மலேசியப் பிரதமர்
மலேசியப் பிரதமர்
| |
---|---|
வாழுமிடம் | ![]() |
நியமிப்பவர் | துவாங்கு அப்துல் ஹாலிம் |
முதலாவதாக பதவியேற்றவர் | துங்கு அப்துல் ரகுமான் |
உருவாக்கம் | 31 ஆகஸ்ட் 1957 |
இணையதளம் | PM's official website |
மலேசியப் பிரதமர் (மலாய்: Perdana Menteri Malaysia; சீனம்: 马来西亚首相; ஆங்கில மொழி: Prime Minister of Malaysia) என்பவர் மலேசிய அரசாங்கத்தின் நிர்வாகத் தலைவர் ஆவார். மாட்சிமை தங்கிய மலேசியப் பேரரசர், பிரதமரை நியமனம் செய்கிறார். மலேசிய நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவையும் நம்பிக்கையையும் பெற்ற ஒருவரே பிரதமராகும் தகுதியைப் பெறுகின்றார்.
பிரதமராகப் பொறுப்பேற்கும் ஒருவர் மலேசிய அமைச்சரவையின் தலைவராகவும் செயல்படுகின்றார். அமைச்சரவை உறுப்பினர்களைப் பிரதமரின் ஆலோசனையின் பேரில் பேரரசர் நியமனம் செய்கிறார். இந்த அமைச்சரவை மலேசிய நாடாளுமன்றத்தின் முழு பொறுப்புகளையும் ஏற்றுக் கொள்கிறது.
பிரதமரின் கீழ், பிரதமர் துறை எனும் ஓர் அமைச்சகம் செயல்படுகின்றது. மகாதீர் பின் முகமது என்பவர் மலேசியாவின் இப்போதைய பிரதமராக பதவி வகிக்கிறார்.
தகுதிகள்[தொகு]
மலேசிய அரசியலமைப்பின் படி ஒரு பிரதமராகக்கூடியவர் மக்களவையில் ஓர் உறுப்பினராக இருக்க வேண்டும். அத்துடன் மக்களவையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கையையும் செல்வாக்கையும் பெற்று இருக்க வேண்டும். அவர் ஒரு மலேசியராக இருக்க வேண்டும். அயல்நாட்டில் இருந்து குடியேறி குடியுரிமை பெற்று இருக்கக்கூடாது.
பிரதமரும் அமைச்சரவை உறுப்பினர்களும் மாட்சிமை தங்கிய பேரரசரிடம் சத்தியப் பிரமாணம் எடுத்து இருக்க வேண்டும். மலேசியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து அம்னோவைச் சேர்ந்த ஒருவரே பிரதமராக இருந்து வந்துள்ளார். மலேசிய வரலாற்றில், வீ. தி. சம்பந்தன் அவர்கள் மட்டுமே ஒரே ஒரு நாள் மலேசியாவின் பிரதமராகப் பதவி வகித்துள்ளார்.[1]
மலேசியப் பிரதமர்களின் பட்டியல்[தொகு]
கட்சி: அம்னோ கூட்டணி: மலாயா கூட்டணி பாரிசான் நேசனல்
தவணை | எண். | பெயர் (தொகுதி) |
படிமம் | பதிவியில் | விலகியது | கட்சி | கூட்டணி |
---|---|---|---|---|---|---|---|
01 | 1 | துங்கு அப்துல் ரகுமான் கோலா மூடா |
![]() |
31 ஆகஸ்ட் 1957 | 19 ஆகஸ்ட் 1959 | அம்னோ | மலேசிய கூட்டணி கட்சி |
1959|02 | 19 ஆகஸ்ட் 1959 | 10 மே 1969 | |||||
1969|03 | 10 மே 1969 | 22 செப்டம்பர் 1970 | |||||
2 | துன் அப்துல் ரசாக் உசேன் பெக்கான் |
![]() |
22 செப்டம்பர் 1970 | 24 ஆகஸ்ட் 1974 | அம்னோ | மலேசிய கூட்டணி கட்சி | |
1974|04 | 24 ஆகஸ்ட் 1974 | 14 ஜனவரி 1976 | பாரிசான் நேசனல் | ||||
3 | துன் உசேன் ஓன் ஜொகூர் தீமோர் |
14 ஜனவரி 1976 | 8 ஜூலை 1978 | அம்னோ | பாரிசான் நேசனல் | ||
1978|05 | 8 ஜூலை 1978 | 16 ஜூலை 1981 | |||||
4 | துன் மகாதீர் பின் முகமது குபாங் பாசு |
![]() |
16 ஜூலை 1981 | 10 மே 1982 | அம்னோ | பாரிசான் நேசனல் | |
1982|06 | 10 மே 1982 | 3 ஆகஸ்ட் 1986 | |||||
1986|07 | 3 ஆகஸ்ட் 1986 | அக்டோபர் 1990 | |||||
1990|08 | அக்டோபர் 1990 | 24 ஏப்ரல் 1995 | |||||
1995|09 | 24 ஏப்ரல் 1995 | 29 நவம்பர் 1999 | |||||
1999|10 | 29 நவம்பர் 1999 | 31 அக்டோபர் 2003 | |||||
5 | துன் அப்துல்லா அகமது படாவி கப்பளா பத்தாஸ் |
![]() |
31 அக்டோபர் 2003 | 21 மார்ச் 2004 | அம்னோ | பாரிசான் நேசனல் | |
2004|11 | 21 மார்ச் 2004 | 8 மார்ச் 2008 | |||||
8 மார்ச் 2008 | 3 ஏப்ரல் 2009 | ||||||
2009|18 | 6 | நஜீப் துன் ரசாக் பெக்கான் |
3 ஏப்ரல் 2009 | 2018 | அம்னோ | பாரிசான் நேசனல் | |
2018| | 7 | துன் மகாதீர் பின் முகமது குபாங் பாசு |
![]() |
10 மே 2018 | இதுவரையில் | மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி | பாக்காத்தான் ஹரப்பான் |