மார்ச்சு 4
Appearance
(மார்ச் 4 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | மார்ச் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
31 | ||||||
MMXXIV |
மார்ச்சு 4 (March 4) கிரிகோரியன் ஆண்டின் 63 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 64 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 302 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 51 – பின்னாளைய உரோமைப் பேரரசர் நீரோவிற்கு இளைஞர்களின் தலைவன் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது.
- 1152 – பிரெடெரிக் பர்பரோசா செருமனியின் மன்னராக முடிசூடினார்.
- 1275 – சீன வானியலாளர்கள் முழுமையான சூரிய கிரகணத்தை அவதானித்தனர்.
- 1351 – சியாமின் மன்னராக முதலாம் இராமாதிபோதி முடி சூடினார்.
- 1461 – ரோசாப்பூப் போர்கள்: இங்கிலாந்தின் ஆறாம் என்றி மன்னர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
- 1493 – கடலோடி கொலம்பசு கரிபியன் தீவுகளுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு லிஸ்பன் திரும்பினார்.
- 1519 – எசுப்பானியத் தேடல் வெற்றி வீரர் எர்னான் கோர்ட்டெசு அசுட்டெக்குகளையும் அவர்களின் செல்வங்களையும் தேடி மெக்சிகோவில் தரையிறங்கினார்.
- 1591 – முதலாவது ஆங்கிலேயர் ரால்ஃப் பிட்ச் என்பவர் இலங்கையில் தரையிறங்கினார்.[1]
- 1665 – இரண்டாவது ஆங்கிலேய-இடச்சுப் போர்: இங்கிலாந்து மன்னன் இரண்டாம் சார்ல்சு நெதர்லாந்து மீது போரை அறிவித்தான்.
- 1776 – அமெரிக்கப் புரட்சிப் போர்: அமெரிக்க விடுதலைப் படையின் பீரங்கித் தாக்குதலை அடுத்து, பிரித்தானியப் படைகள் பாஸ்டன் முற்றுகையைக் கைவிட்டன.
- 1789 – நியூயார்க்கில் அமெரிக்க சட்டமன்றத்தின் முதலாவது அமர்வு இடம்பெற்றது. அமெரிக்க அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
- 1790 – பிரான்சு 83 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டன.
- 1791 – பிரித்தானிய மக்களவையில் கனடாவை கீழ் கனடா, மேல் கனடா என இரண்டாகப் பிரிக்கும் சட்டமூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
- 1791 – வெர்மான்ட் அமெரிக்காவின் 14-வது மாநிலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
- 1804 – நியூ சவுத் வேல்ஸ் குடியேற்ற நாட்டில் (இன்றைய ஆத்திரேலியாவில்) அயர்லாந்து குற்றவாளிகள் பிரித்தானிய குடியேற்ற அதிகாரிகள் மீது கிளர்ச்சியை ஆரம்பித்தனர்.
- 1810 – பிரெஞ்சு இராணுவம் போர்த்துக்கல்லில் இருந்து வெளியேற்றப்பட்டது..
- 1813 – நெப்போலியனுடன் போரிட்ட உருசியப் படைகள் செருமனியின் பெர்லின் நகரை அடைந்தனர். பிரெஞ்சுப் படைகள் எதிர்ப்பேதும் இன்றி நகரை விட்டு வெளியேறினர்.
- 1837 – சிகாகோ நகரம் அமைக்கப்பட்டது.
- 1877 – பியோத்தர் சாய்க்கொவ்ஸ்கியின் சுவான் லேக் பலே நடனம் மாஸ்கோவில் முதற் தடவையாக மேடையேறியது.
- 1882 – பிரித்தானியாவின் முதலாவது மின்சார டிராம் வண்டி கிழக்கு லண்டனில் ஓடவிடப்பட்டது.
- 1890 – பிரித்தானியாவின் மிக நீளமான "போர்த் பாலம்" இசுக்கொட்லாந்தில் திறக்கப்பட்டது.
- 1899 – குயின்சுலாந்து குக்டவுன் என்ற இடத்தில் சூறாவளி தாக்கியதில் 300 பேருக்கு மேல் உயிரிழந்தனர்.
- 1908 – அமெரிக்காவின் கிளீவ்லாந்து நகரில் பாடசாலை ஒன்று தீப்பற்றியதில் 174 பேர் உயிரிழந்தனர்.
- 1931 – இந்தியாவில் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் மக்களின் அடிமட்டத்தினர் அனைவரும் உப்பை கட்டுப்பாடு ஏதுமின்றி பயன்படுத்தவும் பிரித்தானியாவின் ஆளுநர் எட்வர்ட் வூட் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோருக்கிடையில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
- 1941 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியம் லொஃபோர்ட்டன் தீவுகள் மீது கிளேமோர் நடவடிக்கையை ஆரம்பித்தது.
- 1945 – இரண்டாம் உலகப் போர்] பின்லாந்து நாட்சி ஜெர்மனி மீது போரைத் தொடுத்தது.
- 1959 – ஐக்கிய அமெரிக்காவின் பயனியர் 4 உலகின் இரண்டாவது (அமெரிக்காவின் முதலாவது) செயற்கைக் கோள் ஆனது.
- 1960 – பிரெஞ்சு சரக்குக் கப்பல் கியூபாவின் அவானா துறைமுகத்தில் வெடித்ததில் 100 பேர் உயிரிழந்தனர்.
- 1962 – கமரூனில் இருந்து புறப்பட்ட கலிடோனியன் ஏர்வேய்சு விமானம் வீழ்ந்து நொருங்கியதில் 111 பேர் உயிரிழந்தனர்.
- 1966 – கனடாவின் பசிபிக் ஏர்லைன்சின் டிசி-8-43 விமானம் தோக்கியோ பன்னாட்டு விமான நிலையத்தில் தரையிறங்குகையில் வெடித்ததில் 64 பேர் உயிரிழந்தனர்.
- 1970 – பிரான்சின் நீர்மூழ்கிக் கப்பல் யூரிடைசு கடலடியில் வெடித்ததில், அதிலிருந்த அனைத்து 547 பேரும் உயிரிழந்தனர்.
- 1976 – வடக்கு அயர்லாந்தின் அரசியலமைப்பு சபை கலைக்கப்பட்டது. வட அயர்லாந்து இலண்டன் பிரித்தானிய நாடாளுமன்றத்தின் நேரடியாக நிர்வாகத்தின்கீழ் வந்தது.
- 1977 – உருமேனியா தலைநகர் புக்கரெஸ்ட்டில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1,570 பேர் உயிரிழந்தனர்.
- 1980 – தேசியவாதி ராபர்ட் முகாபே சிம்பாப்வேயின் முதலாவது கருப்பின பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1985 – அமெரிக்காவில் தரப்படும் குருதிக் கொடைகள் அனைத்துக்கும் எயிட்சுக்கான குருதிப் பரிசோதனை நடத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அதிகாரம் அளித்தது.
- 1986 – சோவியத் வேகா 1 விண்கலம் ஏலியின் வாள்வெள்ளியின் கருவின் படிமங்களை முதன் முதலாக புவிக்கு அனுப்பியது.
- 1994 – கொலம்பியா 16 விண்ணோடம் ஏவப்பட்டது.
- 1996 – அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தில் தொடருந்து ஒன்று தடம்புரண்டதை அடுத்து, 2,300 பயணிகளை வெளியேற்ற 16 நாட்கள் பிடித்தன.
- 2001 – லண்டனில் பிபிசி தொலைக்காட்சி நிறுவனத்தின் முன்னால் இடம்பெற்ற பெரும் குண்டுவெடிப்பினால் 11 பேர் காயமடைந்தனர்.
- 2006 – பயனியர் 10 விண்கலத்துடன் மேற்கொள்ளப்பட்ட கடைசித் தொடர்பு தோல்வியில் முடிந்தது.
- 2009 – அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் சூடான் அரசுத்தலைவர் உமர் அல்-பஷீர் மீது போர்க்குற்றங்களும், மானுடத்துக்கு எதிரான குற்றங்களும் சுமத்தி பிடி ஆணை பிறப்பித்தது.
- 2012 – கொங்கோ தலைநகர் பிராசவில்லியில் வெடிபொருள் களஞ்சியம் ஒன்று வெடித்ததில் 250 பேர் உயிரிழந்தனர்.
பிறப்புகள்
- 1678 – ஆன்டோனியோ விவால்டி, இத்தாலிய இசையமைப்பாளர், வயலின் கலைஞர் (இ. 1741)
- 1769 – எகிப்தின் முகமது அலி, உதுமானிய இராணுவத் தலைவர் (இ. 1849)
- 1847 – கார்ல் பேயர், ஆத்திரிய வேதியியலாளர் (இ. 1904)
- 1854 – நேப்பியர் ஷா, ஆங்கிலேய வானிலையியலாளர் (இ. 1945)
- 1856 – தாருலதா தத், இந்தியக் கவிஞர் (இ. 1877)
- 1877 – கர்ரெட் மார்கன், ஆப்பிரிக்க-அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் (இ. 1963)
- 1902 – நீ. வ. அந்தோனி, ஈழத்து நாட்டுக்கூத்துக் கலைஞர் (இ. 1971)
- 1904 – ஜார்ஜ் காமாவ், உக்ரைனிய-அமெரிக்க இயற்பியலாளர், அண்டவியலாளர் (இ. 1968)
- 1924 – கு. கலியபெருமாள், தமிழக செயற்பாட்டாளர் (இ. 2007)
- 1935 – டியு குணசேகர, இலங்கை இடதுசாரி அரசியல்வாதி
- 1938 – அன்ரன் பாலசிங்கம், விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் (இ. 2006)
- 1944 – மூ. அருணாச்சலம், தமிழக அரசியல்வாதி (இ. 2004)
- 1947 – தெ. நித்தியகீர்த்தி, ஈழத்து-ஆத்திரேலிய எழுத்தாளர் (இ. 2009)
- 1965 – பவுல் டபிள்யூ. எஸ். ஆண்டர்சன், ஆங்கிலேயத் திரைப்பட இயக்குநர்
- 1980 – கமலினி முகர்ஜி, இந்தியத் திரைப்பட நடிகை
- 1980 – ரோகன் போபண்ணா, இந்திய டென்னிசு வீரர்
- 1986 – மைக் கிரிகேர், பிரேசில்-அமெரிக்கத் தொலிழதிபர், இன்ஸ்டகிராமை அமைத்தவர்.
இறப்புகள்
- 1193 – சலாகுத்தீன், ஈராக்கிய-எகிப்திய சுல்தான் (பி. 1137)
- 1941 – லூட்விக் குயிட், நோபல் பரிசு பெற்ற செருமானிய செயற்பாட்டாளர் (பி. 1858)
- 1967 – சண்முக ராஜேஸ்வர சேதுபதி, தமிழக அரசியல்வாதி, தொழிலதிபர் (பி. 1909)
- 1978 – நீலகண்ட பிரம்மச்சாரி, இந்திய விடுதலைப் போராட்டச் செயற்பாட்டாளர் (பி. 1889)
- 2011 – அர்ஜுன் சிங், இந்திய அரசியல்வாதி (பி. 1930)
- 2011 – கிருஷ்ண பிரசாத் பட்டாராய், நேபாளத்தின் 29-வது பிரதமர் (பி. 1924)
- 2016 – பி. ஏ. சங்மா, இந்திய அரசியல்வாதி (பி. 1947)
- 2016 – பி. கே. நாயர், இந்தியத் திரைப்பட வரலாற்றாளர் (பி. 1933)
- 2022 – ரோட் மார்ஷ், ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் (பி. 1947)
- 2022 – சேன் வார்ன், ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் (பி. 1969)
சிறப்பு நாள்
மேற்கோள்கள்
- ↑ "Remarkable enents". Ferguson's Ceylon Directory, Colombo. 1871.