சிங்கப்பூர் குடியரசுத் தலைவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிங்கப்பூர்
குடியரசுத் தலைவர்
(அதிபர்)
Coat of arms of Singapore.svg
சிங்கப்பூர் மரபுச் சின்னம்
Flag of the President of Singapore.svg
சிங்கப்பூர் கொடி
President Halimah Yacob in 2019.jpg
தற்போது
அலிமா யாகோப்பு

14 செப்டம்பர் 2017 முதல்
வாழுமிடம்இஸ்தானா சிங்கப்பூர்
நியமிப்பவர்சிங்கப்பூர் நாடாளுமன்றம்
(1965–1991)
(1991–இன்று வரையில்)
பதவிக் காலம்ஆறு ஆண்டுகள், புதுப்பிக்கத்தக்கது
முதலாவதாக பதவியேற்றவர்யூசுப் இசாக்
உருவாக்கம்9 ஆகத்து 1965; 57 ஆண்டுகள் முன்னர் (1965-08-09)
துணை சிங்கப்பூர்
குடியரசுத் தலைவர்
(அதிபர்)
அதிபர் ஆலோசனைக் குழுவின் முன்னாள் தலைவர்
ஊதியம்S$1,540,000
ஆண்டு ஊதியம்
இணையதளம்istana.gov.sg

சிங்கப்பூர் குடியரசுத் தலைவர் (ஆங்கிலம்: President of the Republic of Singapore; மலாய்: Presiden Republik Singapura) என்பவர் சிங்கப்பூர் குடியரசின் நாட்டுத் தலைவர் ஆவார். அதிபர் என்று அழைக்கப் படுகிறார்.[1]

சிங்கப்பூரில் நடைமுறையில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் நாடாளுமன்ற முறைமையின் கீழ் அரசின் தலைவர் (Head of Government) சிங்கப்பூரின் பிரதமர் ஆவார்.

குடியரசுத் தலைவர் எனும் அதிகாரப்பூர்வ அழைப்புப் பெயர், பெரும்பாலும் ஒரு சடங்குப் பெயராகவே கருதப் படுகிறது. 1993-ஆம் ஆண்டிற்கு முன்பு, சிங்கப்பூர் அதிபர் நாடாளுமன்றத்தால் நியமிக்கப்பட்டார்.

பொது[தொகு]

1991-ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் அரசியல் சாசனங்கள் திருத்தப் ப்ட்டன. அதன் பிறகு, குடியரசுத் தலைவர், சிங்கப்பூர் மக்களால் தேர்ந்தெடுக்கப் படுகிறார்.

சிங்கப்பூரில் முதலாவதாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுத் தலைவர் ஒங் தெங் சியோங். 1991-ஆம் ஆண்டில் நடந்த சாசான மாற்றங்களால், குடியரசுத் தலைவருக்குச் சில தனிப்பட்ட உரிமைகள் அளிக்கப்பட்டன. குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ வாழுமிடம் இஸ்தானா சிங்கப்பூர் ஆகும்.

தற்போதைய குடியரசுத் தலைவர்[தொகு]

அலிமா யாகோப் என்பவர் தற்போதைய குடியரசுத் தலைவர் (அதிபர்). (ஆங்கிலம்: Halimah binti Yacob); மலாய்: Halimah Yacob) சிங்கப்பூர் வரலாற்றில் முதல் பெண் அதிபர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.[2]

2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் நாள் குடியரசுத் தலைவராகப் பதவியேற்றுக் கொண்டார். இதன் மூலம், சிங்கப்பூர் நாட்டின் வரலாற்றில் முதல் பெண் குடியரசுத் தலைவராகவும் ஆகியுள்ளார்.[3]

வரலாறு[தொகு]

1965-ஆம் ஆண்டில் மலேசியா கூட்டமைப்பில் இருந்து சிங்கப்பூர் பிரிந்து சென்று, சிங்கப்பூர் குடியரசாக மாறியது. அதன் பிறகு அதே 1965-ஆம் ஆண்டில் அதிபர் எனும் சிங்கப்பூர் குடியரசுத் தலைவர் பதவி உருவாக்கப்பட்டது.

சிங்கப்பூர் தேசிய அரசியலமைப்பு; சிங்கப்பூர் குடியரசுத் தலைவர் பதவிக்கு கடுமையான தகுதி நிபந்தனைகளை விதிக்கிறது. 1993-க்கு முன்னர், சிங்கப்பூர் நாடாளுமன்றத்தால் அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]

அரசியலமைப்புத் திருத்தங்கள்[தொகு]

1991-இல் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புத் திருத்தங்களின் விளைவாக, குடியரசுத் தலைவர் பதவியானது, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பதவியாக மாறியது. அரசாங்கச் செலவுகள் மற்றும் பொது அலுவலகங்களுக்கான முக்கிய நியமனங்கள் ஆகியவற்றில் குறிப்பிட்ட பாதுகாப்பு அதிகாரங்களைக் கொண்ட பதவியாகவும் மாறியது.[5]

1959-ஆம் ஆண்டில் சிங்கப்பூர் சுய ஆளுமையைப் பெற்றது. அப்போது சிங்கப்பூர் குடியரசுத் தலைவர் எனும் பதவி உருவாக்கப்பட்ட வில்லை. அந்தப் பதவி யாங் டி பெர்துவான் நெகாரா (Yang di-Pertuan Negara) என்று அழைக்கப்பட்டது. சிங்கப்பூரின் கடைசி யாங் டி பெர்துவான் நெகாரா, யூசுப் இசாக். இவர்தான் சிங்கப்பூரின் முதல் அதிபரும் ஆகும்.

குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Constitution, Art. 17(1).
  2. "Halimah Yacob named Singapore's first female president". Al Jazeera. 13 September 2017. 2 May 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2017-09-14 அன்று பார்க்கப்பட்டது.
  3. "PM Lee accepts Halimah Yacob's resignation from the PAP". Channel NewsAsia. 7 August 2017. Archived from the original on 7 ஆகஸ்ட் 2017. https://web.archive.org/web/20170807211217/http://www.channelnewsasia.com/news/singapore/pm-lee-accepts-halimah-yacob-resignation-from-the-pap-9099312. 
  4. Zakir Hussain (15 January 2016), "President's address to Parliament: Singaporeans must move together to create next chapter, says Dr Tony Tan", The Straits Times, 16 April 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது; Chong Zi Liang (15 January 2016), "President's address to Parliament: Government to study if further changes to political system needed", The Straits Times, 16 April 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது; Walter Sim (15 January 2016), "President's address to Parliament: Government will keep Singapore relevant and competitive amid slowing economy", The Straits Times, 16 April 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது.
  5. "Janil Puthucheary reappointed PAP party whip, Sim Ann remains deputy party whip". CNA (ஆங்கிலம்). 2020-08-19 அன்று பார்க்கப்பட்டது.

சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Presidents of Singapore
என்பதின் ஊடகங்கள் உள்ளன.