மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜனநாயக முற்போக்குக் கூட்டணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி (மமுகூ) (Secular Progressive Alliance) ஜனநாயக முற்போக்கு கூட்டணி (ஜமுகூ) (Democratic Pograssive Alliance) 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு தேர்தல் கூட்டணி ஆகும். [1]

கூட்டணி வரலாறு[தொகு]

  • முன்னர் இக்கூட்டணி 2006 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையில் அமைக்கப்பட்ட போது ஜனநாயக முற்போக்குக் கூட்டணி 2006 முதல் 2009 வரையிலும் சட்டமன்ற தேர்தல் கூட்டணியாகவும்.
  • பின்பு 2013 முதல் 2016 வரை திமுக மூன்றாவது அணியாக செயல்பட்டுவந்த போது 2014 நாடாளுமன்றத் தேர்தலில் இக்கூட்டணி திமுக தலைமையில் மீண்டும் செயல்பட்டது.
  • மேலும் இக்கூட்டணி திமுக தலைமையில் 2006 சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2014 நாடாளுமன்றத் தேர்தல் ஆகிய இரண்டு தேர்தல்களை திமுக தலைமையில் சந்தித்து உள்ளது.
  • பின்பு 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி என்ற பெயர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் தலைமையில் அமைந்த இக்கூட்டணியில் பல கட்சிகள் இணைந்து எதிர்கட்சியான ஆளும் அதிமுக கட்சியில் முதலமைச்சர் ஜெயலலிதா மர்ம மரணத்தில் உள்ள உண்மைகளையும் பின்பு ஜெயலலிதா இறப்பிற்கு பிறகு அதிமுக ஆட்சி சட்டப்படி கலைக்கபடாமல் மத்திய பாஜக பிரதமர் நரேந்திர மோடியின் வரைமுறையற்ற அதிகாரத்தால் அதிமுக அரசை பின் நின்று இயக்கி அக்கட்சியின் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் திராவிட சித்தாந்த சுயமரியாதை எஃகு கோட்டையாக உருவாக்கி வைத்திருந்து அதிமுக கட்சியின் தனித்தன்மையை கொச்சைபடுத்தி தமிழ்நாட்டில் ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்ட மக்களுக்கு பல நல்ல திட்டங்களையும், மாநில சுயாட்சி தன்மையையும் நிராகரித்து விட்டு மத்திய அரசின் பிரதமர் மோடியின் வரைமுறையற்ற அதிகார கட்டுப்பாட்டை எதிர்த்தும் அடிமை அதிமுக கட்சியை பின் நின்று இயக்கும் பாஜக தலைமையில் அமைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பல எதிர்கட்சி அணிகளை எதிர்த்தும் மத்திய பாஜக அரசின் மதவாத சக்திகளையும், வரைமுறையற்ற அதிகாரத்தை எதிர்த்தும் திமுக தலைமையில் பல கூட்டணி கட்சிகளோடு இணைந்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியாக உருவானது.

தற்போதைய கூட்டணியின் தேர்தல் நிலவரம்[தொகு]

2016 சட்டமன்ற தேர்தல் மற்றும் அதன் பிறகு நடந்த இடைத்தேர்தல் நிலவரப்படி

சட்டமன்ற உறுப்பினர்கள்

104 / 234


2019 நாடாளுமன்றத் தேர்தல் நிலவரப்படி

மக்களவை உறுப்பினர்கள்

38 / 39

கூட்டணி சந்தித்த தேர்தல்கள்[தொகு]

திமுக தலைமையில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி (ஜமுகூ) / மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி (மமுக)
வரிசை எண் சட்டமன்ற/நாடாளுமன்ற தேர்தல்கள் (ஜமுகூ/மமுகூ) கூட்டணி கட்சிகள்
1 2006 சட்டமன்ற தேர்தல் (ஜமுக)
திமுக+காங்கிரஸ், பாமக, சிபிஐ, சிபிஎம், இயூமுலீ
2 2014 நாடாளுமன்றத் தேர்தல் (ஜமுகூ)
திமுக+விசிக, புதக, இயூமுலீ, மநேமக
3 2021 சட்டமன்ற தேர்தல் (மமுகூ)
திமுக+காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம், இயூமுலீ, மநேமக, கொமதேக, தவாக, ஆபே, மவிக, அபாபி [2]

மேற்கோள்கள்[தொகு]