1963
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1963 (MCMLXIII) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும்.[1][2][3]
நிகழ்வுகள்
[தொகு]- ஜனவரி 1 - அறிவியலாளர்கள் கில்பேர்ட் போயில் (Gilbert Bogle), மார்கரட் சாண்டிலர் (Margaret Chandler) இருவரும் சிட்னியின் புறநகர்ப் பகுதி ஒன்றில் இறந்துகிடக்கக் காணப்பட்டனர். (நஞ்சூட்டப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது).
- பெப்ரவரி 21 - லிபியாவில் இடம்பெற்ற நிலநடுக்கம் ஒன்றில் 500 பேர் வரை கொல்லப்பட்டனர்.
- மார்ச் 16 - பாலியில் ஆகுங் மலை தீக்கக்கியதில் 11,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.
- ஏப்ரல் 26 - லிபியா நடந்த தேர்தலில் பெண்கள் முதன் முதலாக வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
- ஜூன் 10 - அமெரிக்க அரசுத்தலைவர் ஜான் எஃப். கென்னடி இருபாலருக்கும் ஒரே மாதிரியான சம்பளச் சட்டத்தைக் கொண்டு வந்தார்.
- ஜூன் 16 - உலகின் முதலாவது மெண் விண்வெளி வீரர் உருசியாவின் வலண்டீனா டெரெஷ்கோவா வஸ்தோக் 6 விண்கலத்தில் பயனமானார்.
- ஜூலை 26 - யூகொஸ்லாவியாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1,800 பேர் வரை கொல்லப்பட்டனர்.
- அக்டோபர் 1 - நைஜீரியா குடியரசாகியது.
- அக்டோபர் 4 - ஃபுளோரா சூறாவளி கியுபா, Hispaniola ஆகிய இடங்களில் தாக்கியதில் 7,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
- நவம்பர் 2 - தெற்கு வியட்நாம் அதிபர் Ngo Dinh Diem இராணுவப் புரட்சியில் கொல்லப்பட்டார்.
- நவம்பர் 22 - அமெரிக்க அதிபர் ஜோன் கென்னடி கொல்லப்பட்டார்.
- டிசம்பர் 12 - கென்யா விடுதலை அடைந்தது.
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]- ஜனவரி 18 - ப. ஜீவானந்தம், தமிழகத்தின் சுயமரியாதை இயக்கத் தலைவர் (பி. 1907)
- ஜூலை 14 - சுவாமி சிவானந்தர், இந்து சமய அத்வைத வேதாந்த குரு (பி. 1887)
நோபல் பரிசுகள்
[தொகு]- இயற்பியல் - யூஜின் பவுல் விக்னர், மரியா கோயெப்பெர்ட் மேயர், ஆன்சு ஜென்சன்
- வேதியியல் - கார்ல் சீக்லர், கியூலியோ நட்டா
- மருத்துவம் - சர் ஜோன் எக்க்லெசு, அலன் ஹொட்ஜ்கின், ஆன்ட்ரூ ஹக்சிலி
- இலக்கியம் - ஜியோகொசு செஃபெரிசு
- அமைதி - பன்னாட்டு செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கம்,
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]1963 நாட்காட்டி
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Dr Bogle and Mrs Chandler mystery". National Film and Sound Archive of Australia. பார்க்கப்பட்ட நாள் September 7, 2021.
- ↑ "Foreign Relations of the United States, 1961–1963, Volume III". Office of the Historian. பார்க்கப்பட்ட நாள் September 11, 2021.
- ↑ Virginia Thompson (1972). West Africa's Council of the Entente. Cornell University Press. p. 86.