியமைத்தார். இவரின் அறை ஒரு அடுப்பை போன்றது. அந்த அறையின் உட்புறத்தில் வெப்பம் வெளியிடுமாறு பலவகை முன் ஏற்பாடுகளுடன் கட்டப்பட்டது. ஆகையால் அக்காலத்தில் இவரை பலர் மனநோயாளி என்று நினைத்தனர்.

இவரின் வித்தியாசமான தேடுதலினால் இவரின் நண்பர் வட்டம் மிக குறைவாக காணப்பட்டது. இவர் ஒரு நாளின் பெரும் பகுதியை தனியே தன் அறையிலேயே கழிப்பார். தற்போது அவர் இருந்த அறை பிரான்சு அரசால் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு பராமரிக்கப்படுகிறது. இவரின் இந்த தத்துவம் மத சடங்குகளில் பல முரண்பாடுகளை ஏற்படுத்தியதால், பல வழக்குகளை சந்தித்தார். பின் அனைவரின் முன்பு பொது மன்னிப்பு கேட்டதால் இவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது.

ரேனே இயற்கையின் உண்மையான தத்துவங்களை ஆராய்கையில் பல மத ரீதியான கருத்துகள் உடைக்கப்பட்டன. அவரின் தத்துவார்த்தங்களின் வழி இவ்வாறே காணப்பட்டது[2].

இவர் நீண்ட நாட்கள் நிமோனியா என்ற நோயால் தாக்கப்பட்டிருந்தார். அதன் விளைவாக இறந்தார்.

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. Watson, Richard A. (31 March 2012). "René Descartes". Encyclopædia Britannica (Encyclopædia Britannica Online. Encyclopædia Britannica Inc). http://www.britannica.com/EBchecked/topic/158787/Rene-Descartes. பார்த்த நாள்: 31 March 2012. 
  2. Thus, all Philosophy is like a tree, of which Metaphysics is the root, Physics the trunk, and all the other sciences the branches that grow out of this trunk, which are reduced to three principals, namely, Medicine, Mechanics, and Ethics. By the science of Morals, I understand the highest and most perfect which, presupposing an entire knowledge of the other sciences, is the last degree of wisdom

வெளியிணைப்புகள்[தொகு]

ஊடகம்- காணொளி

பொது

Stanford Encyclopedia of Philosophy

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெனே_டேக்கார்ட்&oldid=2231326" இருந்து மீள்விக்கப்பட்டது