மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மதிமுக இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
தொடக்கம்மே 6, 1994
தலைமையகம்தாயகம், எழும்பூர், சென்னை
தொழிலாளர் அமைப்புமறுமலர்ச்சி தொழிலாளர் முன்னனி
கொள்கைசமூக சனநாயகம்
கூட்டணிதேசிய சனநாயகக் கூட்டணி (1998-2004, 2014-2014)
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (2004-2008)
மக்களவை உறுப்பினர்கள் எண்.,
0 / 545
தேர்தல் சின்னம்
ம. தி. மு. க தேர்தல் சின்னம்
இணையதளம்
mdmk.org.in

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ( ம. தி. மு. க., Marumalarchi Dravida Munnetra Kazhagam ) தமிழ்நாட்டு அரசியல் கட்சியாகும். 1993 ஆம் ஆண்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வை. கோபால்சாமி நாயுடு உட்பட சிலர் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, வெளியேற்றப்பட்டவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, பேரறிஞர் அண்ணா அவர்களின் கொள்கைகளைக் காப்பதற்காக, ‘மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற புதிய அரசியல் அமைப்பை உருவாக்கினர். 1994 ஆம் ஆண்டு மே 6 ஆம் நாள், சென்னை, தியாகராய நகரில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டடத்தில் கூடிய பொதுக்குழு, புதிய அமைப்பின் கொடி, கொள்கை, குறிக்கோள்களைத் திட்டமிட்டு வகுத்தது.

தேர்தல் பங்களிப்பு[தொகு]

 • 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. சென்னை பனகல் பூங்காவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத் தொடக்க விழாவில், தமது சொத்துக்கணக்கை வெளியிட்டார் வை. கோபால்சாமி. கழகத்தின் தலைமையில் மாற்றத்துக்கான அறிகுறிகள் தென்பட்ட சூழலில், எதிர்பாராத திருப்பமாக, தி.மு.கழகக் கூட்டணி வெற்றி பெறவும், கழகம் தோல்வி அடையவும் நேர்ந்தது.
 • 1998 நாடாளுமன்றத் தேர்தலில், ம.தி.மு.க,. சிவகாசி, பழநி, திண்டிவனம் ஆகிய மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாரதீய ஜனதா கட்சி தலைமையில் கூட்டணி அரசு அமைவதற்கு ஆதரவு அளித்தது.
 • 1999 நாடாளுமன்றத் தேர்தலில், சிவகாசி, பொள்ளாச்சி, திண்டிவனம், திருச்செங்கோடு ஆகிய தொகுதிகளில் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற்றது. இரண்டு அமைச்சர்கள் பொறுப்பு வகித்தனர்.
 • 2004 நாடாளுமன்றத் தேர்தலில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.க. சிவகாசி, பொள்ளாச்சி, வந்தவாசி, திருச்சி ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆட்சியில் பங்கு ஏற்காமல், பிரச்சினைகளின் அடிப்படையில் அரசுக்கு ஆதரவு அளித்தது. பல்வேறு பிரச்சினைகளில் அரசின் செயல்பாட்டைக் கண்டித்து, 2007 ஆம் ஆண்டு, அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்றுக் கொண்டது.
 • 2006 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், வாசுதேவநல்லூர், சிவகாசி, விருதுநகர், திருமங்கலம், தொண்டாமுத்தூர், கம்பம் ஆகிய தொகுதிகளில் ம.தி.மு.க. வெற்றி பெற்றது.
 • 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சியுடனான கருத்து வேறுபாடுகளால் கூட்டணியிலிருந்து விலக நேரிட்டது. இதைத் தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலில் பங்கேற்காமல் இருக்க போட்டியின்றி ஒதுங்கியிருந்தது.
 • தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016 ல் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, இடது கம்யூனிஸ்டு கட்சி, வலது கம்யூனிஸ்டு கட்சி உடன் மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் கூட்டணி அமைத்தது.பின்பு மக்கள் நலக் கூட்டணியுடன் தேர்தல் கூட்டணிக்காக தேமுதிக இணைந்தது.[1]

[2] 2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது.

நாடாளுமன்றத்
தேர்தல் ஆண்டு
தொகுதி தொகுதி தொகுதி தொகுதி
1998 சிவகாசி திண்டிவனம் பழநி
1999 சிவகாசி திண்டிவனம் பொள்ளாச்சி திருச்செங்கோடு
2004 சிவகாசி வந்தவாசி பொள்ளாச்சி திருச்சி
2006 தமிழ்நாடு
சட்டப்பேரவைத் தேர்தல்
சிவகாசி
விருதுநகர்
வாசுதேவநல்லூர்
திருமங்கலம்
கம்பம்
தொண்டாமுத்தூர்

தேர்தல் சின்னம்[தொகு]

சூலை 29, 2010 ஆணையில் இந்தியத் தேர்தல் ஆணையம் மாநிலக் கட்சிக்கான விதிகளை மதிமுக பெறாததால் மதிமுக-விற்கான மாநில கட்சி என்ற உரிமையை பறித்தது. ஆனால் இக்கட்சி பம்பரம் சின்னத்தை இன்னும் ஆறு ஆண்டுகளுக்கு பயன்படுத்தலாம் எனக் கூறியது.[3][4]

முக்கிய மதிமுக அரசியல்வாதிகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. http://www.thehindu.com/elections/tamilnadu2016/dmdk-enters-into-alliance-with-pwf/article8388756.ece
 2. http://www.maalaimalar.com/2015/12/28200741/Political-changes-in-the-makka.html
 3. http://thatstamil.oneindia.in/news/2010/07/31/mdmk-loses-state-party-status-tn-pmk-puducherry.html
 4. http://eci.nic.in/eci_main/ElectoralLaws/PoliticalParties.pdf

வெளி இணைப்புகள்[தொகு]