சுயமரியாதை இயக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திராவிட கருத்தியல்

இயக்கங்கள்
சுயமரியாதை இயக்கம்
திராவிட இயக்கம்
திராவிட முன்னேற்றக் கழகம்
அதிமுக
பெரியார் திராவிடர் கழகம்
தேசிய முற்போக்கு திராவிட கழகம்
நபர்கள்
அயோத்திதாசர்
இரட்டைமலை சீனிவாசன்
ஈ. வெ. இராமசாமி
அண்ணாதுரை
கருணாநிதி
எம். ஜி. ஆர்
ஜெயலலிதா
இரா. நெடுஞ்செழியன்
கார்த்திகேசு சிவத்தம்பி
கொள்கைகள்
பகுத்தறிவு
சமத்துவம்
சமூக முன்னேற்றம்
பெண்ணுரிமை
நாத்திகம்
இட ஒதுக்கீடு
அதிகாரப் பகிர்வு
அனைவருக்கும் இலவசக் கல்வி
தொழிற்துறை மேம்பாடு
போராட்டங்கள்
இட ஒதுக்கீடு சார்புப் போராட்டம்
இந்தி எதிர்ப்பு போராட்டம்
ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டம் (1980 கள்)
மொழிகள்
திராவிட மொழிக் குடும்பம்

தொகு

சுயமரியாதை இயக்கம் (self-respect movement) சமுதாயத்தின் பிற்பட்ட மற்றும் பின்தங்கிய, தாழ்த்தப்பட்ட, மக்களின் வாழ்வியல் உரிமைக்காகவும் அவர்களின் மனித சமத்துவத்தை வலியுறுத்துவதற்காகவும் 1925 ஆம் ஆண்டு பெரியார் ஈ வெ இராமசாமி அவர்களால் இந்தியாவின், தமிழக மாநிலத்தில் (அப்போதைய சென்னை இராஜதானி) தொடங்கப்பட்டது.

இவ்வமைப்பு பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுகத்தினரின் சுயமரியாதையை வலியுறுத்தி, வர்ணாசிரம தர்ம தத்துவத்தில் ஊறிய சமூகத்தினிடமிருந்து இவர்களை மீட்டெடுக்கவும், அவர்களை சமுதாயத்தின் மேல்மட்டத்திற்கு உயர்த்தவும் பாடுபட்டது. இவ்வியக்கத்தின் கொள்கை தமிழகத்தில் மட்டுமின்றி மலேசியா, சிங்கப்பூர் மற்றும் சிங்கப்பூர் வாழ் இந்தியர்கள் என்று அனைவரிடமும் பரவியது. சிங்கப்பூரில் தமிழவேள் ஜி சாரங்கபாணி தலைமையில் பரவியது. 1944 ம் ஆண்டு முதல் இவ்வியக்கம் திராவிடர் கழகம் என்று மாற்றப்பட்டு திராவிடர்களின் நலன்களில் அக்கறை கொண்ட கட்சியாகச் செயல்பட்டது.

சுயமரியாதை இயக்கத்திலிருந்து தோன்றிய கட்சிகள்[தொகு]

பின்னாளில் தமிழ் நாட்டில் தோன்றியத் திராவிடக்கட்சிகளான திமுக, அதிமுக கட்சிகள் இதிலிருந்து தோன்றியவையே. இவ்வியக்கம் ஏற்படுத்திய மறுமலர்ச்சியின் பலனாக இவ்வியக்கத்திலிருந்து பிரிந்து சென்ற திமுக 1967 ல் தமிழகத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றியது. அதன் முதல்வராக அறிஞர் அண்ணா என்று எல்லோராலும் அழைக்கப்படும் டாக்டர் சி. என்.அண்ணாதுரை பதவி வகித்தார். நடுவில் அதிமுக , திமுக என மாற்றி மாற்றி ஆட்சிஅமைத்துள்ளன. இன்று வரை அவ்வியக்கத்திலிருந்து தோன்றியக் கட்சிகளே ஆட்சியிலுள்ளது இதற்கு சான்றாகும். தற்பொழுது திமுக வைச் சார்ந்த மு. க. ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக ஆட்சியிலுள்ளார்.

பார்ப்பன எதிர்ப்பு[தொகு]

நெடுங்காலமாகப் பார்ப்பனர்கள் தமிழ்ச் சமுதாயத்தின் அதிகார வர்கத்தின் ஒரு பகுதியினராக விளங்கினர். சமயம், கல்வி, சட்டம், அரசியல், ஊடகம், கலைகள் என பல துறைகளில் இவர்கள் செல்வாக்கு செலுத்தினார்கள். இதனால் இதர சாதி மக்கள் புறக்கணிக்கப்பட்டு பெரும் பாதிப்புக்கு உள்ளாகினார்கள். இதை தீவிரமாக எதிர்த்த பெரியார், சமூக சீர்திருத்தத்துக்கு பெரும் பங்களித்தார். இவரது சமூகப் போராட்டங்களினால் பார்ப்பனர்களின் ஆதிக்க நிலை தளர்ந்தது.

இதனால் பார்ப்பனர்கள் பாதிக்கப்பட்டனர். அவரின் பார்ப்பன எதிர்ப்புக் கொள்கையால் உந்துதல் பெற்ற அவர் தொண்டர்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டன. அன்றைய தமிழக முதலமைச்சர் சக்ரவர்த்தி சி இராஜகோப்பாலச்சாரியரையும் தொண்டர்கள் தாக்க முற்பட்டனர். இச்சம்பவத்தையறிந்த பெரியார் தன் தொண்டர்களைக் கண்டித்ததுடன் அரசியல் வேறுபாடு கருதாமல் இராஜகோப்பாலச்சாரியரிடமும் வருத்தம் தெரிவித்தார்.

சுயமரியாதைத் திருமணங்கள்[தொகு]

இவ்வியக்கத்தினரால் அறிமுகப்படுத்தப்பட்ட திருமண முறை சுயமரியாதைத் திருமணங்கள் எனப்படுகிறது. இன்று அனைவராலும் பின் பற்றப்படுகிறது. இத்திருமண முறை வழக்கமாக பின்பற்றிவரும் பிராமண புரோகிதர், சமஸ்கிருத மந்திரங்கள், தாலி கட்டுதல் போன்ற சடங்குகள் இன்றி எளிமையாக சிக்கனமான திருமண முறையாக இருந்தது. இத்திருமண முறை தற்பொழுது சட்டப்படி செல்லுபடியாகும் திருமண முறையாக திராவிட முன்னேற்றக் கழக அரசால் அறிவிக்கப்பட்டது.

இத்திருமண முறை மூலம் மதமறுப்பு, சாதி மறுப்பு போன்ற கலப்புத் திருமணங்களையும், கைம்பெண் மறுமணம் போன்ற புரட்சித் திருமணங்களையும் நடத்திக்காட்டியது. இதனால் காலங்காலமாக மூடப்பழக்கமாக நடந்து வந்த சாங்கிய சம்பிரதாய முறை மாற்றப்பட்டது. இதனால் தேவையில்லாமல் புரோகிதர்களுக்கு, புரோகிதச் சடங்குகளுக்கு செய்யப்பட்ட பணமும் மிச்சப்பட்டது. இவ்வியக்கத்தினரால் கண் மூடிப்பழக்கங்கள் மண் மூடிப்போயின.

வெளி இணைப்புகள்[தொகு]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுயமரியாதை_இயக்கம்&oldid=3489184" இருந்து மீள்விக்கப்பட்டது