சியார்ச் வாசிங்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜோர்ஜ் வாஷிங்டன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சியார்ச் வாசிங்டன்
Portrait of George Washington-transparent.png
முதல் குடியரசுத் தலைவர்
பதவியில்
ஏப்ரல் 30 1789 – மார்ச் 4 1797
முன்னவர் (யாரும் இல்லை)
பின்வந்தவர் சான் ஆடம்சு
தனிநபர் தகவல்
பிறப்பு பெப்ரவரி 22 1732
வெசிட்மோர்லாண்டு கவுண்ட்டி, வர்ச்சீனியா
இறப்பு டிசம்பர் 14 1799, அகவை 67
வெர்னான் மலை, வர்ச்சீனியா
தேசியம் அமெரிக்கர்
வாழ்க்கை துணைவர்(கள்) மார்த்தா வாசிங்டன்
சமயம் கிறித்தவம்/ஆங்கிலிக்கன்/எபிஸ்சோப்பல்/டெய்சிட்
கையொப்பம்

சியார்ச் வாசிங்டன் (ஜார்ஜ் வாஷிங்டன்; ஜோர்ஜ் வொஷிங்ரன்; பெப்ரவரி 22, 1732 -டிசம்பர் 14, 1799) அவர்கள் அமெரிக்கக் கண்டத்தின் படையைத் தலைமை தாங்கி, பிரித்தானியரை அமெரிக்கப் புரட்சிப் போர் என்னும் அமெரிக்க விடுதலைப் போரில் (1775-1783) தோற்கடித்தார். இவர் ஐக்கிய அமெரிக்காவின் முதல் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் எட்டு ஆண்டுகள்- 1789 முதல் 1797 வரையிலும், ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவராகத் தலைமை தாங்கினார். விடுதலை பெற்ற நாடாக ஐக்கிய அமெரிக்கா திகழ்ந்த துவக்க ஆண்டுகளில் இவர் ஆற்றிய நாடு நிறுவும் பணிகளை நோக்கி இவரை ஐக்கிய அமெரிக்காவின் தந்தை எனப் போற்றுவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சியார்ச்_வாசிங்டன்&oldid=2220275" இருந்து மீள்விக்கப்பட்டது