எடப்பாடி க. பழனிசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எடப்பாடி க. பழனிசாமி
Edappadi K. Palaniswami.png
தமிழக முதல்வர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
14 பிப்ரவரி 2017
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்
முன்னவர் ஓ. பன்னீர்செல்வம்
தொகுதி எடப்பாடி
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் & பொதுப்பணித்துறை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
23 மே 2016
தொகுதி எடப்பாடி
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர்
பதவியில்
16 மே 2011 – 16 மே 2016
முன்னவர் எம். பி. சாமிநாதன்
தொகுதி எடப்பாடி
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில்
19 மார்ச்சு 1998 – 12 அக்டோபர் 1999
முன்னவர் கே. பி. ராமலிங்கம்
பின்வந்தவர் மு. கண்ணப்பன்
தொகுதி திருச்செங்கோடு[1][2]
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
27 சனவரி 1989 – 30 சனவரி 1991
முன்னவர் கோவிந்தசாமி
பதவியில்
24 சூன் 1991 – 12 May 1996
பின்வந்தவர் இ. கணேசன்
தொகுதி எடப்பாடி
தனிநபர் தகவல்
பிறப்பு 12 மே 1954 (1954-05-12) (அகவை 66)
சிலுவம்பாளையம், எடப்பாடி, சேலம், தமிழ்நாடு, இந்தியா இந்தியா
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி அஇஅதிமுக
வாழ்க்கை துணைவர்(கள்) இராதா
பிள்ளைகள் மிதுன் (மகன்)[3]
பெற்றோர் தந்தை: கருப்ப கவுண்டர்
தாயார்: தவுசாயம்மாள்[4][5]
இருப்பிடம் பசுமைவழிச் சாலை, சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணி அரசியல்வாதி[6]
சமயம் இந்து

எடப்பாடி க. பழனிசாமி (Edappadi K. Palaniswami, பிறப்பு: மே 12, 1954)[7] ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் தற்போதைய முதலமைச்சரும் ஆவார்.[8][9] இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சியைச் சேர்ந்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு

இவர் சேலம் மாவட்டம், எடப்பாடி நெடுங்குளம் என்ற சிற்றூரை அடுத்த சிலுவம்பாளையத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். இவர் கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவரது பெற்றோர் கருப்ப கவுண்டர் மற்றும் தவசியம்மாள் ஆகியோர்கள் ஆவர்.[10] இவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பு வெல்ல வியாபாரம் செய்தார்.[11] இவர் இராதா என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு மிதுன் என்னும் ஒரு மகன் உள்ளார்.

தமிழக முதல்வராக

2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் திகதி அன்று உச்சநீதிமன்றம் சொத்துக் குவிப்பு வழக்கில், வி. கே. சசிகலா உட்பட்ட நால்வருக்குத் தண்டனை வழங்கித் தீர்ப்புக்கூறிய நிலையில், அதன் பின்னர் முதல்வராக பதவியேற்றார்.[12] அஇஅதிமுகவின் சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.[13] தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் நூறாவது நாளான மே 22, 2018 அன்று, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் 9 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தால் ஆட்சியர் மீதும், முதலமைச்சர் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் வகித்த பிற பதவிகள்

 • 1989ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியிலிருந்து அ.திமு.க. ஜெ பிரிவில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[14] 1991இல் மீண்டும் அதே தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[15]
 • 2011 ஆண்டு எடப்பாடி தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு,[16] தமிழக அரசின் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராக பணியாற்றினார்.[17]
 • 2016 ஆண்டு தமிழக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இடம்பெற்றார்.

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்

 • இவர் 1998 ஆம் ஆண்டு நடந்த, இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், திருச்செங்கோடு தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிட்டு, வெற்றிபெற்றார்.[18]
 • 1999, 2004 ஆம் ஆண்டுகளில் மக்களவைத் தேர்தல்களில் தோல்வியுற்றார்.[19] 1999இல் மதிமுகவின் கண்ணப்பனிடமும் 2004இல் திமுகவின் சுப்புலட்சுமி செகதீசனிடமும் திருச்செங்கோடு மக்களவை தொகுதியிலேயே தோல்வியுற்றார்.

மேற்கோள்கள்

 1. Thangavelu, Dharani (15 February 2017). "Who is Edappadi K. Palaniswami?". மூல முகவரியிலிருந்து 13 March 2017 அன்று பரணிடப்பட்டது.
 2. "Volume I, 1998 Indian general election, 12th Lok Sabha". மூல முகவரியிலிருந்து 18 July 2014 அன்று பரணிடப்பட்டது.
 3. "2016 TN Assembly Election – Candidate Affidavit". myneta.info. மூல முகவரியிலிருந்து 1 March 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 28 February 2017.
 4. "2016 தமிழக சட்டமன்றத் தேர்தல் - வேட்பாளர் உறுதிமொழிப் பத்திரம்". www.myneta.info. பார்த்த நாள் 28 பெப்ரவரி 2017.
 5. "Edappadi K Palaniswami".ஒன் இந்தியா
 6. Profile, 17 பிப்ரவரி 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது Cite uses deprecated parameter |deadurl= (உதவி)
 7. http://www.veethi.com/india-people/edappadi_k._palaniswamy-profile-10174-19.htm
 8. "தமிழகத்தின் முதல் அமைச்சராக 'எடப்பாடி' கே.பழனிசாமி பதவி ஏற்றார்". பிபிசி. 16 பெப்ரவரி 2017. http://www.bbc.com/tamil/india-38992470. பார்த்த நாள்: 16 பெப்ரவரி 2017. 
 9. http://thinakaran.lk/2017/02/16/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/16509
 10. "புதிய அமைச்சர்கள் வாழ்க்கை குறிப்பு". தினத்தந்தி (2016 மே 29). பார்த்த நாள் 29 மே 2016.
 11. "மந்திரி தந்திரி - 26 !". விகடன். பார்த்த நாள் மார்ச் 3, 2017.
 12. [1]
 13. அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு! - விகடன்
 14. STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1989 TO THE LEGISLATIVE ASSEMBLY OF TAMIL NADU, ELECTION COMMISSION OF INDIA, NEW DELHI
 15. STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1991 TO THE LEGISLATIVE ASSEMBLY OF TAMIL NADU, ELECTION COMMISSION OF INDIA
 16. "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2011". Election Commission of India.
 17. "தமிழக அமைச்சரவை". தமிழக அரசு.
 18. STATISTICAL REPORT ON GENERAL ELECTIONS, 1998 TO THE 12th LOK SABHA VOLUME I
 19. "அரசியலில் எடப்பாடி பழனிச்சாமி கடந்து வந்த பாதை". தமிழ் இந்து. பார்த்த நாள் பெப்ரவரி 15, 2017.

வெளியிணைப்புகள்

அரசியல் பதவிகள்
முன்னர்
ஓ. பன்னீர்செல்வம்
தமிழ்நாட்டு முதலமைச்சர்
பிப்ரவரி 2017-
பதவியில் உள்ளார்
"https://ta.wikipedia.org/w/index.php?title=எடப்பாடி_க._பழனிசாமி&oldid=3104290" இருந்து மீள்விக்கப்பட்டது