டி. எம். நாயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டி. எம். நாயர்
பிறப்பு ஜனவரி 15, 1868
Flag of Imperial India.svg திரூர், பாலக்காடு, சென்னை மாகாணம்
இறப்பு சூலை 17, 1919(1919-07-17) (அகவை 51)
Flag of the United Kingdom.svgலண்டன், ஐக்கிய ராச்சியம்
பணி மருத்துவர்
அரசியல்வாதி

டாக்டர் தரவத் மாதவன் நாயர் (ஜனவரி 15, 1868 - ஜூலை 17, 1919) நீதிக்கட்சியின் நிறுவனர்களுள் ஒருவராவார். இருபதாம் நூற்றாண்டின் முதல் காற்பகுதியில் சென்னை மாகாணத்தின் முக்கிய அரசியல் தலைவராக விளங்கிய இவர் தமது அரசியல் வாழ்க்கையை இந்திய தேசிய காங்கிரசு உறுப்பினராகத் தொடங்கினார். 1904 முதல் 1916 வரை சென்னை மாநகராட்சியின் உறுப்பினராகப் (திருவல்லிக்கேணி தொகுதி) பணியாற்றினார். சென்னை சட்டமன்றத்தின் உறுப்பினராகவும் பணியாற்றினார். 1916 இல் பிராமணரல்லாத சாதியினரின் நலனுக்காக குரல் கொடுக்க டாக்டர் தியாகராய செட்டியுடன் சேர்ந்து நீதிக்கட்சியைத் தொடங்கினார். 1919 இல் பிரிட்டிஷ் அரசு இந்தியாவிற்கான அரசியல் சீர்திருத்தங்களை பரிந்துரைக்க மொண்டேகு-கெம்ஸ்ஃபோர்டு குழுவை ஏற்படுத்தியது. நீதிக்கட்சி சார்பில் அக்குழுவின் முன்தோன்றி பிராமணரல்லோருக்கு வகுப்புவாரி இட ஒதுக்கீடு வேண்டுமென நாயர் வாதிட்டார். இதற்காக லண்டன் சென்றிருந்த போது அங்கு உடல்நிலை மோசமாகி மரணமடைந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._எம்._நாயர்&oldid=1356839" இருந்து மீள்விக்கப்பட்டது