ஹேலியின் வால்வெள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஹேலியின் வால்வெள்ளி

ஹேலியின் வால்வெள்ளி அல்லது ஹேலியின் வால்மீன் (Halley's Comet), என்பது 75 முதல் 76 ஆண்டுகளுக்கொரு முறை பூமியை அண்மிக்கும் ஒரு வால்வெள்ளி ஆகும். இது அதிகாரபூர்வமாக 1P/ஹேலி என அழைக்கப்படுகிறது. பூமியில் தோன்றும் வால்வெள்ளிகளில் இது மிகவும் பிரபல்யமானது. ஒவ்வோரு நூற்றாண்டிலும் வானில் பல வால்வெள்ளிகள் தோன்றி மறைந்தாலும் ஹேலி குறுகிய நேரத்துக்கு தெளிவாகக் சாதாரண கண்களுக்குத் தெரியக்கூடியதாகும். ஹேலியின் வால்வெள்ளி சூரியக் குடும்பத்துக்குள் கடைசித் தடவையாக பெப்ரவரி 9, 1986 இல் வந்து போனது. அடுத்த தடவை இது 2061 இன் நடுப்பகுதியில் தோன்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்தின் வானியல் ஆய்வாளர் எட்மண்ட் ஹேலி என்பவர் இதனை முதன் முதலில் 1682 இல் கண்டறிந்தார். 1337 முதல் 1698 வரை தோன்றிய வால்மீன்களின் அட்டவணையை ஹேலி தயாரித்தார். 1531 இல் பெட்ரஸ் அப்பியானஸ் என்பவரினால் அவதானிக்கப்பட்ட வால்வெள்ளி, பின்னர் 1607 இல் கெப்லரினால் கண்டறியப்பட்ட வால்வெள்ளி, மற்றும் 1631 இல் தான் கண்டுபிடித்த வால்வெள்ளி மூன்றும் ஒன்றே என ஹேலி கருதினார். 1705 இல் அவர் வெளியிட்ட கட்டுரை ஒன்றில் 1682 இல் தோன்றிய வால்மீனே 76 ஆண்டுகளுக்குப் பின் 1758 இல் மீண்டும் தோன்றும் எனக் கூறினார். அதன் படி இவ்வால்வெள்ளி டிசம்பர் 25, 1758 இல் ஜொகான் பாலிட்ச் என்னும் ஜெர்மனியரால் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆண்டோர் எழுபதைந்தினில் ஒரு முறை மண்ணே அணுகும் வால்மீனைத் தினையின் மீது பனை நின்றாங்கு மணிச் சிறு மீன் மிசை வளர்வால் ஒளிவரக் கீழ்த்திசை வெள்ளியைக் கேண்மை கொண்டிலகு தூமகேதுச் சுடரே வாரய்! என்று 1910-இல் ஹேலியின் வால்வெள்ளியைப் பாடியிருக்கிறார் மகாகவி பாரதியார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹேலியின்_வால்வெள்ளி&oldid=1827616" இருந்து மீள்விக்கப்பட்டது