திசம்பர் 6
Appearance
<< | திசம்பர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 | 31 | ||||
MMXXIV |
திசம்பர் 6 (December 6) கிரிகோரியன் ஆண்டின் 340 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 341 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 25 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 963 – எட்டாம் லியோ உரோம் நகரின் எதிர்-திருத்தந்தையாகப் பதவியேற்றார்.
- 1060 – முதலாம் பேலா அங்கேரியின் மன்னனாக முடிசூடினாr.
- 1240 – உக்ரைனின் கீவ் நகரம் படு கான் தலைமையிலான மங்கோலியரிடம் வீழ்ந்தது.
- 1704 – முகாலய-சீக்கியப் போரில், சீக்கிய கால்சாக்கள் முகாலய இராணுவத்தினரைத் தோற்கடித்தனர்.
- 1768 – பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தின் முதற் பதிப்பு வெளியிடப்பட்டது.
- 1790 – ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் நியூயோர்க் நகரில் இருந்து பிலடெல்பியாவுக்கு இடம்பெயர்ந்தது.
- 1857 – இந்தியப் பிரித்தானிய அதிகாரிகளுக்கு எதிரான குவாலியர் கிளர்ச்சியை சர் கொலின் கேம்பல் தலைமையிலான பிரித்தானிய இராணுவம் முறியடித்தது.[1]
- 1877 – தி வாசிங்டன் போஸ்ட் செய்திப்பத்திரிகையின் முதலாவது இதழ் வெளிவந்தது.
- 1884 – வாசிங்டன் நினவுச்சின்ன அமைப்பு வேலைகள் முடிவடைந்தது.
- 1897 – வாடகை வாகனங்கள் உலகில் முதற்தடவையாக லண்டனில் சேவைக்கு விடப்பட்டன.
- 1907 – மேற்கு வர்ஜீனியாவில் மொனொங்கா என்ற இடத்தில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 362 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
- 1916 – முதலாம் உலகப் போர்: மைய சக்தி நாடுகள் புக்கரெஸ்ட் நகரைக் கைப்பற்றின.
- 1917 – முதலாம் உலகப் போர்: அமெரிக்காவின் யாக்கோப் யோன்சு என்ற போர்க் கப்பல் செருமனி நீர்மூழ்கிக் குண்டு வைத்துத் தகர்த்தூ மூழ்கடித்தது.
- 1917 – பின்லாந்து சோவியத் உருசியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
- 1917 – கனடாவின் நோவா ஸ்கோசியாவில் ஆலிபாக்சு துறைமுகத்தில் ஆயுதக் களஞ்சியக் கப்பல் ஒன்று வெடித்ததில் 1,900 பேர் உயிரிழந்தனர். நகரத்தின் பெரும் பகுதி அழிந்தது.
- 1921 – இங்கிலாந்துக்கும் அயர்லாந்துக்கும் இடையில் இலண்டனில் நட்புறவு ஒப்பந்தம் கையெழுத்தாகியது.
- 1922 – ஐரிய சுதந்திர நாடு உருவானது.
- 1928 – கொலம்பியாவில் ஒரு மாத கால வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மீது அரசுப் படைகள் தாக்குதல் நடத்தியதில் பலர் கொல்லப்பட்டனர்.
- 1941 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியமும் கனடாவும் பின்லாந்து மீது போரை அறிவித்தன..
- 1957 – வங்கார்ட் விண்கலம் ஏவப்படுகையில் வெடித்ததை அடுத்து பூமியின் சுற்றுவட்டத்துக்கு அமெரிக்கா தனது முதலாவது செயற்கைக்கோள் அனுப்பும் திட்டம் நிறைவேறவில்லை.
- 1971 – இந்தியா வங்காள தேசத்தை அங்கீகரித்ததைத் தொடர்ந்து பாக்கித்தான் இந்தியாவுடனான அனைத்து தூதரக உறவுகளையும் துண்டித்தது. 1971 இந்திய-பாக்கிஸ்தான் போர் வெடித்தது.
- 1977 – தென்னாபிரிக்கா "பொப்புதட்சுவானா"வுக்கு விடுதலை அளித்தாலும் எந்த நாடும் அதனை அங்கீகரிக்கவில்லை.
- 1989 – மொண்ட்ரியாலில் ஏக்கோல் கல்வி நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 14 இளம் பெண்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
- 1991 – குரோவாசியாவில் துப்ரோவ்னிக் நகர் மீது யுகொசுலாவிய மக்கள் இராணுவம் குண்டுத் தாக்குதல்களை நடத்தியது.
- 1992 – அயோத்தியாவில் இராமர் பிறப்பிடத்தில் கட்டப்பட்ட பாபர் மசூதி இடிக்கப்பட்டதை அடுத்து இடம்பெற்ற கலவரங்களில் 1,500 பேர் வரை உயிரிழந்தனர்.
- 1997 – சைபீரியாவில் உருசிய சரக்கு விமானம் ஒன்று குடிமனைத் தொடர் ஒன்றில் மோதியதில் 67 பேர் உயிரிழந்தனர்.
- 2005 – ஈரானின் இராணுவ சரக்கு விமானம் ஒன்று தெகுரானில் பத்து-மாடி குடிமனைக் கட்டடம் ஒன்றில் மோதியதில் விமானத்தில் இருந்த அனைத்து 84 பேரும் தரையில் 44 பேரும் உயிரிழந்தனர்.
- 2005 – சீனாவின் டொங்சூ என்ற இடத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பல கிராம மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
- 2006 – செவ்வாய்க் கோளில் இருந்து மார்ஸ் குளோபல் சேர்வயர் அனுப்பிய படங்களில் இருந்து அங்கு நீர் திரவ நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தியதாக நாசா அறிவித்தது.
- 2017 – எருசலேம் நகரை இசுரேலின் தலைநகராக அமெரிக்க அரசுத்தலைவர் டோனால்ட் டிரம்ப்பின் நிருவாகம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.
பிறப்புகள்
- 1698 – அந்தனி மூயார்ட், ஒல்லாந்த இலங்கையில் யாழ்ப்பாணத்தின் கட்டளை அதிகாரி (இ. 1767)
- 1732 – வாரன் ஹேஸ்டிங்ஸ், பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் வங்காளத்தின் முதல் தலைமை ஆளுநர் (இ. 1818)
- 1792 – இரண்டாம் வில்லியம், நெதர்லாந்து மன்னர் (இ. 1849)
- 1823 – மாக்ஸ் முல்லர், செருமானிய-ஆங்கிலேய மொழியியலாளர் (இ. 1900)
- 1863 – சார்லஸ் மார்ட்டின் ஹால், அமெரிக்க வேதியியலாளர், பொறியியலாளர் (இ. 1914)
- 1892 – ருக்மிணி லட்சுமிபதி, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1951)
- 1918 – ஆர்வி, தமிழக எழுத்தாளர் (இ. 2008)
- 1928 – சந்திரலேகா, இந்தியப் பரத நாட்டியக் கலைஞர் (இ. 2006)
- 1935 – சாவித்திரி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 1981)
- 1937 – டி. டி. குசலகுமாரி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
- 1988 – ரவீந்திர ஜடேஜா, இந்தியத் துடுப்பாட்ட வீரர்
இறப்புகள்
- 343 – நிக்கலசு, கிரேக்க ஆயர், புனிதர் (பி. 270)
- 1788 – நிக்கோல்-ரெயின் லெப்பாட், பிரான்சிய வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1723)
- 1868 – ஆகஸ்ட் சிலெய்ச்சர், செருமானிய மொழியியலாளர் (பி. 1821)
- 1889 – ஜெபர்சன் டேவிஸ், அமெரிக்க அரசியல்வாதி, அமெரிக்கக் கூட்டமைப்பின் தலைவர் (பி. 1808)
- 1892 – வெர்னர் வொன் சீமன்சு, செருமானியப் பொறியியலாலர் (பி. 1816)
- 1956 – அம்பேத்கர், இந்தியப் பொருளியலாலர், அரசியல்வாதி (பி. 1891)
- 1961 – பிரன்சு ஃபனோன், பிரான்சிய மருத்துவர் (பி. 1925)
- 1982 – க. கைலாசபதி, இலங்கைத் தமிழறிஞர், திறனாய்வாளர், கல்வியாளர் (பி. 1933)
- 1990 – துங்கு அப்துல் ரகுமான், 1வது மலேசியப் பிரதமர் (பி. 1903)
- 2001 – எஸ். டி. சோமசுந்தரம், தமிழக அரசியல்வாதி (பி. 1930)
- 2005 – தேவன் நாயர், சிங்கப்பூரின் 3வது குடியரசுத் தலைவர் (பி. 1923)
- 2009 – பினா ராய்,பிரபல இந்தி நடிகை
சிறப்பு நாள்
- விடுதலை நாள் (பின்லாந்து, உருசியாவிடம் இருந்து 1917)
மேற்கோள்கள்
- ↑ "Remarkable events". Ferguson's Ceylon Directory, Colombo. 1871.