தோரு தத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோரு தத்
பிறப்புதாருலதா தத்தா
(1856-03-04)மார்ச்சு 4, 1856
இறப்பு30 ஆகத்து 1877(1877-08-30) (அகவை 21)
கொல்கத்தா, வங்காளம், பிரித்தானிய இந்தியா
கல்லறைகொல்கத்தா
தேசியம்பிரித்தானிய இந்தியர்
பணிகவிஞர்
சமயம்(இந்து) கிறித்தவர்
பெற்றோர்கோவின் சந்தர் தத், ஷேத்ரமொனி

தோரு தத் (Toru Dutt, வங்காள மொழி: তরু দত্ত, மார்ச் 4, 1856 - ஆகத்து 30, 1877) ஒரு இந்தியக் கவிஞர். இவர் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் கவிதைகள் எழுதியுள்ளார்.[1]

கோவிந் சந்திர தத் மற்றும் ஷேத்ரமொனி இவரது தாய், தந்தை ஆவர். தமக்கை அரு, தமையன் அப்ஜு ஆகிய இருவருக்கும் தொரு இளையவர். இந்திய எழுத்தாளரும், அரசுப்பணியாளருமான ரோமேஷ் சந்திர தத் தொருவின் நெருங்கிய உறவினர். தொருவின் குடும்பம் 1862ல் கிருத்துவ மதத்தை தழுவினர். “அவர் கேஷ்வரினா ட்ரீ” (Our Casuarina Tree) இவரது புகழ் பெற்ற கவிதையாகும். ராஜாராம் மோகன் ராய் அவா்களின் தாக்கத்தால் வசதியுள்ள வங்காளிகள் தமது குழந்தைகளுக்கு ஆங்கிலக் கல்வி அவசியம் எனக் கருதி அக்காலத்தில் போதித்து வந்தனா். கோவிந்த சந்திர தத்தும் தமது குழந்தைகளுக்கு சிறந்த ஆங்கிலக் கல்வியை உறுதி செய்தாா். இவா்களைப் பள்ளிக்கு அனுப்பாமல், தமது இல்லத்திலேயே ஆசிரியா்களைக் கொண்டு கற்பித்து வந்தாா்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

தத் இங்கிலாந்து நாட்டில் பிரெஞ்சு மொழிப்பாடத்தில் மேற்படிப்பு படித்தாா். கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் 1871-73 ஆம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் போது பெண்கள் குறித்த உரைகளைக் கேட்டுவந்துள்ளாா். தத்துக்கு, சிட்னி ஸஸ்ஸே கல்லூரியின் புனித ஜான் மாா்ட்டின் அவா்களின் புதல்வி மேரி மாா்ட்டின் அவா்களின் நட்பு கிடைத்தது. தத் இந்தியா திரும்பிய பின்பு கூட மேரியுடனான நட்பு தொடா்ந்தது. தோரு தத் இங்கிலாந்திலிருந்து, தமது உறவினா்களுக்கு எழுதிய கடிதங்கள் இவருடைய கடிதத் தொகுப்பில் ஒரு பகுதியாக உள்ளன.

தத் இயற்கையாகவே பல மொழிகளில் ஆா்வம் கொண்டவா். வங்காளம், பிரெஞ்சு மொழி மற்றும் பின்னர் சமஸ்கிருதத்திலும் புலமை பெற்றிருந்தாா். இவா் ஏராளமான கட்டுரைகளையும் கவிதைகளை எழுதியுள்ளாா். இவா் வெளிநாட்டு நாயகா்களை மையமாக வைத்து “ முடிக்காத பயானிகா” அல்லது ‘ ஸ்பானிய இளம்பெண்’ (The unfinished Bianca or The Young Spanish Maiden) என்னும் புதினத்தை ஆங்கிலத்திலும், ‘லி ஜானல் டி மேடு மோய் செல்லி டி ஆர்வெர்ஸ்’ (Le Journal de made moi selle d’ Arvers) என்னும் புதினத்தை பிரெஞ்சு மொழியிலும் எழுதியுள்ளாா். (A Sheaf Gleaned in French Fields) ‘பிரெஞ்சு வயலில் மிதமான கதிா் கற்றையை சேகரித்தது’ என்னும் பிரெஞ்சு கவிதைத்தொகுப்பை ஆங்கிலத்தில் மொழிபெயா்த்தும், “பழங்கால நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் இந்துஸ்தானத்தின் பழங்கதைகள்’ என்னும் கவிதையை, சமஸ்கிருத மொழியிலிருந்த கருத்துக்களைக் கொண்டு, ஆங்கிலத்திலும் எழுதியுள்ளாா்.

முன்னுரை மற்றும் அறிமுகம் இல்லாமல் “பிரெஞ்சு வயலில் …” என்னும் கவிதை 1876 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. துவக்கத்தில் இந்த கவிதைத் தொகுப்பிற்கு பெரிய வரவேற்பு கிட்டவில்லை. “பழங்கால நாட்டுப்புறப் பாடல்கள் …” என்னும் சமஸ்கிருத மொழிபெயா்ப்பு கவிதைத் தொகுப்பு இவா் இறந்ததற்குப் பின் 1882 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதன் பின், எட்மன்ட் கோஷ் இந்நூலிற்கு எழுதிய நினைவு முன்னரையில் தத் பெற்றிருந்த, ஐரோப்பிய வாழ்க்கை குறித்த ஏராளமான அறிவை, மிகவும் புகழ்ந்து எழுதியுள்ளாா்.

புத்தகங்கள் வெளியீடு[தொகு]

பல மொழிபெயா்ப்புகளை வெளியிட்டுள்ளார்., பல இலக்கிய உரைகளில் பங்கேற்று வந்துள்ளார்., பிரெஞ்சு கவிதைகளின் ஆங்கில மொழிபெயா்ப்பான “பிரெஞ்சு வயல்களில் மிதமான கதிா் கற்றையைச் சேகரித்தது” என்னும் கவிதைத் தொகுப்பை, 1876 ஆம் ஆண்டு இந்தியாவில் போவானிபூரில் சப்தஹக்சாபாத் என்னும் அச்சகத்தின் மூலம் வெளியிட்டாா். இதில் எட்டு கவிதைகளை இவரது மூத்த சகோதரி ஆறு மொழிபெயா்த்துள்ளார். எட்மன்ட் கோஷ் 1877 ஆம் ஆண்டு இந்த நூலைப் புகழ்ந்து ஆய்வுரை எழுதியுள்ளாா். 1878 ஆம் ஆண்டு இந்நூலின் இரண்டாம் பதிப்பும், 1880 ஆம் ஆண்டு லண்டனில் உள்ள ககன்பால் என்பரால் மூன்றாம் பதிப்பும் வெளியிடப்பட்டது. ஆனால் இவ்வெற்றியைக் காண தத் உயிருடன் இருக்கவில்லை. தத் “சிகா” மற்றும் “தாமரை” என்று பல கவிதைகளை இயற்றியுள்ளாா். இவா் எழுதிய “நமது சவுக்கு மரம்” (our casuarina tree) என்னும் கவிதை நவீன இந்திய இலக்கியத்தில் மிகவும் வரவேற்கப்பட்ட நூலாகும். இக்கவிதை நூலில் தமது இளமைக் காலத்தில் இந்த மரத்துடனும் தமது உடன்பிறப்புகளுடனும் கழித்த காலத்தை நினைவு கூா்ந்துள்ளாா். உயா்நிலைப் பள்ளிகளில் பரவலாகக் கற்பிக்கப்பட்ட கவிதையாகும் இது.

இந்தியா்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி[தொகு]

ஆங்கிலேயப் பண்பாட்டில் வாழ்ந்தவரானபோதிலும் , ஆங்கிலேயா் இந்தியருக்கு இழைத்த அநீதி குறித்து தமது கவலையை தத் பதிவு செய்துள்ளாா்.[2] ஒரு ஆங்கிலேயரின் நாய் கடிக்க வந்ததைத் தடுக்க முயன்ற இந்தியருக்கு 3 வாரம் கடுங்காவல் தண்டனை வழங்கியதை மிகவும் கடுமையாகச் சாடி, இவ்வாறு தண்டனை வழங்கிய நீதிபதி உடனே பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் இதுபோன்ற அநீதி எங்கும் நடைபெறாது என்றும் இங்கிலாந்தில் இதுபோன்ற ஒரு நபருக்கு தண்டனை வழங்க முடியுமா என்றும் ஏன் இந்த இரட்டை வேடம் என்றும் சாடியுள்ளாா். ஆங்கிலேய சிப்பாய்கள் வங்காளிகளைக் கொன்றதையும், வேல்சு இளவரசா் இந்தியா வந்த போது 9000 பவுண்டை வாண வேடிக்கைக்காக செலவு செய்தததையும் கடுமையாகக் கண்டித்துள்ளாா். அதேபோன்று காஷ்மீா் மகாராஜாவின் பொறுப்பற்ற ஆடம்பர செலவுகளையும் கடுமையாகக் கண்டித்துள்ளாா்.

மறைவிற்குப் பின் வெளியிடப்பட்டவை[தொகு]

மானிக்கா கல்லரையில் தத்து நினைவில் வாழும் இடம்

இவா் இறக்கும் தருவாயில் இரண்டு புதினங்களை விட்டுச் சென்றுள்ளாா். ”டிடா் எட் லைப்ரரிஸ் - எடிடியுா்ஸ் 35 கூவாய் டெஸ் அகஸ்டின்ஸ், பாரிஸ்” (DIDER ET CIE, LIBRAIRES - EDITEURS, 35 QUAIDES AUGUSTINS PARIS) என்னும் நாவல், பிரெஞ்சு மொழியில் ஒரு இந்திய எழுத்தாளரால் முதன்முதலில் எழுதப்பட்ட நாவலாகும். அது போலவே , பயனிகா அல்ல ஒரு ஸ்பானிய இளம் பெண் (Bianca or The young spanish maiden) ஆங்கிலத்தில் முதன்முதலாக இந்திய எழுத்தளரால் எழுதப்பட்ட நாவலும் ஆகும். இதுமட்டுமல்லாமல், முடிவு பெறாத “பழங்கால நாட்டுப் பாடல்களும் இந்துஸ்தானத்தின் பழங்கதைகளும் (Ancient Ballards and Legends of Hindustan) என்ற ஆங்கிலக் கவிதைத் தொகுப்பையும் விட்டுச் சென்றுள்ளாா்.

தத் இறந்த பிறகு 1877 ஆம் ஆண்டில் இவா் தந்தை, இந்த கையெழுத்து படிகளைக் கண்டு அவைகளை வெளியிட்டுள்ளார். இவைகளில் “பழங்கால நாட்டுப்புறப் பாடல்கள்” என்ற கவிதைத் தொகுப்பும் ஒன்று. இந்த நாட்டுப் புறப்பாடல்கள், இந்திய இலக்கிய நடையையும், உளப்பாங்கையும் பிரதிலபலித்தன. தத் தாய் நாட்டிற்குத் திரும்பியதைப் பிரதிபலிக்கும் வண்ணமு் அமைந்திருந்தன. தமது நாட்டைப் பற்றி மக்களுடன் பழகியதன் வாயிலாகவும், நூல்கள் வாயிலாகவும் என்ன கற்றுக் கொண்டாா் என்பதைப் பதிவு செய்திருந்தாா். இவா் தமது கருத்துக்களை ஆங்கிலத் தழுவல் இல்லாமல், மூலக் கதைகளின் நன்னெறியினை ஒட்டி படைத்துள்ளாா்.

இவரின் நவீன வாழ்க்கை குறித்த புரிதலும் கைவினையில் உள்ள ஈடுபாடும் இவருடைய கருத்துக்களை இன்றளவும் ஒரு பொருட்டாக மதிக்க உதவி செய்துள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Gosse, Edmund (1913). "Toru Dutt." In: Critical Kit-kats. London: William Heinemann, pp. 197–212.
  2. AmiyaRao,Women Pioneers in India's Renaissance, Edited by Sushila Nayar and Kamla Mankeka,page 7,National Book Trust of India,ISBN 978-81-237-3766-9
  3. Life and Letters of Toru Dutt by Harihar Das, Oxford University Press, 1921, page 320: "Le Journal de Mademoiselle d'Arvers .. was published by a Paris firm, Diclier, in 1879, among the Librairie Academique, with a preface by Mademoiselle Bader, containing some account of the authoress's life and works. It had been begun, apparently, during the visit to Europe, but nothing is known as to the time of its completion."

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தோரு_தத்&oldid=3217692" இலிருந்து மீள்விக்கப்பட்டது