வாசிங்டன் நினைவுச் சின்னம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாசிங்டன் நினைவுச் சின்னம்
Washington Monument
Washington Monument Dusk Jan 2006.jpg
அமைவிடம்வாஷிங்டன், டிசி,  ஐக்கிய அமெரிக்கா
பரப்பளவு106.01 ஏக்கர்கள் (42.90 ha)
பார்வையாளர்களின் எண்ணிக்கை671,031 (in 2008)
நிர்வகிக்கும் அமைப்புNational Park Service
வாசிங்டன் நினைவுச் சின்னம் is located in Central Washington, D.C.
வாசிங்டன் நினைவுச் சின்னம்
Central Washington, D.C. இல் வாசிங்டன் நினைவுச் சின்னம்
Washington Monument அமைவிடம்

வாசிங்டன் நினைவுச் சின்னம் (Washington Monument) என்பது ஐக்கிய அமெரிக்காவின் வாசிங்டன், டி. சி.யில் அமெரிக்காவின் முதலாவது தலைவர் ஜோர்ஜ் வாஷிங்டன் நினைவாக அமைக்கப்பட்ட மிக உயரமான நாற்பக்கங்களைக் கொண்ட மண் நிற கோபுரமாகும். இது உலகின் மிக உயரமான கற் கட்டிடம் ஆகும்[1]. இது பளிங்கு, கருங்கல், மற்றும் மணற்கல் ஆகியவற்றைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. வாஷிங்டன் டிசியில் அமைந்திருக்கும் மிக உயரமான கட்டிடமான இது ரொபேர்ட் மில்ஸ் என்பவரினால் 1840களில் வடிவமைக்கப்பட்டது. இதன் கட்டுமானப் பணிகள் 1848 இல் ஆரம்பிக்கப்பட்டு மில்ஸ் இறந்தூ 30 ஆண்டுகளின் பின்னர் 1884 இல் நிறைவடைந்தது. நிதிப் பற்றாக்குறை, மற்றும் அமெரிக்க உள்நாட்டுப் போர் காரணமாக இதன் அமைப்பு வேலைகள் நிறைவேறுவதில் தாமதங்கள் ஏற்பட்டன.

இந்நினைவுச் சின்னத்தின் அடிக்கல் 1848, ஜூலை 4 இல் நாட்டப்பட்டது. இதன் உச்சி டிசம்பர் 6, 1884 இல் வைக்கப்பட்டு, 1885, பெப்ரவரி 21 இல் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்தன. ஆனாலும் இச்சின்னம் அதிகாரபூர்வமாக 1888, அக்டோபர் 9 இல் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப்பட்டது. இக்கட்டிட வேலைகள் முடிவடைந்த நேரத்தில் இது உலகின் மிக உயரமான கட்டிடமாக இருந்தது. இதற்கு முன்னர் கொலோன் தேவாலயம் மிக உயரமான கட்டிடமாக இருந்தது. 1889 இல் பாரிசில் கட்டப்பட்ட ஈபெல் கோபுரம் வாஷிங்டன் நினைவுச் சின்னத்தின் உயரத்தை மீறி உலகின் மிக உயர்ந்த கட்டிடமாகியது.

இதற்காகிய செலவு $1,187,710 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Washington Monument: Tribute in Stone". 2016-12-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-10-08 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]