கே. பி. ராமலிங்கம்
கே. பி. ராமலிங்கம் | |
---|---|
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் | |
பதவியில் 30 சூன் 2010 – 29 சூன் 2016 | |
பின்வந்தவர் | ஆர். எஸ். பாரதி |
தொகுதி | தமிழ்நாடு |
தனிநபர் தகவல் | |
அரசியல் கட்சி | தி.மு.க. |
பணி | அரசியல்வாதி |
டாக்டர் கே. பி. ராமலிங்கம் (Dr K. P. Ramalingam ) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் சூன், 2010 ஆம் ஆண்டில் இந்திய மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் 1980 மற்றும் 1984 தேர்தல்களில் இராசிபுரம் தொகுதியிலிருந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]
1996 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், திருச்செங்கோடு தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராகப் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]