உள்ளடக்கத்துக்குச் செல்

சுப்பராயலு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சுப்பராயலு ரெட்டியார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அகரம் சுப்பராயுலு ரெட்டியார்
சென்னை மாகாணத்தின் பிரதமர்
பதவியில்
டிசம்பர் 17, 1920 – ஜூலை 11, 1921
ஆளுநர்ஃப்ரீமன் ஃப்ரீமன்-தாமஸ் (வில்லிங்டன் பிரபு)
முன்னையவர்பதவி உருவாக்கபட்டது
பின்னவர்பனகல் அரசர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஅக்டோபர் 15, 1855
இந்தியா இந்தியா
இறப்புநவம்பர் 1921 (வயது 66)
சென்னை
தேசியம்இந்தியா
அரசியல் கட்சிநீதிக்கட்சி
தொழில்வழக்கறிஞர்

திவான் பகதூர் மலைய பெருமாள்அகரம் சுப்பராயுலு ரெட்டியார் (1855 – 1921) சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சர் அல்லது பிரதமர்[1] ஆவார். சென்னை மாகாணத்தில் இரட்டை ஆட்சி முறையின் கீழ் நடத்தப்பட்ட முதல் சட்டமன்றத் தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெற்ற பின், மாகாணத்தின் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏழு மாத காலமே பதவியில் இருந்த அவர் ஜூலை 1921 இல் உடல் நலக்குறைவு காரணமாக முதல்வர் பதவியில் இருந்து விலகினார்.[2][3]

பிறப்பும் படிப்பும்

[தொகு]

சுப்பராயுலு ரெட்டியார் 1855 ஆம் வருடம் அக்டோபர் 15 ஆம் நாள் சென்னை மாகாணத்தில், தென் ஆற்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தார். இவரது தாய் மொழி தெலுங்கு. இருப்பினும் தமிழ் மொழி மீது பற்று கொண்டவர், செல்வச் செழிப்பு மிக்க விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் இங்கிலாந்து சென்று சட்டப் படிப்பு படித்தார்.[4][5]

ஆரம்ப கால அரசியல் வாழ்க்கை

[தொகு]

சுப்பராயுலு 1912 ஆம் ஆண்டு கடலூர் மாவட்ட வாரியத்தின் தலைவராகப் பதவி வகித்தார். ஆரம்ப காலத்தில் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராக இருந்த அவர் 1916 ஆம் ஆண்டு காங்கிரசை விட்டு விலகினார். 1917 ஆம் ஆண்டு தென்னாற்காடு மாவட்ட வாரியத்தின் தலைவரானார். தியாகராய செட்டி, டி. எம். நாயர் ஆகியோர் தொடங்கிய நீதிக் கட்சியில் இணைந்தார். வகுப்பு வாரி இட ஒதுக்கீடு கோரி சென்னை ஆளுநர் வில்லிங்டன் பிரபுவுடன் பேச்சுவார்த்தை நடத்த நியமிக்கப் பட்ட நீதிக் கட்சி குழுவில் இடம் பெற்றிருந்தார். இவர் கடலூர் மாவட்டம் மலையபெருமாள் அகரம் எனும் சிறு கிராமத்தில் வாழ்ந்து வந்துள்ளார் இவரதுு இல்லம் இன்னும் இந்த கிராமத்தில் உள்ளது இவரது பெயருக்கு முன்னால் அகரம் எனும் பெற்றுக்கொண்டுள்ளார் அது எதற்காக என்று இன்றைய வரைக்கும் எவராலும் கண்டுபிடிக்கவில்லை இவரது நினைவாக கடலூரில் சுப்பராயலு ரெட்டியார் எனும் பெயரில் ஒரு மண்டபம் உள்ளதாக குறிப்பிடத்தக்கது[6]

இரட்டை ஆட்சி முறையில்

[தொகு]

1919 ஆம் ஆண்டு மொன்டேகு-கெம்ஸ்ஃபோர்ட் சட்ட சீர்திருத்தங்களின் விளைவாக, இந்திய அரசாங்கச் சட்டம் (1919) பிரித்தானிய அரசாங்கத்தால் இயற்றப் பட்டது. இச்சட்டத்தின் விளைவாக, இந்தியாவில் மத்திய அரசிலும், மாகாணங்களிலும், இரட்டை ஆட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வாட்சி முறையில், நிர்வாகத் துறைகள் இரு வகையாக பிரிக்கப்பட்டன. சட்டம், நிதி, உள் துறை முதலிய முக்கிய துறைகள் பிரித்தானிய ஆளுனரின் நிர்வாகக் குழுவின் நேரடிக் கட்டுப்பாட்டிலும், கல்வி, சுகாதாரம், உள்ளாட்சி, விவசாயம், தொழில் முதலியவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அரசவையின் கட்டுப்பாட்டிலும் இயங்கின. சென்னை மாகாணத்தில சட்ட சபை விரிவு படுத்த்தப்பட்டு மொத்தமுள்ள 134 உறுப்பினர்களில் 98 பேர் நேரடி தேர்தலின் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[7][8][9][10]

இம்முறையின் கீழ் சென்னை சட்டமன்றத்திற்கு நவம்பர் 1920 இல் முதல் தேர்தல் நடத்தப் பட்டது. நீதிக்கட்சி பெருவாரியான இடங்களை பிடித்தது. ஆளுனர் வில்லிங்டன் நீதிக்கட்சித் தலைவர் தியாகராய செட்டியை ஆட்சி அமைக்க அழைத்தார். ஆனால் செட்டி தனக்கு பதிலாகத் தன் கல்லூரித் தோழரான சுப்பராயுலுவை பரிந்துரை செய்தார். இதனால் டிசம்பர் 17, 1920 இல் சுப்பராயுலு சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சரானார். கல்வி, சுங்கம், பொதுப் பணிகள் ஆகிய துறைகளுக்கு அவரே அமைச்சரானார். இவரது அமைச்சரவையில் இடம் பெற்ற மற்ற அமைச்சர்கள் பனகல் அரசர் ராமராயநிங்கர் (உள்ளாட்சித் துறை), கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு (வளர்ச்சித் துறை). பதவியேற்ற ஏழு மாத காலத்திற்குள் சுப்பராயுலுவிற்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. எனவே ஜூலை 11, 1921 இல் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு பதில் பனகல் அரசர் முதல்வரானார்.[7][11][12][13][13][14][14][15]

மரணம்

[தொகு]

சுப்பராயுலு ரெட்டியார் நவம்பர் 1921 இல் மரணமடைந்தார்.[16][17][18]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "நடராசன் புகழுடம்பு எய்திய கதை". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-02-01.
  2. Great Britain India Office, India Office (1921). The India Office and Burma Office List. Harrison. p. 77.
  3. "List of Chief Ministers of Tamil Nadu". Government of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 2008-10-20.
  4. Rajaraman, P. (1988). The Justice Party: a historical perspective, 1916-37. Poompozhil Publishers. pp. chapter 5. இணையக் கணினி நூலக மைய எண் 20453430. Archived from the original on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2012-09-23.
  5. Justice Party Golden Jubilee Souvenir. 1968. p. 233.
  6. David Washbrook, Country Politics: Madras 1880 to 1930, Modern Asian studies, 7, 3 (1973) pp.(475-531), Great Britain
  7. 7.0 7.1 S. Krishnaswamy (1989). The role of Madras Legislature in the freedom struggle, 1861-1947. People's Pub. House (New Delhi). pp. 72–83.
  8. "The State Legislature - Origin and Evolution". தமிழ் நாடு அரசு. Archived from the original on 13 ஏப்ரல் 2010. பார்க்கப்பட்ட நாள் 17 December 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  9. "Tamil Nadu Legislative Assembly". Government of India. Archived from the original on 2 ஜனவரி 2010. பார்க்கப்பட்ட நாள் 17 December 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  10. Rajaraman, P. (1988). The Justice Party: a historical perspective, 1916-37. Poompozhil Publishers. p. 206. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  11. Eugene F. Irschick (1969). Political and Social Conflict in South India; The non-Brahman movement and Tamil Separatism, 1916-1929. University of California Press. pp. 178–180.
  12. Saroja Sundararajan (1989). March to freedom in Madras Presidency, 1916-1947. Madras : Lalitha Publications. pp. 329–332.
  13. 13.0 13.1 Ralhan, O. P. (2002). Encyclopaedia of Political Parties. Anmol Publications PVT. LTD. pp. 179–80. பன்னாட்டுத் தரப்புத்தக எண் [[Special:BookSources/8174888659, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788174888655|8174888659, [[பன்னாட்டுத் தரப்புத்தக எண்]] [[Special:BookSources/9788174888655|9788174888655]]]]. {{cite book}}: Check |isbn= value: invalid character (help); Cite has empty unknown parameter: |coauthors= (help)
  14. 14.0 14.1 Myron Weiner, Ergun Özbudun (1987). Competitive elections in developing countries. p. 61. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8223-0685-9.
  15. The Times of India directory and year book including who's who. Bennett & Coleman Ltd. 1922. p. 55. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  16. Justice Party Golden Jubilee Souvenir. 1968. pp. xviii.
  17. Kudiarasu, Chidambaram (2006). Rational Land Revisited. Emerald Publishers. p. 84. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8179661768, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788179661765.
  18. Rajan, P. T. (1973). Sir P. T. Rajan's Eighty Second Birthday Souvenir. p. 178. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுப்பராயலு&oldid=3925018" இலிருந்து மீள்விக்கப்பட்டது